Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேபிஒய் பாலாவின் பித்தலாட்டம்? ஆம்புலன்ஸில் நம்பர் எங்கே? எதுக்கு பவுன்சர்ஸ்? யாரந்த அந்நிய சக்தி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேபிஒய் பாலா அரசியலுக்குள் சேர்ந்து, ஏதாவது ஒரு கட்சியில் இணைந்தால் சந்தோஷம்தான்.. ஆனால் அந்நிய சக்திகளுக்கு கைக்கூலியாக இருப்பதை ஏற்க முடியாது. ஏழைகளை வைத்து புரட்சியை உருவாக்கி, அதை வைத்து ஆட்சியையும் கலைத்துவிட்டு, அந்நிய சக்தியின் கைக்கூலியை இந்தியாவில் உட்கார வைத்துவிடுவார்கள்.. எனவே தமிழக அரசும் விழிப்பாக இருக்க வேண்டும்" என்று பத்திரிகையாளர் உமாபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

AramNaadu என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் உமாபதி, "இந்த தேசத்திற்கும்சரி, நம்முடைய மாநிலத்துக்கும் சரி, வருங்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடிய நம்பர் 1 நபர் யார் என்றால் கேபிஒய் பாலா தான். இன்றைய சூழலில் சர்வதேச அரசியலுடன் முடிச்சு போடக்கூடிய அதிபயங்கர நபர்தான் இந்த பாலா.

KPY Bala ambulance sentiment drama KPY

கேபிஒய் பாலா

தமிழகத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் கேபிஒய் பாலா, ஆரம்பத்திலிருந்தே கஷ்டப்பட்டு, பிறகு டிவி சேனலுக்கு வந்தவர்.. ஆனால், இன்றுள்ள தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஆபத்தை உருவாக்குபவராக உள்ளார்.

அயர்ன் பாக்ஸ், சைக்கிள் வாங்கி தருவது, வீடு கட்டி தருவது, ஆம்புலன்ஸ் தருவது இதெல்லாம் பித்தலாட்டம்தான்.. இங்கு பாலாவை போலவே, ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியான நபர்களை உருவாக்கப்படுகிறார்கள்.. அதுவும் சோஷியல் மீடியா மூலம் இவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்..

டிட்டோ ஹர்ஷா சாய்

இது சர்வதேச அளவில் பிரச்சனைகளை நமக்கு தரக்கூடியது.. சர்வதேச அரசியலில் பார்த்தால், தவெக தலைவர் விஜய் ஒரு அப்பாவி.. முதலமைச்சர் சீட்டில் உட்கார்ந்துவிட வேண்டும் என்பதுவரைதான் விஜய்யின் ஆசை. ஆந்திராவில் ஹர்ஷா சாய் என்பவரின் காப்பிகேட் தான் கேபிஒய் பாலா.. ஹர்ஷா சாய் ஸ்டைலை காப்பி அடித்து வளர்ந்தவர் பாலா..

திமுக அரசு ரூ.5000 அனைவருக்கும் தந்ததும், எடப்பாடி பழனிசாமி ரூ.3000 தந்ததும், எல்லாரிடமும் போய் சேராது.. மக்களின் பணத்தை தானே, தமிழக அரசு மக்களுக்கே இப்படி உதவித்தொகையாக திரும்ப தருகிறது? என்று மக்கள் சொல்லிவிடுவார்கள்.. ஆனால், வெறும் 5 பேருக்கு 5000 தருவதை வீடியோ எடுத்ததை புரமோட் செய்தால், அது மக்களின் கவனத்தை பெறும்..

சென்ட்டிமென்ட் செயல்பாடுகள்

சென்ட்டிமென்ட் இங்கே எடுபடும்.. அதாவது ஒரு ஏழை வீட்டு பையன், தனக்கு வரும் சொற்ப வருமானத்தில், மற்றவர்களுக்கு உதவுகிறாரே? என்று பாலா மீது கவனம் குவியும்.. ஆனால், பாலா என்ன சம்பாதிக்கிறார் என்று யாருக்குமே சரியாக தெரியாது. இன்று பாலா நிறைய சம்பாதிக்கலாம்.

ஆனால், அன்று விஜய் டிவியில் 25 ஆயிரத்துக்கு மேல் ஷோவில் தர மாட்டார்கள். அப்படியிருக்கும்போது பிறருக்கு எப்படி வீடு கட்டித்தர முடியும்? ஆம்புலன்ஸ் கதைகள் எல்லாமே போலி. பாலா இயல்பாகவே நல்லவர்தான்.. ஆனால், அவரை தங்களுக்கேற்றவாறு மாற்றிக்கொண்டன தீய சக்திகள்.. எப்படி நேபாளத்தில் சுதன் குருங் களமிறக்கப்பட்டாரோ, அதே பாணிதான் பாலாவும்..

ராகவா லாரன்ஸ்

அரசியலுக்கு வரமாட்டேன், மக்களுக்கு நல்லது செய்வது மட்டும்தான் தன்னுடைய குறிக்கோள் என்று சுதன் குருங் சொல்வதைதான் இங்கு பாலாவும் சொல்லி கொண்டிருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் மூலம் உதவி அடைந்தவர்கள், பலன் பெற்றவர்கள் ஏராளம்.. இன்னமும் உதவிகளை செய்து வருகிறார்.. அதற்குள் போக வேண்டாம்.. அவரது மற்றொரு பக்கத்தைதான் பேச வேண்டியிருக்கிறது..

100 பேருக்கு உதவி செய்வார், ஆனால் 8 கோடி பேரை ஆட்டைய போடுவார்.. சரியாக ஜல்லிக்கட்டு நேரத்தின்போதுதான் ராகவா லாரன்ஸ் களமிறக்கப்பட்டார்.. ஆனால், இதை கண்டுபிடித்த தமிழக மக்கள் லாரன்ஸை ஒதுக்கிவிட்டனர்.. அந்த முயற்சியில் தோல்வியடைந்ததும், தன்னை மக்கள் இனி நம்ப மாட்டார்கள் என்றதுமே, அடுத்த தலைமுறையான கேபிஒய் பாலா மூலம் மீண்டும் தொடர்கிறார்.

இதுபோன்றவர்கள் ரஜினியை கையில் எடுப்பார்கள்.. ரஜினிக்கு அதிக மாஸ் இருந்ததால், அப்போதிருந்தே ரஜினியைதான் முன்னிலைப்படுத்தி கொண்டார் லாரன்ஸ். இதைத்தான் பாலாவும் செய்கிறார்.

பாலாவுக்கு எதுக்கு பவுன்சர்கள்

4 பேருக்கு நல்லது நடக்கும், ஆனால் நாடு நாசமா போகும்.. பாலா பேச்சு முழுவதும் சென்ட்டிமென்ட்டாகவே, பெண்களை கவரும் வகையிலேயே உள்ளது.. மக்களுக்கு உதவி செய்ற ஆளுக்கு எதுக்கு பவுன்சரும்? பாக்சரும்? கூடவே வர்றாங்க? எல்லாமே செட்டப்பும், நடிப்பும்தான்.

ஆஸ்பத்திரி எப்படி சொந்தமாக கட்ட முடியும்? இதற்கு எவ்வளவு செலவாகும்? டாக்டர்களுக்கு எப்படி சம்பளம் தரமுடியும்? ஷோ செய்து எவ்வளவு சம்பாதிக்க முடியும்? மருத்துவமனை கட்ட முடியும்? அந்த மருத்துவமனையை, தான் படிப்புக்கு உதவி செய்து, இன்று என்ஜினியராக உள்ளவர் கட்ட போறாராம்.

ஆம்புலன்ஸ் எல்லாம் போலி

ஆரம்பத்தில் பாலா சரியாகத்தான் இருந்தார்.. ஒருமுறை அமெரிக்கா சென்றுவிட்டு வந்ததிலிருந்துதான், இந்த போலியான பித்தலாட்டங்கள் ஆரம்பமாகின..

இதுபோன்ற "மனித வினையூக்கிகள்" (human Catalyst) ஆட்சிக்கு எதிராக, அரசியலுக்கு எதிராக வரமாட்டார்கள்.. மக்களை தூண்டிவிட்டு, அவர்களின் சென்ட்டிமென்ட்டை வைத்தே காய் நகர்த்தி, நாட்டையே காலி செய்வார்கள் அந்நிய சக்திகள்.. இதெல்லாம் சோஷியல் மீடியா மூலம் மட்டுமே நடக்கும்.

பாலா தந்திருந்த ஆம்புலன்ஸ்கள் எல்லாமே போலியான நம்பர்கள், இன்சூரன்ஸ்களும் கிடையாது. அந்த டிரஸ்ட்டும் போலியானது. நாலு பேருக்கு உதவி செய்வது நல்லவிஷயம்தான், ஆனால் இந்த நாடு முக்கியம்.

அந்நிய சக்தி கைக்கூலி

இதே கேபிஒய் பாலா லோக்கல் அரசியலுக்குள் சேர்ந்து, ஏதாவது ஒரு கட்சியில் இணைந்தால் சந்தோஷம்தான்.. ஆனால் அந்நிய சக்திகளுக்கு கைக்கூலியாக இருப்பதை ஏற்க முடியாது. ஏழைகளை வைத்து புரட்சியை உருவாக்கி, அதை வைத்து ஆட்சியையும் கலைத்துவிட்டு, அந்நிய சக்தியின் கைக்கூலியை இந்தியாவில் உட்கார்ந்து வைத்துவிடுவார்கள்.. எனவே தமிழக அரசும் விழிப்பாக இருக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+