எதிர்நீச்சல் ஈஸ்வரியின் மகன் இவர் தான்... இவருக்காக தான் பல கஷ்டங்களையும் கடந்து வந்திருக்கிறார்
சென்னை: தீபாவளி பண்டிகையை பிரபலங்கள் பலரும் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் கனிஹாவும் தன்னுடைய குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்.
தன்னுடைய ஒரே மகனின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்ட கனிஹாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கனிஹாவின் மகன் இவ்வளவு வளர்ந்து விட்டாரா என்று பலர் வியப்பில் ஆழ்ந்து இருக்கின்றார்கள்.

சீரியலில் அறிமுகம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வரும் நடிகை கனிஹா, இதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த கனிஹா திருமணத்திற்கு பிறகு ஒரு குழந்தை பிறந்த பிறகு சிறிது நாட்கள் நடிப்பிற்கு லீவ் விட்டிருந்தார். தற்போது மீண்டும் நடிப்பை தொடங்கலாம் என்று நினைத்து இருந்தவருக்கு ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த எதிர்நீச்சல் சீரியலில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்ததும் கேரக்டரின முக்கியத்துவத்தை பார்த்து சீரியலில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.

எதிர்நீச்சல் ஈஸ்வரி
எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவின் மனைவியாக இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் அஜித்துக்கு ஜோடியாக நடித்த கனிஹா இப்படி இவ்வளவு வயசு வித்தியாசம் இருப்பவருக்கு ஜோடியாக நடிக்க தொடங்கி விட்டார் என்று தங்களது ஆதங்கத்தை கமெண்ட் களில் தெரிவித்து வந்தனர்.

க்யூட்டான குடும்ப புகைப்படம்
சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் கனிஹா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையோடு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தன்னுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். முதல் முறையாக கனிஹாவின் மகனைப் பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு இவ்வளவு பெரிய பையன் இருக்கிறாரா? என்று வியப்பில் ஆழ்ந்து இருந்தாலும், வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அடிக்கடி மாடர்ன் உடையில் போட்டோ சூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் கனிஹா தற்போது புடவையில் கணவன் மற்றும் மகனோடு இருக்கும் புகைப்படங்களில் கியூட்டாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மருத்துவர் கூறிய அதிர்ச்சி செய்தி
கனிஹா கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் எல்லா கர்ப்பிணிகளும் செய்கின்ற மாதிரிதான் இவரும் ஸ்கேன் எல்லாம் செய்திருந்தாராம். ஆனால் அப்போது கூட இவருக்கு தனது குழந்தையை பற்றி எந்த ஒரு எதிர்மறையான தகவல்களையும் தெரிவிக்கவில்லையாம்? ஆனால் குழந்தை பிறந்த பிறகு இவரிடம் குழந்தையை காட்டவே இல்லையாம். குழந்தை பிறந்து பல மணி நேரங்களுக்கு பிறகு மருத்துவர் வந்து திடீரென்று இவர் அருகில் ஒரு நோட்டு புத்தகத்தில் ஹார்ட் படத்தை வரைந்து இவரிடம் காட்டி உங்கள், குழந்தையின் ஹார்ட்டில் பிரச்சனை இருக்கிறது, இன்று இரவு வரை அவன் தாங்க மாட்டான் என்று கூறி இருந்தாராம். அப்போது கனிஹாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் வாழ்க்கை இருண்டது போல இருந்ததாம்.

மகனுக்கு குவியும் ஆசீர்வாதங்கள்
கனிஹாவின் மகன் பிறக்கும்போது பல்வேறு கஷ்டங்களை கனிஹா சந்தித்திருக்கிறார். இவருடைய டெலிவரி நேரத்தில் இவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில் அவருடைய பையனுக்கு இதயத்தில் ஆபரேஷன் செய்திருக்கின்றனர். பிறந்த பச்சிளம் குழந்தைக்கு பல்வேறு ஊசிகள், மருந்துகள் செலுத்தி பாதுகாக்கப்பட்டு வந்த குழந்தை இப்போது இவ்வளவு பெரிய பையனாக வளர்ந்து விட்டாலும் ,இவர் நலம் பெற்று ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் கனிஹாவின் பையனுக்கு வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் கூறி வருகிறார்கள்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications