புற்றுநோய் 6வது முறையாக திரும்பி வந்தும் கைவிடாத காதல்.. மனைவிக்காக பிரபல நடிகர் செய்த செயல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உண்மையான காதல் என்றால் என்ன என்று யாராவது கேட்டால், பெரிய பெரிய பரிசுகள் கொடுப்பதோ, வார்த்தைகளால் வடை சுட்டு மானே.. தேனே என்று கொஞ்சுவது மட்டும் கிடையாது. வாழ்க்கை நம்மை எந்த அளவுக்கு சோதித்தாலும் நம்முடன் ஒருவராக நின்று அந்த பிரச்சனையை எதிர்கொள்வதுதான் உண்மையாக காதல். அப்படி ஒரு காதலுக்கு உதாரணமாகத்தான் நடிகர் ஷாரிப் ஹாஷ்மி மற்றும் அவருடைய மனைவி நஸ்ரீனின் வாழ்க்கை இப்போது பலருடைய மனதை நெகிழ வைத்திருக்கிறது.

தி பேபிலிமேன் வெப்சீரிஸை பார்த்தவர்களுக்கு ஜேகே கேரக்டரில் நடித்த ஷாரிக்கை நிச்சயம் தெரிந்திருக்கும். திரையில் அவருடைய நடிப்பை பார்த்து ரசித்து இருப்பீர்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் கடந்து வந்த பாதையும், அவருடைய மனைவியுடன் சேர்ந்து சந்தித்த சோதனைகளையும் கேட்டார் இந்த மனிதர் மீது நமக்கு இன்னும் அதிகமான மரியாதை தான் வருகிறது.

காதல் தம்பதி

ஷாரிப், நஸ்ரீன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்திருக்கிறார்கள். ஆனால் என்னதான் காதலித்தாலும் கல்யாணம் என்று வரும்போது கையில் சரியான வேலையோ, வருமானத்திற்கு உறுதியோ இல்லாத போது குடும்பத்தில் பிரச்சனை வருமே அதேபோலத்தான் இருவருடைய குடும்பத்திலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஷாரிப் மாதம் 15,000 ரூபாய் சம்பதிக்காக கூறி குடும்பத்தினரின் மனதை மாற்றி கல்யாணத்திற்கு சம்மதம் வங்கி இருக்கிறார்.

Actor Sharib Hashmi Nasreen Hashmi The Family Man Bollywood News Love Story Inspirational Story

காதல் திருமண போராட்டம்

பிறகு 2003 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் கல்யாணம் செய்து இருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு தெரியாது இனி வாழ்க்கையில் இத்தனை சோதனைகளை சந்திக்கப் போகிறோம் என்று, திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமையவில்லை. ஷாரிக்க்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று ஆசை இருந்திருக்கிறது. அதற்காக அவர் வேலையையும் விட்டுவிட்டார். ஒரு பக்கம் குடும்பத்தை நடத்த வேண்டிய பொறுப்பு, இன்னொரு பக்கம் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவில் இருக்கிறார்.

அந்த நேரத்தில் நஸ்ரீன் தான் தன்னுடைய கணவரின் கனவுக்கு துணையாக இருந்திருக்கிறார். தன்னுடைய நகைகளையும், சொந்த வீட்டையும் விற்கும் அளவிற்கு பொருளாதார சிக்கல்களை இருவரும் சந்தித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் அவர்களுடைய குடும்பத்தினரும் நண்பர்களும் கூட உதவி செய்யாத போதும் இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 10 வருஷம் போராட்டத்திற்கு பிறகு ஷரிப்க்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க தொடங்கினான.

மகிழ்ச்சியான நேரத்தில் கஷ்டம்

குறிப்பாக தி பேமிலி மேன் வெப் சீரிஸில் ஜேகே கேரக்டர் அவருக்கு பெரிய அடையாளத்தை தேடி தந்தது. அந்த காலம் பட்ட கஷ்டங்களுக்கு இப்போது ஒரு வழி பிறக்கிறது என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கை அவர்களுக்கு வைத்திருந்த அடுத்த சோதனை அதைவிட கொடுமையானது. 2018 ஆம் ஆண்டு நஸ்ரீன்க்கு வாய் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஷாரிப்க்கு நல்ல வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த செய்தி அவர்களுடைய வாழ்க்கையை முடக்கி இருக்கிறது.

Actor Sharib Hashmi Nasreen Hashmi The Family Man Bollywood News Love Story Inspirational Story

நோய் பற்றி தெரிந்த நிமிடம்

வாய் புற்றுநோய் என்றால் எல்லோருமே பயந்து விடுவோம், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற குழப்பமும் பயமும் தான் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் இங்கேதான் நஸ்ரீன் மன உறுதியை பாராட்ட வேண்டும். ஹாஸ்பிடலில் அவருக்கு புற்றுநோய் உறுதி செய்ததை கூறி இருக்கிறார்கள், உடனே அதை தன்னுடைய கணவரின் மகிழ்ச்சியை கெடுக்க விரும்பவில்லையாம். காரணம் அன்றைக்கு ஷாரிக் தி பேமிலி மேன் பட குழுவினருடன் மதிய உணவுக்கு செல்ல தயாராக இருந்திருக்கிறார். அவர் சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் இதை நம்ம சொல்ல வேண்டாம் என்று நினைத்து இருந்திருக்கிறார்.

34 வயதில் திடீரென காலமான பிரபல நடிகர்.. திரையுலகில் எதிர்பாராத சோகம்! பின்னணி காரணம்!
அதற்கு பிறகு தான் ஷாரிக்கு தன்னுடைய மனைவியின் உடல்நிலை குறித்து தெரிய வந்திருக்கிறது. அதற்கு பிறகு தன்னுடைய மனைவிக்காக கணவர்தான் துணை இருக்கிறாராம் இப்போது நஸ்ரீக்கு 6வது முறையாக புற்றுநோய் மீண்டும் வந்திருக்கிறது. ஏற்கனவே பலமுறை அறுவை சிகிச்சை மற்றும் ட்ரீட்மெண்ட் செய்திருந்த நிலையில் இந்த முறை நோய் அதிகமாக பரவி இருந்ததாம். அதற்கான சிகிச்சைகள் எடுத்து முடித்த பிறகு சமீபத்தில் அவர்கள் இருவரும் ஒரு யூடியூப் சேனலில் இந்த தகவல்களை பேசி இருக்கிறார்கள். அது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல வருடங்கள் இந்த காதல் தம்பதியை வாழ்த்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+