CWC நடுவர்கள் இனி எந்த சேனலுக்கு போகிறார்கள்? இதற்காகத்தான் விஜய் டிவியை விட்டு போனாங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவர்களாக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்.

இதனால் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் இனி எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் இது குறித்து இணையத்தில் அதிகமான கமெண்ட்களும் குவிந்து வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Which channel are the Cook with Komali judges going to next?

அந்த வகையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் புதியது புதியதாக நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து வருகிறார்கள். வேறு மொழிகளில் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை கூட விஜய் டிவி நிகழ்ச்சி சேனலில் புது பொலிவோடு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதை பார்க்க முடியும். இந்த வகையில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கியது.

முதல் சீசன் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டது. இதில் சமைக்கத் தெரியாத கோமாளிகளும் சமைக்க தெரிந்த பிரபலங்கள் குக்குகளாகவும் இருக்கின்றனர். அதுபோல இதுவரைக்கும் ஸ்ட்டான செஃப்பாக பல நிகழ்ச்சிகளில் பார்த்து வந்த வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் காமெடியான நடுவர்களாகவும் இருந்தனர்.

இதனாலேயே குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருடைய மனக்கவலையை குறைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. ரசிகர்கள் மத்தியிலும் இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் வரவேற்பு இருந்தது. இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று ஒவ்வொரு சீசன் முடிவடைந்ததுமே ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருவார்கள். அந்த வகையில் சமீபத்தில் நான்கு சீசன்கள் முடிவடைந்து விட்டது ஆனால் ஐந்தாவது சீசன் இன்னும் தொடங்கப்படவில்லை.

Which channel are the Cook with Komali judges going to next?

இதனால் இணையத்தில் இந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெங்கடேஷ் பட் அதிரடியாக ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதில் தான் இந்த சீசனில் இருந்து வெளியேற போவதாகவும் கூறி இருந்தார். அதை தொடர்ந்து இன்னொரு வீடியோவும் வெங்கடேஷ் வெளியிட்டு இருந்தார். அதில் தான் மட்டுமல்லாமல் தன்னோடு செஃப் தாமுவும் வரப்போகிறார் எங்களுடைய கூட்டணியை நீங்கள் இன்னும் ஒரு பெரிய நிகழ்ச்சியில் பார்க்கப் போறீங்க என்றும் சொல்லியிருந்தார்.

இப்படியான நிலையில் இணையத்தில் இவர்கள் இருவரும் சன் டிவியில் புதியதாக தொடங்கப்படும் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்து அதிகாரப்பூர்வமாக வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு இருவரும் பேசவில்லை.

Which channel are the Cook with Comali judges going to next?

ஆனாலும் வெங்கடேஷ் பட் வெளியிட்ட வீடியோவிற்கு கீழே அதிகப்படியான கமெண்ட்கள் இவர்கள் சன் டிவியில் புதியதாக தொடங்க இருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று கூறி வருகிறார்கள். ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். பொதுவாக இந்த மாதிரி பிரபலங்கள் கருத்து தெரிவிக்கும் போது அது பற்றி இணையவாசிகள் சொல்வது தான் கடைசியில் நடந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+