மாரிமுத்துவின் மாஸ் ரோல்! எதிர்நீச்சலில் அடுத்த ஆதிகுணசேகரன் யார்?.. திருச்செல்வம் பதில் என்ன?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து இறந்துவிட்ட நிலையில் அவருக்கு பதில் இனி அந்த கேரக்டரில் நடிக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் மாரிமுத்து 1967 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர் சென்னையில் சினிமாவில் நடிப்பதற்காக வந்தார். அங்கு ராஜ்கிரண், சீமான் உள்ளிட்டோருடன் தங்கியிருந்தார். அவர் இயக்குநர்கள் ராஜ்கிரண், வசந்த், மணிரத்னம், சீமான் உள்ளிட்டோருடன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் எனும் படத்தை இயக்கினார். இதன் பின்னர் புலிவால் எனும் படத்தில் 2014 ஆம் ஆண்டு சப்போர்டிங் ரோல் செய்திருந்தார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இவர் எதிர்நீச்சல் சீரியல் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தார்.
இதில் ஆதிகுணசேகரனாக நடித்து பெண்களை அடிமைப்படுத்தும் கேரக்டரில் நடித்திருப்பார். இவருடைய மனைவி ஈஸ்வரி படித்திருந்தாலும் அவர் சமையல் வேலை மட்டும்தான் செய்ய வேண்டும். வீட்டு நிர்வாகத்தில் தலையிட கூடாது என நினைக்கும் கேரக்டர். இவர் கொடுமையான கதாபாத்திரத்தில் நடித்தாலும் இவருடைய வில்லத்தனத்தை மக்கள் ரசித்தார்கள்.
இவருக்கென தனி ஆர்மி இருக்கிறது. இவருக்கு ஏராளமான ஆண் ரசிகர்கள் உள்ளனர். பெண்ணடிமை என்பதை ஏற்க முடியாத ஒன்று என்றாலும் அந்த கேரக்டரில் அவர் நடித்த விதம் அனைவருக்கும் பிடிக்கும். கலையை கலையாக பார்க்க வேண்டும் என நினைப்பார்கள் ஆதி குணசேகரனை ரசிப்பார்கள், மற்றவர்கள் திட்டுவார்கள்.
இந்த நிலையில் இன்று காலை டப்பிங் முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து 9 மணிக்கு வேறு படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர் செல்ல வேண்டுமாம். ஆனால் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் அவருடைய வளசரவாக்கம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் எல்லாம் வந்துவிட்டனர். இயக்குநர் திருச்செல்வமும் அங்கு வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் நடிகர் மாரிமுத்துவின் இறப்பு பேரிழப்பு.

அவருடைய குடும்பத்தினரை எப்படி ஆறுதல் சொல்லி தேற்றுவது என தெரியவில்லை. யதார்த்தவாதி, எதையும் மனதில் வைத்துக் கொண்டு பேச மாட்டார். ஜோதிடர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட ஏன் சார் அப்படி பேசினீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் சார் நான் எதையும் பிளான் செய்து பேசவில்லை.
ஏதோ பேசும் போது சில வார்த்தைகள் அதிகமாக வந்துவிட்டது என்றார். அது போல் ஒரு பேட்டியில் என்னை சார் சார் என கூறிவிட்டு திடீரென அவன் என கூறியிருப்பார். இதெல்லாம் சகஜம். இதை பெரிதுப்படுத்தாதீர்கள் என்றார். அடுத்த குணசேகரன் யார் என்ற கேள்விக்கு திருச்செல்வம் பதிலளிக்கையில், இதுகுறித்தெல்லாம் இப்போது முடிவு செய்ய முடியாது. இதுகுறித்து பேச வேண்டிய நேரமும் இது இல்லை என கூறிவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications