எதிர்நீச்சல் குணசேகரன் நிஜ பிள்ளைகளின் திருமணத்தில் முற்போக்கான திட்டம்... இதை எதிர்பார்க்கலையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடிக்கும் மாரிமுத்து தன்னுடைய மகன் மற்றும் மகளின் திருமணத்தில் முற்போக்கான பல முடிவுகளை எடுக்க இருப்பதாக கூறி இருக்கிறார்

சீரியலில் பெண்கள் என்றால் சமையல் செய்வதற்கும் வீட்டில் வேலைகளை செய்வதற்கும் என வைத்திருக்கும் ஒரு கேரக்டராக நடிக்கும் இவருக்குள் இப்படி ஒரு கேரக்டரா? என கேட்கும் பலருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

நிஜ கேரக்டரே வேறு

நிஜ கேரக்டரே வேறு

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடிக்கும் மாரிமுத்து இந்த சீரியலில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் ஒரே நபராக இருந்து வருகிறார். இவருடைய வில்லத்தனத்தை பார்த்து ரசிகர்கள் இவரை கதாநாயகன் ரேஞ்சுக்கு புகழ்ந்து வருகின்றனர். ஆனால் சீரியலில் நடிப்பதற்கும் நிஜத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பதை இவருடைய பேச்சிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது .சீரியலில் படித்த பெண்களை வீட்டில் அடிமையாக வைத்திருக்கும் இவர் நிஜ வாழ்க்கையில் முற்போக்கான சிந்தனைகளை கொண்டவராக இதான் இருக்கிறார்.

நடிகர் மாரிமுத்துவின் குடும்பம்

நடிகர் மாரிமுத்துவின் குடும்பம்

இவர் கடவுளை நம்பாதவராகவும் இருக்கிறார் மனிதனை மட்டும் தான் நம்புவாராம். எதிலும் பர்ஃபெக்ஷன் ஆக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் இவர் அவருடைய குழந்தைகளிடம் அதிகமாக பாசமாக இருக்கிறார். அவருடைய மனைவியின் பெயர் பாக்கியலட்சுமி என்கிற மலராம். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறாராம். மகன் எம்பிஏ முடித்துவிட்டு ஒரு பெரிய கம்பெனியில் நல்ல சம்பளம் வாங்கும் நிலையில் தான் இருக்கிறாராம், ஒரே மகளும் பிகாம் படிப்பை முடித்துவிட்டு எம்பிஏ இப்போதுதான் ஜாயின் பண்ணி இருக்கிறாராம், மாரிமுத்துவின் பையன் பெயர் அகிலனாம் .அதுபோல மகளின் பெயர் ஐஸ்வர்யாவாம்.

நடிகர் மாரிமுத்துவின் கண்டிஷன்

நடிகர் மாரிமுத்துவின் கண்டிஷன்

மாரிமுத்து அவருடைய குழந்தைகள் இருவரும் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் இவருடைய விருப்பமாக இருக்கிறது இதைக் குறித்து தன்னுடைய மகள் மற்றும் மகனிடம் ஏற்கனவே பேசி இருக்கேன் அவர்கள் அதை குறித்து எந்த ஒரு முன்னேற்றம் செய்தது போல தெரியவில்லை. அதனால் தன்னுடைய மகனுக்கு முதலில் திருமணம் செய்வதற்காக இவர் பெண் பார்க்க இருக்கிறாராம். ஆனால் இவருடைய ஜாதியில் இவர் கண்டிப்பாக பெண்பார்க்க மாட்டாராம். அடுத்த சாதியில் இருந்து தான் இவர் பெண்ணெடுக்க வேண்டும் என்ற ஒரு முடிவோடு இருக்கிறாராம். மகள் மற்றும் மகன் இருவரும் கலப்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இவர் விருப்பத்தோடு குழந்தைகளிடம் கூறியிருக்கிறாராம்.

கலப்பு திருமணத்திற்கு விளக்கம்

கலப்பு திருமணத்திற்கு விளக்கம்

கலப்பு திருமணம் செய்யும் போது ஜாதி மறைந்து விடுகிறது. புது உறவுகள் வரப்போகிறது. வம்சாவளி தொடரப்போவதில்லை, புது ரத்தம் வந்து குடும்பம் விருத்தியடைய வேண்டும் என்பது இவருடைய விருப்பமாக இருக்கிறது. இதனால் இவருடைய குழந்தைகள் இருவருக்குமே இவர் வேறு ஜாதியில் இருந்து தான் திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்க இருக்கிறாராம். எப்போதுமே காதலுக்கு நான் எதிரி கிடையாது. சீரியலில் அல்லது திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த கேரக்டராக நடிப்பேன் ஆனா நிஜ கேரக்டரில் நான் காதலை ரொம்பவே ரசிப்பதால் தான் என்னால் கலைத்துறையில் இருக்க முடிகிறது என்று கலகலப்பாக பேசியிருக்கிறார் .இந்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் பலரும் இவரை பாராட்டி வருகின்றனர். சீரியலில் இவரை பார்த்து திட்டி வந்த ரசிகர்கள் கூட இவருக்குள் இப்படி ஒரு கேரக்டர் இருக்கிறதா என்று வியப்பாக இருந்தாலும் இவருடைய முயற்சியை பலரும் பின்பற்றலாம் என்று கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+