Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளையராஜாவின் மருமகளை நடுரோட்டில் "கெட்ட வார்த்தை”யில் திட்டிய நபர்.. காரணம் இதுதானாம்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகை விலாசினி தன்னுடைய குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதில் தான் இசையமைப்பாளர் இளையராஜாவின் மருமகள் என்பது பற்றியும் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா பற்றியும் பேசி இருக்கிறார்.

அத்தோடு சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு தான் செய்த வேலையால் ஒரு நபர் தன்னை நடுரோட்டில் கெட்ட வார்த்தையில் பேசியதாக கூறி இருக்கிறார். அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "தவமாய் தவமிருந்து" என்ற சீரியலில் மார்க்கண்டேயனின் மகளாக நடிகை விலாசினி நடித்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் ஆர் ஜே, விஜே, டப்பிங் கலைஞர் என ஒவ்வொரு துறையிலா காலடி எடுத்து வைத்து இப்போது சீரியல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

who insulted Ilayarajas daughter-in-law in the middle of the road This is the reason for the person

இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டு வாரிசாக இருக்கும் இவருக்கும் பாடகியாக வேண்டும் என்று அதிகமான ஆசையாம். அதற்காக தன்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் உதவி செய்யவில்லை என்றும், நான் எல்லோரிடமும் உதவி கேட்டேன் ஆனால் யாரும் எனக்கு ஒரு வாய்ப்பு தரவில்லை என்றும் வருத்தத்தோடு பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தான் இவர் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள் குறித்தும் கூறி இருக்கிறார். அந்த வகையில் அவர் பேசுகையில், நான் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு டப்பிங் கலைஞராக இருந்து பலருக்கும் தெரியும். அப்படி இருக்கையில் தான் செல்போனில் வரும் வாய்ஸ்கள் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் நான் பல வாய்ஸில் பேசியிருக்கிறேன்.

இப்ப இருக்கிற மாதிரி இல்லாமல் சில வருடங்களுக்கு முன்பு செல்போனில் யாருக்கும் போன் செய்தால் நம்முடைய பேலன்ஸ் முடிந்து விட்டால் நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று ஒரு குரல் அலர்ட் செய்யும் அது இவருடையது தானாம். அது போல நீங்கள் கால் செய்த நபருடைய காலர் டியூனை காப்பி செய்வதற்கு எண் ஒன்றை அழுத்தவும் என்று வருவதும் இவருடைய குரல் தானாம்.

இவர் இப்படி செல்போனில் வரும் குரல்களை பேசி இருப்பது இவருடைய நெருங்கிய நண்பர்களுக்குள் கூட தெரியாதாம். அந்த மாதிரி ஒரு நாள் இவர் பஸ் ஸ்டாண்டில் பஸ்காக காத்திருக்கும் போது அருகில் இருந்த ஒரு நபர் யாருக்கோ கால் பண்ணி இருக்கிறார். அதுவும் ஸ்பீக்கரில் போட்டிருந்தாராம். அப்போது இவருடைய குரல் அந்த போனில் ஒலித்து இருக்கிறது. அதாவது அவருடைய பேலன்ஸ் முடிந்துவிட்டது என்பதை இவர் பேசிய வாய்ஸ் ரிமைண்ட் செய்து இருக்கிறது.

உடனே அந்த நபர் கடுப்பாகி "கெட்ட வார்த்தை"யில் இவ எவ? இப்படி பேசிகிட்டு இருக்கா... நமக்கு தெரியாதா? பேலன்ஸ் முடிஞ்சிட்டு என்பது, நம்ம தான ரீசார்ஜ் பண்ண போறோம். அதை இவ நொய்யி நொய்யின்னு ஓய்யாம சொல்லிக்கிட்டு இருக்கா என்று சில கெட்ட வார்த்தைகளையும் சேர்த்து இவர் முன்பே பேசிவிட்டாராம். இவருக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் தவித்து போய் நின்னாராம்.

அதுபோல விலாசினி ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது அவருடைய நண்பர் ஒருவர் இன்னொரு நண்பருக்கு போன் செய்திருக்கிறார். அப்போது அவருடைய பாடலை நீங்கள் காப்பி பண்ணுவதற்காக என் ஒன்றை அழுத்தவும் என்று இவர் பேசிய அதே வாய்ஸ் அந்த நண்பரின் போனில் கேட்டிருக்கிறது. அப்போது அந்த நண்பரும் காண்டாகி கெட்ட வார்த்தையில் திட்டி இருக்கிறார். இப்படி தான் செய்த வேலைக்கு பலரிடம் கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கி இருக்கிறேன் என்று அந்த பேட்டியில் கலகலப்பாக விலாசினி பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+