“அந்த” விஜய் டிவி பிரபலத்தால் தான் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது... தனலட்சுமி அம்மா வெளியிட்ட வீடியோ
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறில் இருக்கும் தனலட்சுமிக்கு இந்த வாய்ப்பு எப்படி கிடைத்திருக்கிறது என்பதை பற்றி அவருடைய அம்மா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
டிக் டாக் பிரபலமாகவும், ஷார்ட் பிலிம் களில் நடித்துக் கொண்டிருந்த தனலட்சுமிக்கு விஜய் டிவி பிரபலத்தால் தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கிடைத்திருக்கிறதாம்.

தனலட்சுமி அம்மா வெளியிட்ட வீடியோ
ஆரம்பத்தில் இருந்தே தனலட்சுமிக்காக பல்வேறு உதவிகளை செய்து வந்து, தற்போதைய நிலை வரைக்கும் கொண்டு வந்து நிற்கும் விஜய் டிவி பிரபலத்தை பற்றி தனலட்சுமி அம்மா வெளியிட்ட வீடியோ ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனலட்சுமி செயலை குறித்து ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து கொண்டிருக்கும்போது அவர் ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு கஷ்டங்களை தாண்டி இந்த வாய்ப்புக்கு கிடைத்திருக்கிறது என்பதை பற்றி தனலட்சுமியின் அம்மா விளக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நிஜ கேரக்டர் இதுதான்
தனலட்சுமி குழந்தையாக இருக்கும்போதே அதிகமாக கஷ்டப்பட்டு தான் அவருடைய அம்மா வளர்த்து இருக்கிறாராம். தான் பட்ட கஷ்டத்தை குழந்தைகள் படக்கூடாது என்பதற்காக செல்லமாக வளர்த்த தனலட்சுமி அதிகமாக கோபப்படுவாராம். ஆனால் கோபம் தீர்ந்த சிறிது நேரத்தில் வந்து மன்னிப்பு கேட்டு விடுவாராம். கோபத்தில் இருக்கும்போது என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் தான் சில நேரங்களில் இவர் நடந்து கொள்வாராம். ஆனால் அவருடைய அம்மா அதையெல்லாம் மன்னித்து விடுவாராம். அதைத்தான் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் செய்து வருவதாக கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலரும் எப்படி எல்லாமோ இருக்கும்போது என்னுடைய மகள் நடிக்காமல் வீட்டில் இருப்பது போலவே உண்மையாக இருக்கிறாள் என்று கூறியிருக்கிறார்.

தனித்திறமை
தனலட்சுமி படிப்பில் மோசம் என்று சொல்வதற்கு இல்லை ஆனால் பனிரெண்டாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறாராம்.ஆனால் யாராவது எதையாவது செய்வதை பார்த்தால் அப்படியே செய்து விடுவார். குறிப்பாக நடிப்பதை பார்த்தால் தத்ரூபமாக அப்படியே மாறி நடித்துக் காட்டி விடுவார். அந்த அளவிற்கு அவருக்குள் திறமை இருக்கிறது .அதனால் தான் அவர் டிக் டாக்கில் 4 மணி நேரம் 5 மணி நேரம் மேக்கப் போட்டு வீடியோ எடுத்து வெளியிட்டார் .அப்போது பல பிரச்சனைகளால் இவருடைய வீடியோக்கள் பல நேரங்களில் டெலிட் செய்யப்பட்டு விட்டன .தன்னுடைய திறமையை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் என்று இருந்த தனலட்சுமிக்கு விஜய் டிவி பிரபலம் ஒருவர்தான் உதவி செய்து இருக்கிறார் .

உருக்கமான வேண்டுகோள்
ஆரம்பத்தில் இருந்தே பல முறை அந்த விஜய் டிவி பிரபலம் இவர்களுக்கு உதவி செய்து இருக்கிறாராம். ஆனால் அதை எந்த இடத்திலும் கூற விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார் .அதுபோல தனலட்சுமி தன்னுடைய கதை சொல்லும் டாஸ்க்கில் கூட அவரைப் பற்றி பெயரை கூறினாராம். ஆனால் அவருடைய பெயரை கட் செய்து விட்டார்களாம். அதுபோல நானும் இப்போதைக்கு அவருடைய பெயரை சொல்ல விரும்பவில்லை. அப்படி சொன்னால் அவருக்கு பிடிக்காது அதனால் வேண்டாம் ஆனால் தன்னுடைய மகளின் திறமைக்கு கிடைத்த ஒரு இடம்தான் பிக் பாஸ் அதில் தனலட்சுமி தன்னுடைய திறமையை காட்டி எல்லா டாஸ்கியிலும் சரியாக விளையாடி தான் வருகிறார் ஆனாலும் சமூக வலைத்தளத்தில் தனலட்சுமி பற்றி பல்வேறு விதமான நெகட்டிவ் கருத்துக்களையும், தப்பான விஷயங்களையும் பலரும் பரப்பி வருகிறார்கள் .குறிப்பாக அவருடைய நண்பர்கள் என்று ஒரு சிலர் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதையெல்லாம் நம்ப வேண்டாம் என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications