கோவையில் விஜய் வாகனத்தின் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு! அவிநாசி சாலையில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவுக்காக வந்திருந்த முதல்வர் விஜய், விமான நிலையத்தில் இருந்து காந்திபுரம் வரை சாலை மார்க்கமாக சென்ற போது அவரது வாகனத்தை நோக்கி யாரோ குடிநீர் பாட்டிலை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை காந்திபுரம் பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவுக்காக இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு வந்தார் முதல்வர் விஜய். அப்போது கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவர் காந்திபுரத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது மக்கள் கூட்டம் இருக்கும் பகுதிகளில் எல்லாம் ரோடு ஷோ நடத்தினார். இதையடுத்து திறந்தவெளியில் பாதுகாவலருடன் விஜய் நின்று கொண்டு பொதுமக்களை பார்த்து கையசைத்து கொண்டே வந்தார்.

CM Vijay

வாட்டர் பாட்டில்

உடனே கூட்டத்தில் திடீரென ஒரு வாட்டர் பாட்டில் விஜய் வாகனத்தை நோக்கி பறந்து வந்தது. இதை வாகனத்தின் கீழே இருந்த பாதுகாவலர் லாவகமாக கேட்ச் பிடித்துவிட்டார். விசாரணையில் விஜய்க்கு தண்ணீர் தாகம் எடுக்கும் என்பதால் தண்ணீர் குடிப்பதற்காக யாரோ வீசியது என தெரியவந்தது.

இது போல் மக்கள் அன்பாக வீசும் போது ஆபத்தும் அதிகம் என்பதை மறந்துவிடக் கூடாது. இதே போல் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது வெயிலை சமாளிக்க கூல்டிரிங்க்ஸ் பெட் பாட்டிலை தூக்கி வீசுவது, தர்பூசணி பழத்தை வீசுவது என ரசிகர்கள் அலப்பறை செய்தனர்.

அட்ராசிட்டி

தற்போது முதல்வராகியும் இதே போன்று அட்ராசிட்டிகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய்யின் பாதுகாவலர் மட்டும் அந்த பாட்டிலை கேட்ச் பிடிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் வாகனத்தின் கண்ணாடி உடைந்திருக்கும். இல்லாவிட்டால் யார் மீதாவது பட்டிருக்கும். ரசிகர்கள் இது போல் உணர்ச்சி மிகுந்த செயல்களை செய்யக் கூடாது என்பதே அனைவரின் கருத்து!

பெரியார் அறிவுலகம்

தமிழக பொதுப் பணித் துறை சார்பில் கோவை காந்திரபுரம் நஞ்சப்பா சாலையில் டவுன் பஸ் நிலையம் அருகே உள்ள சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில் 7 ஏக்கர் பரப்பில் ரூ 300 கோடியில் பெரியார் அறிவுலகம் எனப்படும் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது.

1.98 லட்சம் சதுரடி

இந்த கட்டுமான பணிகள் திமுக ஆட்சியில் 2024 இல் தொடங்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நூலகத்தின் தரைதளம் 1.98 லட்சம் சதுரடியில் உள்ளது. மொத்தம் 7 தளங்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ 245 கோடியாகும். புத்தகங்களுக்கு ரூ 50 கோடியும், இந்த புத்தகங்களுக்கு ரூ 5 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது.

மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த நூலக வளாகத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெரியார் நூலக வளாகம் ஏ மற்றும் பி என இரு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

தரைதளம்

தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகமும், 350 பேர் அமரக் கூடிய ஆடிட்டோரியமும், அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம், விண்வெளியை கண்டுகளிக்கும் வகையில் கோளரங்கம், ஸ்பேஸ் லிப்ட் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது.

2ஆவது தளம்

2ஆவது தளத்தில் சொந்தமாக புத்தகம் எடுத்து வருபவர்கள் படிக்க குறிப்பிட்ட இடமும், சிறுவர்களுக்கான நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. 3ஆவது தளத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம், நிர்வாகப் பிரிவு, நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+