ஈரமான ரோஜாவே சீரியல் ஜீவாவிற்கு இவ்வளவு பெரிய மகளா..? பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறும் ரசிகர்கள்
சென்னை: ஈரமான ரோஜாவே சீரியலில் ஜீவா கேரக்டரில் நடிக்கும் திரவியம் ராஜ்குமாரின் குழந்தையின் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சின்னத்திரை நடிகர் திரவியத்துக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.

இரண்டு சீசனிலும் கதாநாயகன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் முதல் சீசன் மற்றும் தற்போதைய இரண்டாவது சீசனிலும் ஜீரோவா ஜீவாவாக கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் திரவியம் தன்னுடைய மகளுடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும், திரவியத்திற்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதனாலே அவர்களும் திரவியத்தின் மகள் குறித்த வீடியோவை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

கதாநாயகன் ஆவதற்கு முன்பு பார்த்த வேலை
சின்னத்திரை நடிகர் ஆன திரவியம் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு கல்லூரி படிப்பை முடித்ததும் நடிகை ராதிகா மற்றும் சரத் குமாரின் சொந்த நிறுவனமான ரேடான் நிறுவனத்தில் அனிமேஷன் பிரிவில் வேலை செய்து வந்துள்ளார். அதற்குப் பிறகு ஒரு சில வருடங்கள் கழித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் முதல் சீசனில் வெற்றி கேரக்டரில் நடித்திருப்பார். திரவியத்தின் முதல் சீரியல் இந்த சீரியலாக இருந்தாலும் இவருக்கு ரசிகைகள் கூட்டம் அதிகரித்து விட்டது.

குழந்தையின் மீது அன்பு
திரவியம் பிறந்தது படித்தது எல்லாமே கோயம்புத்தூரில் தானாம். கோயம்புத்தூரை சொந்த ஊராகக் கொண்ட திரவியம் நடிப்பதற்காக சென்னையில் வாழ்ந்து வந்தாலும் இவர் கோயம்புத்தூரை சேர்ந்த ரித்து என்பவரை 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜியா என்கிற பெண் குழந்தை இருக்கிறது. சூட்டிங் ஸ்பாட்டில் என்னதான் பிசியாக இருந்தாலும் சூட்டிங் முடிந்ததும் நேராக வீட்டிற்கு சென்றதும் தன்னுடைய குழந்தையோடு நேரத்தை கழிப்பதில் தான் திரவியம் முக்கியமானதாக வைத்திருக்கிறாராம். தற்போது தன்னுடைய குழந்தையின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் விழாவில் திரவியம் தன்னுடைய குழந்தையோடு எடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு திரவியம் சீரியலில் கதாநாயகனாக கலக்கிக் கொண்டிருக்கிறார், இவருக்கு திருமணம் முடிந்ததே பல பெண்களுக்கு தெரியாமல் இருக்கும் நிலையில் இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறார் என்று தெரிந்ததும் கொஞ்சம் பொறாமையாக தான் இருக்கிறதாம். ஆனாலும் குட்டி பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் மட்டும் குறையவில்லை. தற்போதைய சூழ்நிலையில் ஈரமான ரோஜாவே சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர். அதில் ஜீவா மற்றும் காவியாவின் போட்டோஸ்கள் தான் பலருடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் சாங் ஆக இருந்து வருகிறது. அந்த வரிசையில் திரவியம் மற்றும் அவருடைய குழந்தையின் புகைப்படங்களும் இடம் பிடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications