Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சில்லுவண்டு விஜய் மீது ஏறி விளையாடுது.. சத்யராஜ், அமீரை பார்த்தீங்களா? தவெக இதை செய்யணும்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்க்கு இது ஒரு மிகப்பெரிய அரசியல் பாடம்.. யாராக இருந்தாலும், கடுமையான சோதனை வரும்போது, அதை எதிர்கொள்ள துணிந்தால், உச்சநிலைக்கு சென்றுவிடுவார்கள்.. அந்தவகையில், விஜய்யும் மிகப்பெரிய அரசியல்வாதியாக மாறிவிடுவார். எனவே உடனடியாக களத்தில் இறங்கி, கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக சந்திப்பதுதான் சரியான விஷயம்" என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

cheyyaru Balu Official என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "சினிமாக்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்க துவங்கியிருக்கிறார்கள்.. சத்யராஜ் முதல் பிக்பாஸ் நடிகர் வரை எதிரான கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.. யானை படுத்துவிட்டால், சில்லுவண்டுகள் ஏறி விளையாடும் என்பார்கள்.. அப்படியாகிவிட்டது நிலைமை.

sathyaraj ameer vijay

சில்லுவண்டுகள்

விஜய் விரைவில் நீதிமன்ற அனுமதியுடன் கரூர் செல்லவிருப்பதாகவும், 41 குடும்பங்களை சந்தித்து பேசப்போவதாகவும், தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன..

கரூர் விவகாரம் தொடர்பாக, ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.. மற்றொருபக்கம் மத்திய அரசு எம்பிக்கள் அனுப்பி விசாரித்தது.. இப்படி விசாரணைகள் நடந்துவரும்போது, கரூர் எம்எல்ஏ செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியது எந்த வகையில் நியாயம் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்புகிறார்.. அதேபோல, அரசு அதிகாரிகளும் செய்தியாளர்களும் சந்தித்து பேசுகிறார்களே? இது எந்தவிதத்தில் நியாயம்?

அப்படியானால் கமிஷனுக்கான மதிப்பு என்ன? அவர்கள் தரப்போகும் ரிப்போர்ட்களும் நீர்த்துப்போய்விடுமே? என்றெல்லாம் காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பாஜக கண்ட்ரோலில் விஜய்

அதேபோல விஜய்யை பாஜக கையில் எடுத்து கொண்டதாகவும், கொள்கை எதிரி என்று சொன்ன பாஜகவின் கண்ட்ரோலில், விஜய் சென்றுவிட்டதாகவும் யூகங்களாக செய்திகள் பரவி வருகின்றன..

எம்ஜிஆர் வழியில், பெரியாரின் கொள்கைகளை பல வருட காலம் பின்பற்றி வருகிறார் சத்யராஜ்.. கடவுள் மறுப்பு கொள்கையில் இன்னும் தீவிரத்தை மேற்கொண்டு வருகிறார்.. அப்படியிருக்கும்போது, நடிகர்கள் அரசியலுக்கு லாயக்கற்றவர்கள், நடிகர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என்று சத்யராஜ் சொல்லி உள்ளார்.

நடிகர் சத்யராஜ், பேரரசு

இந்த கருத்துக்கு பேரரசு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுவே எம்ஜிஆர் இருந்திருந்தால், சத்யராஜ் இப்படி சொல்லியிருப்பாரா? எம்ஜிஆர் இருக்கும்போது, இப்படி சத்யராஜ் சொல்ல வேண்டியதுதானே? நடிகர் கமலுக்கு ஒண்ணும் தெரியாது, அவருக்கு ஏன் எம்பி பதவி கொடுத்தீர்கள் என்று நீங்கள் திமுகவிடம் கேட்டிருக்க வேண்டும்" என்றெல்லாம் பேரரசு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கட்சியில் உழைத்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது, அவர்களின் மகளுக்கெல்லாம் பதவி கொடுக்காமல் ஒரு நடிகனாகிய சத்யராஜ் மகளுக்கு ஏன் பதவி கொடுத்தீர்கள் என்று நீங்கள் திமுகவிடம் கேட்க வேண்டும்" என்றும் பேரரசு கேட்டுள்ளது நியாயமான கேள்வியாகவே உள்ளது.

திருமாவளவன், அமீர்

விஜய் மீது ஏன் வழக்கு பதியவில்லை என்று திருமாவளவனும் கேட்கிறார்.. விஜய்க்கும், பாஜகவுக்கும் உறவு இருப்பதாக சொன்ன திருமாவளவன், திமுகவுக்கும், தவெகவுக்கும் ரகசிய உறவு இருப்பதாக இப்போது சொல்லிவிட்டார்..

இயக்குனர் அமீரும் தன்னுடைய வாட்ஸ்அப்பில், நடிகர்கள் நலத்திட்ட உதவிகளை தந்தால் பெற்றுக்கொள்ளுங்கள், அதற்காக நாட்டையே தூக்கி நடிகர்களுக்கு தந்துவிடாதீர்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.

இப்படியான குற்றச்சாட்டுகள் விஜய் மீது விழுந்த வண்ணம் உள்ளது.. கரூர் சம்பவம் நடந்து ஒரு வாரமாகிறது.. எப்போதுமே ஒரு தலைவர் ஒரு நிகழ்வுக்கு வருகிறார் என்றால், அதற்கு முன்பாகவே கட்சியிலுள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள்,
நிகழ்ச்சி ஏற்பாடுகளையும், சம்பந்தப்பட்ட மக்களையும் முன்கூட்டியே சந்தித்து ஏற்பாடுகளை செய்வார்கள்..

இரண்டாம் கட்ட தலைவர்கள் எங்கே

அந்தவகையில் தவெக இப்போதுதான் வளர்ந்து வருகிறது என்றாலும், விஜய் தயவுசெய்து அனுபவசாலிகளையும், பல கட்சிகளில் பழம் தின்று கொட்டை போட்டவர்களையும், பல கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட தலைவர்களையும், முன்னாள்களையும் தன்னுடன் முன்கூட்டியே வைத்திருக்க வேண்டும்.

அப்படி வைத்திருந்தால் இந்நேரம் விஜய்க்கு பெரிய சப்போர்ட்டாக அவர்கள் இருந்திருப்பார்கள்.. இதுவரை விஜய்யை தேடி அப்படி யாருமே வரவில்லையா? ஒருவேளை வந்தவர்களை தன்னுடன் வைத்து கொள்ளவில்லையா? அப்படி அவர்களை வைத்து கொள்வதால், தனக்கான அதிகாரம் பறிக்கப்படும் என்று பயந்துள்ளனரா? என்று தெரியவில்லை.

ஆனால், விஜய்க்கு இது ஒரு மிகப்பெரிய அரசியல் பாடம்.. யாராக இருந்தாலும், கடுமையான சோதனை வரும்போது, அதை எதிர்கொள்ள துணிந்தால், உச்சநிலைக்கு சென்றுவிடுவார்கள்.. அந்தவகையில், விஜய்யும் மிகப்பெரிய அரசியல்வாதியாக மாறிவிடுவார். எனவே உடனடியாக களத்தில் இறங்க வேண்டும்.. கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக சந்திப்பதுதான் சரியான விஷயம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+