விஜய் எனக்கு போன் பண்ணுனாரு.. நடந்தது இதுதான்! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் லீடர்ஷிப் பற்றி பேசியது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று விஜய் சேதுபதியின் பத்தா இசை வெளியிட்டு விழாவில் விஜய் தனக்கு போன் செய்தது குறித்து பேசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பத்தா திரைப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படமும் வெளியாக இருக்கிறது. இந்த 2 படங்களுக்கும் நேற்று ஒரே நாளில் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்று வருகிறது. அப்போது விஜய் சேதுபதி விஜய் பற்றி பேசுவார் என்று எல்லோருமே எதிர்பார்த்ததுதான். காரணம் போன வாரம் முழுக்க நடந்த சம்பவம் அப்படி.

Vijay Sethupathi Vijay

விஜய் சேதுபதி சர்ச்சை பேச்சு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி லீடர்ஷிப்பை பற்றி பேசியதும் விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் அவர் தற்போதைய அரசியல் நடைமுறையை தான் மறைமுகமாக கலாய்ந்து அப்படி பேசி விட்டார் என்று சொல்லி வந்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் விஜய் சேதுபதிக்கு எதிராகவே பேச தொடங்கிவிட்டனர். விஜய் சேதுபதி அரசியல் கருத்து பேச வேண்டும் என்றால் நேரடியாக பேச வேண்டும் அதை விட்டுவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் லீடர்னா என்னன்னு தெரியாமல் வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு தன்னிடம் கேள்வியோ பொறுப்போ வரும்போது எதிர்க்கட்சி மீது பழியை போட்டுவிட்டு ஓடக்கூடாது என்று விஜய் சேதுபதி சொல்லிவிட்டாரே என்ற பலரும் சொல்லி வந்தனர்.

இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் சனிக்கிழமை எபிசோட்டில் விஜய் சேதுபதி இதற்கு விளக்கம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. காரணம் விஜய் டிவி சார்பில் மட்டும்தான் இந்த சர்ச்சைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விஜய் சேதுபதி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் இப்போ ஆடியோ லாஞ்சில் விஜய் பற்றி விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.

விஜய் சேதுபதி விளக்கம்

விஜய் போட்டோ ஸ்கிரீனில் வந்ததுமே ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். விஜய் சேதுபதி என்னதான் சொல்லப் பகிறார் என்று எதிர்பார்ப்போடு இருந்தனர். அப்போது அவர், விஜய் எனக்கு ரொம்ப பிடிக்கும். சர்க்கார் படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஜேசன் சஞ்சய் பிறந்தநாளுக்கு நான் வாழ்த்து சொன்னேன். உடனே அவர் எனக்கு போன் பண்ணுனாரு. நீங்க வாழ்த்து சொன்னதை கேட்டு ஜேசன் ரொம்ப சந்தோஷப்பட்டான் என்று சொன்னாரு.

விஜய் போன் பண்ணி சொன்னது

எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அன்னைக்கு ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். அதற்குப் பிறகு நான் ஜேசனுக்கு போன் செய்து, எப்படி டா என்னை உனக்கு பிடிச்சு? உங்க வீட்டிலேயே ஒரு பெரிய ஆளை வச்சிருக்க.. என்று கேட்டேன் அதற்கு அவனும் சிரித்தபடியே பேசிக்கொண்டு இருந்தான். அதுபோல இன்று ஜேசன் இயக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்குது. எனக்கு சந்தோசம் தான். அந்த படத்தை அவர் இயக்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே போய் பார்க்க போயிருந்தேன்.

சூட்டிங் ஸ்பாட்டில் சந்திப்பு

அங்கு ஒரு மணி நேரம் ஜேசனிடம் பேசிட்டு தான் வந்தேன். அந்த சமயத்தில் ஜனநாயகனில் என் கூட இருக்கிற ஒருவர் நடித்துக் கொண்டிருந்தார். அவர் விஜய் சார் கிட்ட போய் சொல்லி இருக்கிறார். அப்போ அவர் இறுக்கமாக கட்டிப்பிடித்து இதை விஜய் சேதுபதிக்கு கொடுத்திடு என்று சொல்லி அனுப்பி இருக்கிறார். இப்படித்தான் எங்களுக்குள்ள பழக்கம் இருக்கிறது என்று விஜய் சேதுபதி சொல்லி இருக்கிறார்.

ரசிகர்கள் கருத்து

ஆனால் எந்த இடத்திலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் விஜய் பற்றி பேசவில்லை என்று அவர் விளக்கம் கொடுக்கவில்லை என்றாலும் எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது நீங்கதான் கதைக்கட்டி வரிங்க என்று சொல்வது போலத்தான் இருக்கு என விஜய் சேதுபதி ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். சரி..., படம் வேற ரிலீஸ் ஆகும் சமயத்தில் விஜய் ரசிகர்களை எதிர்க்க வேண்டாம் என்று விஜய் சேதுபதி இப்படி இறங்கி விட்டாரா? என்று வழக்கம் போல விஜய் ரசிகர்கள் இதை கலாய்த்தும் வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+