
பழைய நிலைக்கு திரும்பிய ஆலியா நடிக்கும் புது சீரியல் ரகசியங்கள்.. இணையத்தில் லீக்கான தகவல்கள்
சென்னை: நடிகை ஆலியா மானசா இடைவெளிக்கு பிறகு மீண்டும் சன் டிவியில் சீரியலில் நடிக்க இருக்கிறார் இந்த நிலையில் அவருடைய புது சீரியலை பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
இதுவரைக்கும் விஜய் டிவியில் நடித்து வந்த ஆலியா மானசா முதல் முறையாக சன் டிவியில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே அவருடைய கனவரான சஞ்சீவும் சன் டிவி சீரியலில் நடிக்க இருக்கும் நிலையில் ஆலியாவின் புது சீரியலுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
இனியாவுக்கு சாதகமாக மாறிய கோபி... அதிர்ச்சியில் ராதிகா செய்த செயல்.. பாக்யாவின் எதிர்பாராத முடிவு

காரணம் இவர்தான்
சன் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான ஆலியா மானசா முதல் சீரியலிலே யார் எதிர் பார்க்காத அளவில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். அதுவும் குறிப்பாக "சின்னையா" என்று இவர் அழைத்து சமூக வலைத்தளத்தில் அதிகமாக கலாய்க்கப்பட்டு வந்தாலும் அதுவே இவருடைய அடையாளமாக மாறிவிட்டது. தற்போதைய பல சீரியல்களில் பல கதாநாயகிகள் கணவரை சார் என்று அழைப்பதற்கு காரணம் இவர்தான் என்று இப்ப வரைக்கும் ரசிகர்கள் இவரை திட்டி வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த செம்பா
செம்பா கேரக்டரில் ராஜா ராணி முதல் பாகத்தில் நடித்தார் என்று சொல்வதை விடவும் கேரக்டராக மாறி இருந்தார். அதனாலே அவர் ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண் ரசிகர்களின் மத்தியிலும் அதிகமாக பிரபலம் அடைந்து விட்டார்.ராஜா ராணி முதல் பாகத்தில் ஆலியா மானசாவோடு கதாநாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்த திருமணம் செய்து கொண்டார். முதல் சீரியலில் திருமணம் முடிந்த நிலையில் அவருக்கு திருமணத்திற்கு பிறகு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ராஜா ராணி சீசன் 2வில் சந்தியா கேரக்டரில் நடித்து வந்தார்.

சன் டிவியில் அறிமுகம்
இந்த நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமான ஆலியா மானசா அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். பின்பு அவருக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சீரியலில் நடிப்பதற்காக கடினமான உடற்பயிற்சிகளை செய்து பழைய நிலைக்கு மாறி இருக்கிறார். இந்த நிலையில் இதுவரைக்கும் ஆல்யா மானசா எந்த சேனலில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் தெளிவாக தெரியாமல் இருந்த நிலையில் தற்போது உறுதியாக சன் டிவி சீரியலில் நடிக்க இருப்பதாக கூறியிருந்தார்.

எல்லாமே எதிர்பார்ப்பு தான்
அதைத்தொடர்ந்து தற்போது ஆல்யா மனசா சன் டிவியில் வரப்போகும் இனியா என்ற சீரியலில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இலக்கியா என்ற சீரியல் இப்போது தான் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் அதே வரிசையில் இனியா என்கிற பெயரில் ஆலியா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்ற கேள்விகள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக கேட்கப்பட்டு வருகிறது .அதை குறித்து எந்த தகவலையும் கூறாவிட்டாலும் ஆலியா மானசா இந்த சீரியலில் கல்லூரி மாணவியாகவோ அல்லது ஆபீஸில் ஒர்க் செய்யும் பெண்ணாகவோ தான் நடிக்க இருக்கிறாராம். காரணம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படங்களில் இவர் ஐடி கார்ட் போட்டிருப்பதை பார்ப்பதற்கு காலேஜ் பெண் போல தோற்றமளிக்கிறார்.இதனாலே ரசிகர்கள் இந்த சீரியலுக்கு மிகுந்த ஆர்வமாக இருப்பதாக கூறி வருகின்றனர் .இந்த நிலையில் இந்த சீரியல் எந்த நேரத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது பலரும் எதிர்பார்க்கும் ஒரு கேள்விதான். அது அதிகபட்சமாக 9:00 மணியாகத்தான் இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. காரணம் ரோஜா சீரியல் விரைவில் முடிவடைய இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அதே நேரத்தில் ஒளிபரப்பாகலாம் என பலர் எதிர்பார்த்து வருகின்றனர்.