சர்வதேச தரம்.. மிரள வைக்கும் கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம்! ஸ்டாலினின் பெயர் சொல்லும் சாதனை!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: முதலமைச்சர் விஜய் கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்திருக்கிறார். மொத்த தமிழ்நாடு உற்று நோக்கும் வகையில் இந்த அறிவுலகம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை பெரியார் அறிவுலகம் என்பது, வெறும் புத்தகங்கள் படிக்கும் இடமாக மட்டுமல்லாமல்.. நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் சிந்தனைகளை தூண்டும் ஒரு அதிநவீன அறிவு மையமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Periyar Science Centre

சர்வதேச தரத்தில்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அறிஞர் அண்ணா நூலகம் இன்று வரை எப்படி வியந்து பார்க்கப்டுகிறதோ.. அதுபோல கோவை அறிவுலகமும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயன்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன், சர்வதேச தரத்தில் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது கட்டுமான நிறைவடைந்திருக்கும் நிலையில், அறிவுலகம் திறக்கப்பட்டுள்ளது.

இ-புக்ஸ்

இங்கு அச்சு புத்தகங்கள் மட்டுமில்லாமல், இ புக்ஸ் வாசிப்பதற்காக மட்டும் தனியாக ரூ.5 கோடி ஒதுக்கீட்டில், லட்சக்கணக்கான சர்வதேச புத்தகங்களை கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்புகள் மூலம் அணுகும் வசதியும் இங்கு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியில் கோடிக்கணக்கான புத்தகங்கள் இருந்தாலும்.. மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்ட புத்தகங்கள் பெரும்பாலானவை அச்சில் இல்லாமல் இருப்பது மாணவர்களுக்கும் புத்தக வாசிப்பு வாசிப்பாளர்களுக்கும் பெரிய சிரமமாக இருந்து வந்தது.

இப்படியான புத்தகங்கள் மீண்டும் எப்போது அச்சுக்கு வரும் என்பது தெரியாது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தான் இ-புக்ஸ் வாசிப்பதற்காக ரூ.5 கோடியும் ஒதுக்கீட்டில் சிறப்பு வசதி செய்யப்பட்டிருக்கிறது.

7வது தளத்தில் அதிசயம்

அதேபோல இந்த அறிவுலகத்தின், ஏழாவது தளத்தில் அமைந்துள்ள அறிவியல் மையத்தில் விண்வெளி மற்றும் வானியல் சார்ந்த ஆச்சரியங்களை மாணவர்கள் காட்சி பூர்வமாக கண்டு மகிழ.. அதிநவீன கோளரங்கம் மற்றும் 3டி திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தக வாசிப்பாளர்களின் சிந்தனையை தூண்டும் சரியான வழிகாட்டியாக அரசு இருக்க வேண்டும். அந்த வகையில் தான் மாணவர்களின் அறிவியல் சிந்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த கோளரங்கம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் ஏஆர்விஆர் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை விளக்கும் மற்றும் அனுபவிக்கும் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முனைவோர்களை ஊக்குவிக்க வசதி

அதேபோல ஐந்து மற்றும் ஆறாவது தளங்களில் கோவையின் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்குபேஷன் சென்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு அதிவேக இன்டர்நெட் வசதி, மீட்டிங் ரூம்ஸ் மற்றும் பணிபுரியும் வசதிகள் உள்ளன. இது தவிர யுபிஎஸ்சி? டிஎன்பிஎஸ்சி, வங்கி தேர்வுகள், நீட், ஜேஇஇ போன்ற தேசிய மாநில அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்தியேக பிரிவு உள்ளது. இங்கு அனைத்து முன்னணி பயிற்சி புத்தகங்களும் அமைதியான வாசிப்பு அறைகளும் இருக்கின்றன.

திராவிட இயக்க வரலாறு

அப்படியே இறங்கி நான்காம் தளத்திற்கு வந்தால்.. தமிழ் இலக்கியம், வரலாறு, திராவிட இயக்க வரலாறு என அறிவு சார்ந்த அறிவு புத்தகங்கள் மற்றும் நாளிதழ்கள் பருவ இதழ்கள் இருக்கின்றன. தமிழ் இலக்கிய சூழலை எடுத்துக் கொண்டால்.. பல காஸ்ட்லியான பருவ இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழ் மீது ஆர்வம் கொண்டவர்களால் இந்த பருவ இதழ்களை மாதம்தோறும் செலவழித்து வாங்க முடியாத சூழல் இருக்கும். எனவே இவை அனைத்தையும் ஒரு சேர ஓரிடத்தில் படிக்கும் வாய்ப்புகளை இந்த அறிவுலகம் ஏற்பாடு செய்து தருகிறது.

இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான பிரத்தியேக புத்தகங்கள், அறிவுசார் விளையாட்டுப் பகுதிகள் மற்றும் ஆடியோ, விஷுவல் வசதிகள், வாசகர்கள் தங்கள் சொந்த புத்தகங்களை கொண்டு வந்து படிக்க தனித்தனி இட வசதி கொண்ட பகுதிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்டெம் அறிவியல்

முதல் தளத்தில், கீழடி அகழ்வாராய்ச்சி தளத்தின் மாதிரி மற்றும் அங்கு கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களின் காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவியல் தொழில்நுட்பமும்.. பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த 90க்கும் மேற்பட்ட இன்ட்ராக்டிவ் கற்றல் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஸ்டெம் அறிவியல் பிரிவை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான ஏற்பாடு

தரைத்தளத்தில் சுமார் 6,000 சதுரடி பரப்பிலான அறிவியல் கண்காட்சி அரங்கு மற்றும் வானியல் அதிசயங்களை காணும் அதிநவீன கோளரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் 350 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட கூட்ட அரங்கும் உள்ளது. மிக முக்கியமாக மாற்றுத் திறனாளிகள் எளிதாக அணுகும் வசதி மற்றும் பிரைலி நூலக பிரிவு நூலகம் அமைந்திருக்கிறது. இதில் ஹைலைட் என்னவெனில்.. ஒரே நேரத்தில் 35 பேர் வரை விண்கலத்தில் செல்வது போன்ற உணர்வை தரும் பிரத்தியேக ஸ்பேஸ் சிமுலேஷன் லிஃப்ட் அமைக்கப்பட்டு இருப்பது என்பதுதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+