மகளுக்காக சைந்தவி செய்த செயல்.. மனதை தொட்ட பதிவு.. விவாகரத்துக்கு பிறகு இப்படி ஒரு அழகான பயணம்
சென்னை: பிரபல பின்னணி பாடகியான சைந்தவி தன்னுடைய குழந்தையுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். அதில் தன்னுடைய மகள் அன்வியுடன் இணைந்து கிச்சனில் தங்களது குடும்பத்தின் பாரம்பரியமான ஒரு உணவை சமைத்த அனுபவத்தை அவர் போஸ்ட்டாக ஷேர் செய்திருக்கிறார்.
சைந்தவி பகிர்ந்துள்ள பதிவில், பிரபல ஹோட்டலில் சமையலறைக்குள் சென்று அங்குள்ள சமையல் கலைஞர்களுடன் இணைந்து உணவு சமைக்கும் காட்சிகள் இருக்கிறது. குறிப்பாக தங்களது குடும்பத்தின் பல தலைமுறைகளாக செய்து வரும் ஒரு பாரம்பரிய உணவு வகையை அங்கு சமைத்ததாகவும், அந்த உணவு பின்னர் அந்த ஹோட்டலில் சிறப்பு மேனுவில் இடம் பெற்றதை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், சைந்தவி அந்த பதிவில் கூறி இருக்கிறார்.

பாடகி சைந்தவி பதிவு
மேலும் குடும்பத்துடன் மிகவும் அழகான நேரத்தை செலவிட்டேன். எங்களுக்கு அங்கே சமைத்தது மறக்க முடியாத தருணங்களில் ஒன்று. அந்த உணவு அவர்களின் சிறப்பு மெனுவில் இடம் பிடித்ததை பார்த்தது அதைவிட ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது, தங்களுக்கு மிகவும் அன்பான விருந்தோம்பலை வழங்கியிருக்கும் அந்த ஹோட்டல் நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
மேலும் சில தங்கும் அனுபவங்கள் வெறும் தங்கும் அனுபவங்களாக மட்டும் இருப்பதில்லை. அவை அழகான நினைவுகளாக மாறி விடுகின்றன என்று கூறி இருக்கிறார். தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய மகளுடன் அதிகமாக நேரத்தை செலவிட்டு வரும் சைந்தவி, இப்போது ஒரு ஹோட்டலுக்கு போன சமயத்தில் தான் அங்கு தனக்கு கிடைத்த அனுபவத்தை இந்த பதிவாக பகிர்ந்து இருக்கிறார்.

மகள் பற்றி பெருமிதம்
பாடகி சைந்தவி ஜிவி பிரகாஷ் தம்பதிக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார். ஸ்கூல் படிக்கும்போது நண்பர்களாகவும் பிறகு காதலர்களாகவும் இருந்த சைந்தவியும் ஜிவி பிரகாஷும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2020 ஆம் ஆண்டு அன்வி பிறந்தார். ஆனால் இருவரும் தங்களுடைய 11 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக கடந்த 2024 ஆம் ஆண்டு அறிவித்தனர்.
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல! ஆனால் இப்போதான் சந்தோஷமா இருக்கு.. ரகசியங்களை உடைத்த சைந்தவி.. நெகிழ்ச்சி
தங்களுடைய பிரிவு பரஸ்பர புரிதலுடனும், மரியாதையுடனும் எடுக்கப்பட்ட முடிவு என்றும் இதற்கு வேறு காரணங்களை கற்பனை செய்து பேச வேண்டாம் என்று சைந்தவி அப்போது கூறியிருந்தார். 2025 செப்டம்பர் மாதத்தில் இவர்களுடைய விவாகரத்து சட்டபூர்வமாக உறுதி செய்யப்பட்டது. ஆனால் விவாகரத்திற்கு பிறகு பல நிகழ்ச்சிகளில் சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் இருவருமே கலந்து கொள்கின்றனர். எங்களுக்கு விவாகரத்து ஆனாலும் நாங்கள் நண்பர்கள் தான் என்று இருவரும் சொல்லி இருக்கின்றனர்.

சைந்தவி பேட்டி
அன்வி தன்னுடைய அம்மாவுடன் மட்டுமல்லாமல் அப்பா ஜீவி பிரகாஷுடனும் அடிக்கடி நேரத்தை செலவிடுகிறார். குழந்தை தன் அப்பா வீட்டில் இருக்கும் போது கூட என்ன செய்கிறாள் என்ன நடந்தது போன்ற விஷயங்களை இருவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதாக சைந்தவி கூறி இருந்தார். பொதுவாக சினிமா பிரபலங்கள் பலர் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் ஒரு சிலர் அதில் விவாகரத்து செய்து இருக்கின்றனர். ஆனால் சைந்தவி ஜீவி பிரகாஷ் போன்ற ஒரு சிலர் மட்டும் தான் பிரிந்த பிறகும் மற்றவர்களை பற்றி குறை சொல்லாமல் இருக்கிறார்கள். அதனால் இவர்கள் இருவரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல மரியாதை உடன் இருக்கின்றனர்.
மகளுக்காக ஜிவி பிரகாஷ் செய்யும் செயல்.. சந்தோஷத்தில் பேசிய சைந்தவி.. பாராட்டும் ரசிகர்கள்
சைந்தவி தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர். அடடா மழைடா, பிறை தேடும் உலகிலே, யாரோ இவன் யாரோ இவன், யார் இந்த சாலையோரம் போன்ற பல ஹிட்டான பாடல்களை சைந்தவி பாடி இருக்கிறார். சைந்தவி தற்போது வெளியிட்ட பதிவு குடும்ப சுற்றுலா புகைப்படமாக மட்டும் பார்க்கப்படாமல் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் ஒரு தாயாக மகளுடன் அழகான நினைவுகளை உருவாக்குவதில் அவர் கவனம் செலுத்தி வருவது தெரிகிறது.


Click it and Unblock the Notifications
