லீடர் ஷிப்னா என்னன்னு தெரியுமா? என கேட்ட விஜய் சேதுபதி.. சட்டசபை பற்றி பேசி பதிலடி கொடுத்த அட்லீ!
சென்னை: விஜய் சேதுபதி நடித்த பத்தா படம் வரும் அக்டோபர் 2ம் தேதி தேர்தலில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்தது. இதில் அட்லீ பேசியதுதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் லீடர்ஷிப்னா என்னன்னு தெரியுமா? என பேசி இருந்தார். அதற்கு பதிலடி இப்போது அட்லீ சொல்லிவிட்டார் என்று விஜய் ரசிகர்கள் அட்லியை கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த வார சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் தலைவராக இருந்து ரிசைன் செய்த ஷாதிகாவிடம் லீடர்ஷிப்னா என்னனு தெரியுமா? லீடர்ஷிப்னு என்னென்ன புரியாம வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு பிறகு பிரச்சனை வரும்போது எதிர்கட்சி மீது பழியை தூக்கி போட்டு ஓடுவது லீடர்ஷிப் கிடையாது என்று பேசி இருந்தார். உடனே நெட்டிசன்கள் இது விஜய்யை தான் தாக்கி பேசி விட்டார் என்று விஜய் சேதுபதியை கலாய்க்க தொடங்கி விட்டனர்.
விஜய் சேதுபதி பேச்சு
பல பிரபலங்களும் இவருக்கு எதிராகவே பேசி வந்தனர். இந்த நிலையில் நேற்று பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் விஜய் சேதுபதி தனக்கு விஜய் போன் செய்து பேசிய பழைய நினைவுகளை எல்லாம் பேசியிருந்தார். விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி அட்ரஸ் பண்ணவே இல்லை. இதை கவனித்துக் கொண்டிருந்த அட்லி அதற்குப் பிறகு பேச தொடங்கினார்.
அட்லீ பேச்சு
அப்போது விஜய் அண்ணாவால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறேன். என்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமே விஜய் அண்ணாதான். அவர் எனக்கு எப்போதும் அண்ணா என்று விஜய் மீது தனக்கு இருக்கும் அன்பை மழை போல பொழிந்து கொண்டிருந்தார். கடைசியில் விஜய் சேதுபதிக்கு பதிலடி கொடுக்கிற மாதிரி ஒரு சலவை தொழிலாளி கழுதை மீது துணியை ஏற்றுக்கொண்டு போகும்போது ஊர்காரர்கள் இரண்டு விதமாக பேசுவதைப் பற்றியும் கூறினார்.

இதுதான் பதிலடியா
பிறகு சட்டசபை நிகழ்வுகளை இன்றைய இளைஞர்களும் குழந்தைகளும் கவனிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் விஜய் அண்ணாதான். அவர் ஒரு வலிமையான அரசியலை உருவாக்குகிறார். இதற்கு முன்பு எனக்கு அரசியலைப் பற்றி எதுவும் தெரியாது. நான் அதை கவனிப்பதும் கிடையாது. அரசியல் கருத்து பேச வேண்டாம் என்று எல்லோரும் நினைப்பார்கள் ஆனால் அது தவறு என்று விஜய் அண்ணா நிருபித்து விட்டார். சோசியல் மீடியாவில அவரு அவரை சொல்றாரு... இவரு இவரை சொல்றாரு என்று என்னென்னமோ பேசுவாங்க. அதெல்லாம் ஒன்னும் இல்ல. எது சொல்லனுமோ அதை நேராக சொல்லிக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கேமரா முழுக்க விஜய் சேதுபதியை காட்டுகிறது. விஜய் சேதுபதி அதுவரைக்கும் சிரித்துக்கொண்டிருந்தாலும் இந்த விஷயம் நடந்து கொண்டிருக்கும் போது முகத்தை இறுக்கமாக வைத்தபடி அட்லீ பேசுவதையே கவனித்துக் கொண்டு இருந்தார்.
இந்த வீடியோக்கள் தான் இப்போ சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஒரு விதத்தில் ரசிகர்கள் அட்லியை பாராட்டுகின்றனர். ஆரம்பத்திலிருந்தே விஜய்க்கு சப்போர்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் விஜய் சேதுபதிக்கு இது தேள் கொட்டன மாதிரி என்றும் சிலர் கிண்டல் செய்து வருகின்றனர். விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சிகள் பேசியது பத்தா படத்திற்கு நெகட்டிவாக போய்விடும் என்பதற்காகவே இப்போ அட்லி விஜய் சேதுபதியை இப்படி நிகழ்ச்சியில் அசிங்கப்படுத்துகிறாரா? என்றும் கேள்விகள் வருகிறது.
விஜய் எனக்கு போன் பண்ணுனாரு.. நடந்தது இதுதான்! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி
எது எப்படியோ அக்டோபர் 2ம் தேதி விஜய் மகன் இயக்கிய சிக்மா படமும் வெளியாகிறது. அதே நாளில் விஜய் சேதுபதி படமும் வெளியாகிறது. இப்போது விஜய் சேதுபதி பேசியது அவருக்கு நெகட்டிவாக போயிருந்தாலும் அட்லி இந்த படத்தின் தயாரிப்பாளராக விஜயை புகழ்ந்து பேசி இருப்பதால் விஜய் ரசிகர்கள் விஜய் சேதுபதியை மன்னித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications
