கயல் சீரியல் கொடுமை.. அரண்மனை 4 தமன்னாவுக்கு டப் கொடுக்கிறாங்களே.. இதையாவது செஞ்சிருக்கலாம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயலின் அம்மா காமாட்சி விஷம் குடித்த பிறகும் இரண்டு வாரமாக மகளின் என்கேஜ்மெண்டில் சுற்றிக் கொண்டிருந்தது தான் ரசிகர்களை அதிகமாக விமர்சிக்க வைத்திருக்கிறது. இதை வைத்து ரசிகர்கள் இவங்க அரண்மனை தமன்னாவை மிஞ்சிருவாங்க போல என்று கலாய்த்து விடுகிறார்கள். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இரண்டு இடங்களுக்குள் பிடித்து விடுகிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். அதுபோல கதாநாயகனாக நடிகர் சஞ்சீவ் (நடிகை ஆலியா மானசாவின் கணவர்) நடித்து வருகிறார். அதுபோல இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பிடித்து இருக்கிறது.

பொதுவாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுகிறது. அதிலும் பிரைம் டைம் சீரியலுக்கு சொல்லவே வேண்டாம். அதுபோலத்தான் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலும் ஆரம்பத்திலேயே அதிகமான ரசிகர்களை கவர்ந்து விட்டது. வீட்டின் மூத்த மகள் கயல் மொத்த குடும்பத்தையும் தாங்கி நிற்கிறார்.
தன்னுடைய குடும்பத்திற்காக பல போராட்டங்களையும் சவால்களையும் சந்திப்பதை வைத்து இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். ஆனாலும் இந்த சீரியலில் கதை சில மாதங்களாகவே இழுத்து கொண்டு இருப்பதாக ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள். ஏற்கனவே இந்த சீரியலில் பல லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது. சீரியல் கதாநாயகியே தன்னுடைய தங்கை கொலை செய்வதை மறைத்து விடுகிறார்.

தன்னுடைய தம்பி போதைப் பொருள் கடத்தினாலும் அவரையும் போலீஸிடமிருந்து தப்பிக்க வைத்து விடுகிறார். என்னதான் கதாநாயகியாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தினர் தப்பு செய்தால் மட்டும் அது தப்பு கிடையாதா? அடுத்தவர்கள் தப்பு செய்தால் மட்டும் தான் கதாநாயகி தட்டி கேட்பாரா? என்பது பலருடைய வாதமாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இப்போது இந்த சீரியல் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.
அதற்கு காரணம் இந்த சீரியலில் பல போராட்டங்களுக்கு பிறகு கயல் உடைய எங்கேஜ்மென்ட் நடைபெறுகிறது. ஆரம்பத்திலிருந்து கயலை எழில் ஒருதலையாக காதலித்து வந்து நிலையில் ஒருவழியாக எழில் தன்னுடைய காதலை கயல் இடம் சொல்லி இப்போது எங்கேஜ்மென்ட்க்கு வந்திருக்கின்றனர்.

ஆனாலும் கமலுக்கு அவருடைய சொந்த குடும்பத்திற்குள்ளேயே பல எதிரிகள் இருக்கிறார்கள். ஒரு பக்கம் பெரியப்பா குடும்பத்தினர் கயல் நல்லா இருக்கக் கூடாது என்று சதி செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் எழிலின் அம்மாவும் கயலை எழில் திருமணம் செய்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு பிரச்சனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் எழில் அம்மாவும் இவர்களுடைய எங்கேஜ்மென்ட் நிறுத்த வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் புதியதாக வில்லி ஒருவரும் அறிமுகமாகி இருக்கிறார். அவர் கயலின் அத்தை என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் வில்லி செய்த சதியால் காமாட்சியம்மா அதாவது கயலின் அம்மா விஷம் குடித்து விடுகிறார்.

ஆனால் தன்னுடைய மகள் எங்கேஜ்மென்ட் நடக்க வேண்டும் என்பதற்காக தான் விஷம் குடித்து விட்டதையும் யாரிடமும் சொல்லாமல் மண்டபத்தில் அங்கே இங்கே வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் அவர் ரத்த வாந்தி எடுப்பதை யாராவது பார்த்துவிட்டால் உடனே அவர்களிடம் சத்தியம் ஒன்று வாங்கி விடுகிறார். யாரும் கயிலிடம் என்னுடைய நிலைமையை பற்றி சொல்ல கூடாது.. என்னுடைய மகளுக்கு எங்கேஜ்மென்ட் முடிய வேண்டும் என்று சென்டிமென்டாக பேசிக் கொண்டிருக்கிறார்.
இதை பார்க்கும் போது கண்டிப்பாக விவேக் பட காமெடி எல்லோருக்கும் நினைவு வந்திருக்கும். ஒவ்வொரு நாள் எபிசோட் இன்னும் காமாட்சி பிழைப்பாளா இல்லையா என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனாலும் இப்படியே இரண்டு வாரங்கள் தாண்டிவிட்ட நிலையில் நேற்றைய எபிசோடில் கயல் எங்கேஜ்மென்ட் முடிவடைந்த பிறகு தான் காமாட்சி விஷம் குடித்துவிட்டார் என்று கயலுக்கு தெரிய வந்திருக்கிறது.

இப்போதுதான் அவரை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். அவர் பிழைப்பாரா இல்லையா என்று தெரியவில்லை அதே நேரத்தில் இந்த சீரியலின் இயக்குனர் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படத்தை பார்த்து விட்டார் போல. அதனால் தான் அந்த படத்தில் தமன்னா எப்படி தான் அடி வாங்கும்போது கூட தன்னுடைய குழந்தைகளுக்கு தெரியக்கூடாது என்பதற்காக ஒளிந்து விளையாடுவது போல நடிப்பாரோ அதுபோல இவர் விஷம் குடித்து ரத்த வாந்தி எடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போதும் தன்னுடைய மகளுக்கு தெரிய கூடாது என்பதற்காக அங்கே இங்கே நின்று கண் சிவக்க அழுத காட்சிகளை வைத்து விட்டாரா என்று சிலர் கலாய்த்து வருகிறார்கள்.
இதே காட்சிகள் திருமணத்தில் வைத்து இருந்தால் கூட சரி என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் எங்கேஜ்மென்ட் தானே அதற்கு எதற்காக இப்படி எத்தனை வாரங்களாக இழுத்து உயிருக்கு போராடுவது போல காட்ட வேண்டும்? என்பது பலருடைய கேள்வியாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் கயலின் எங்கேஜ்மென்ட் ஒரு மாதங்களுக்கு இழுத்துக்கொண்டு இருக்கும் நிலையில் இனி கல்யாணம் எந்த வருடத்தில் நடக்க இருக்கிறதோ என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications