பிக்பாஸ் அல்டிமேட்: இந்த வாரம் சிம்புவால் வெளியேற்றப்படும் நபர் இவரா?
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட்டில் கடந்த வாரம் நோ எலிமினேஷன் இருந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷனில் வெளியேற போகும் நபர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் எனும் 24 மணி நேரமும் கண்டு களிக்கும் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் 14 போட்டியாளர்கள் இருந்த நிலையில் இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் வெளியேறியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 5
பிக்பாஸ் 5 சீசன்களையும் மிகவும் ஆர்வமாக பார்த்து வந்த மக்கள் தற்போது 24 மணி நேரமும் ஹாட் ஸ்டாரில் ஆர்வமாக பார்க்கவில்லை என தெரிகிறது. எப்போதும் அழுகை, காதல், கிசுகிசு என பார்ப்பதற்கே அறுவறுப்பாக இருப்பதாக நெட்டிசன்கள் சொல்கிறார்கள். இதைத்தான் வனிதா விஜயகுமாரும் கூறினார்.

வனிதா விஜயகுமார்
கமல் விலகியதை அடுத்து வனிதா விஜயகுமார் தாமாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார். கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தியும் புதிதாக கேபிஒய் சதீஷும் வைல்ட்கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ளனர். விக்ரம் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள கமல் வெளியேறியதை அடுத்து அந்த நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

எலிமினேஷன்
இதனால் கடந்த வாரம் எலிமினேஷன் நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மூன்று பேரை நாமினேட் செய்தனர். அதில் தாடி பாலாஜி, சுருதி, அனிதா சம்பத், ஜூலி, அபிராமி, சினேகன், தாமரை ஆகியோரில் யார் வெளியேற போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தாடி பாலாஜி
அந்த வகையில் இந்த வாரம் தாடி பாலாஜி வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் மூன்று பேர் எலிமினேஷன் என சொல்லப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு நிகழ்ந்தால் தாடி பாலாஜியுடன் சினேகன், அபிராமி அல்லது சுருதி வெளியேறுவர் என தெரிகிறது. கடந்த முதல் சீசனில் பெயரை கெடுத்து கொண்ட ஜூலி இந்த சீசனில் மக்களிடம் நன்மதிப்பை பெற முயற்சிக்கிறார். ஆனால் எப்ப பார்த்தாலும் ஒப்பாரி வைப்பது போல் அழுதுக் கொண்டே இருப்பது பார்ப்போரை எரிச்சலடையச் செய்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications