ஃபரீனாவால் எங்க வீட்டில் ஒரே சண்டை இணையத்தில் உண்மையை போட்டு உடைத்த நபர்.. ஃபரீனா கேட்ட கேள்வி?
ஐயோ போங்க உங்களால என் வீட்டுல ஒரே சண்டை என ரசிகர் ஒருவர் ஃபரீனாவே பார்த்து கூறி இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடித்து வரும் ஃபரீனா ஆசாத் பற்றி ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை ஃபரீனாவால் தன்னுடைய வீட்டில் சண்டை வருவதாக ரசிகர் வெளியிட்ட பதிவை பார்த்து ஃபரீனா அதிர்ச்சி ஆகி இருக்கிறார்.
வில்லியாக நடித்தாலும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது தற்போது ஃபரீனா ஆசாத் ரசிகர் கொடுத்த விளக்கத்தை பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது.

சின்னத்திரையின் நீலாம்பரி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலின் மூலமாக வெண்பா எனும் கேரக்டரில் ரசிகர்களை மிரட்டி கொண்டிருக்கும் ஃபரீனா, இதற்கு முன்பு சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தில் இருந்தார். தற்போது சின்னத்திரையில் ஒரு நீலாம்பரியாக வலம் வந்து கொண்டிருந்தாலும் இவருடைய கேரக்டருக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்கள் எல்லாமே இவருடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக தான் இவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். என்னதான் ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றினாலும் இவர் கண்டுகொள்வதில்லை.

அதிகரித்த நெகட்டிவ்வர்ஸ்
ஜீ தமிழில் ஒளிபரப்பான அஞ்சறைப்பெட்டி சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது அணியும் ஆடைகளையும் அணிகலன்களையும் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் ஆரம்பத்தில் பாரதிகண்ணம்மா சீரியலில் இவர் நடிக்கும் போது இவர் தான் கதாநாயகி என்று இவருக்கு அதிகமாக ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல இவர்தான் வில்லி என்று தெரிந்ததும் இவருக்கு அதிகமான நெகட்டிவர்ஸ் தோன்ற ஆரம்பித்து விட்டனர்.

கடைசி நேரத்தில் காணவில்லையே
இந்த நிலையில் தற்போது பாரதிகண்ணம்மா சீரியல் முதல் பாகம் இன்றோடு முடிவடைய இருக்கும் நிலையில் இப்ப வரைக்கும் வெளியான ப்ரோமோக்களில் வெண்பாவை காணவில்லையே என்று அவருடைய ரசிகர்கள் அதிகமாக தேடிக் கொண்டிருக்கின்றனர். கடைசி நேரத்தில் வெண்பாவின் என்ட்ரி எப்படி இருக்க போகிறது? வெண்பா என்ன செய்யப் போகிறார்? என்று ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது ஃபரீனா ஆசாத் ஒரு வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் ஒரு பெண்ணுக்கு வன்கொடுமை நடப்பது போன்று அப்போது அந்த பெண் கடவுளாக கடும் கோபத்தில் மாறுவது போன்று அவர் நடித்திருக்கிறார்.

ரசிகரின் வில்லங்கமான பதில்
அம்மன் கெட்டப்பில் சாந்த சொரூபமாகவும், உக்கிரமாகவும், சாதாரண பெண்ணாகவும் உரு மாறும் வெண்பாவை பார்த்து ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் ஒரு ரசிகர் ஒருவர், "ஐயோ போங்க உங்களால என் வீட்டில் ஒரே சண்டை" என்று கருத்து பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்த ஃபரீனா என்ன ஆச்சுங்க? என்று கேட்க, அதற்கு அந்த ரசிகர் பாரதி கண்ணம்மா சீரியலில் உங்களைத்தான் பிடிக்கும்னு சொல்லுவேன். இப்ப பாரதிக்கு நீங்க ஜோடி இல்லை .அதனால் உங்களுக்காகவே நான் சீரியல் பார்ப்பதே நிறுத்தி விட்டேன். அதனால் தான் என்று கூறி இருக்கிறார். இந்த பதிவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications