அப்போ வனிதாவை கலாய்ச்சது உள்ளூர் ஆட்டக்காரன் இல்லையா?
சென்னை: விஜய் டிவியின் கலக்க போவது யாரு சீசன் 9 வாரா வாரம் ஞாயிற்று கிழமைகளில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மதுரை முத்து, ஆதவன், ஈரோடு மகேஷ் ஆகியோர் தவிர வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன் ஆகிய இருவரும் நடுவர்களாக பங்கேற்று உள்ளனர்.
கலக்க போவது யாரு என்கிற டைட்டிலுக்கு ஏற்ப நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களும் நகைச்சுவையில் கலக்கி வருகின்றனர்.விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சி பல திறமையான கலைஞர்களுக்கு வாழ்க்கை கொடுக்கும் மேடையாகத்தான் இருக்கிறது.
விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொண்டு நகைச்சுவை செய்துவரும் புகழ், பாலா போன்றவர்கள் கூட இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்று உலகறியப்பட்டவர்கள்.

காடுகளிலும் மலைகளிலும்
போட்டியாளர் ஒருவர் மலைகளிலும், காடுகளிலும் வசிப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்கப் போகிறேன் என்று வந்தார். நான் ஏன் அங்கு வசிக்கணும் என்று ஆதவன் கேட்டபோது.. சார் நீங்க நிகழ்ச்சிக்கு வெளிநாட்டுக்கு செல்லும்போது உங்க பைலட்டுக்கு நெஞ்சு வலி வந்து ஃபிளைட்டை மலையில இறக்கிட்டா நீங்க அங்கே வாழ்ந்துதான் சார் ஆகணும் என்று பதில் சொன்னார் போட்டியாளர்.

வனிதா அக்காவை
யார் யாரையோ கூட்டிகிட்டு போறீங்க.. அந்த மாதிரி இடங்களுக்கு நம்ம வனிதா அக்காவை கூப்பிட்டுக்கிட்டு போலாமேன்னு ஈரோடு மகேஷ் சொல்ல, அமேசான் காட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன்.. அந்த காடு பத்திகிட்டு எரிஞ்சுதுன்னு சொல்றார் அவருடன் வந்த இன்னொரு போட்டியாளர் கண்ணா என்று ஆரம்பித்தார்.

கண்ணா வர்லியே
கண்ணா நான் எப்படி வருவேன்..எப்போ வருவேன்னு யாருக்குமே தெரியாது.. ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்னு பாபா ரஜினி கெட்டப்பில் வந்த ஒருவர் சொல்ல, வரவே இல்லையேன்னு சொன்னார் இவர்.. என்னது என்று கேட்க.. உனக்கு ரஜினி வாய்ஸ் சுத்தமா வரவே இல்லையேன்னு திருப்பிக் கொண்டார் இவர்.

வயசானாலும் வனிதா
தனக்கு வயசானாலும் இன்னும் அழகா இருக்கறதா நினைச்சுகிட்டு பியூட்டி பார்லர் எல்லாம் போயி, மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்டு, சும்மா லல்லல்லான்னு சுத்திகிட்டு இருக்காங்க பாரு அது ஆன்டி ஆசனம் என்று சொல்ல... அப்போதுதான் வனிதா நினைவு வந்தவர் போல வனிதாக்கா வணக்கம் என்று சொன்னார் மற்ற ஒருவர்.
இதைக் கேட்ட வனிதா செருப்பு... செருப்பு என்று சிரித்துக் கொண்டே சொன்னார். விஜய் டிவி வாய்ஸ் வனிதா அக்காவையே ஒருத்தன் கலாய்க்கிறான்னா அவன் கண்டிப்பா வெளியூர்காரனாத்தான் இருப்பான்னு சொல்லுது.
-
சிறகடிக்க ஆசை: ஜெயிலுக்கு போன சத்யா.. மீனா கண்டுபிடித்த ரகசியம்.. இனி தான் பெரிய சம்பவம் இருக்கு! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications