சிவகார்த்திகேயனிடம்.. அடுத்த தளபதி நீங்களா?ன்னு கேட்ட ரசிகர்கள்.. டக்னு வந்து விழுந்த பதிலை பாருங்க
சென்னை: அடுத்த தளபதி நீங்கள்தானா? என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சிவகார்த்திகேயன் தந்துள்ள பதில்தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த பதிலை விஜய்யின் ரசிகர்களும் உற்று கவனித்து மனம் குளிர்ந்துபோய் உள்ளனர்.
மாஸ் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் நடிகர் விஜய்யின் "கோட்" படத்தில் கேமியோ ரோல் ஒன்றில் நடித்திருந்தார்... அதில், வில்லனை சிவகார்த்திகேயனிடம் நடிகர் விஜய் ஒப்படைக்கும் காட்சியில், தன் கையில் இருந்த துப்பாக்கியையும் சிவகார்த்திகேயனிடம் கொடுப்பார்.
அப்போது சிவகார்த்திகேயன், "இதைவிட பெரிய வேலைக்கு போறீங்கனு நினைக்கிறேன். இனி இதை நான் பாத்துக்குறேன்" என்று பேசிய வசனம் சோஷியல் மீடியாவில் வைரலானது.. இதையடுத்து, இனி அடுத்த தளபதி என்று சிவகார்த்திகேயன் சூசகமாக சொல்வதாக பலர் தாறுமாறாக எழுதிவிட்டனர்..

சிவகார்த்திகேயன்: இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது, "அடுத்த தளபதி நீங்கள்தானா" என்று கூட்டத்திலிருந்து ரசிகர்கள் கூச்சலிட்டனர். அப்போது நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விஜய்யுடன் நடித்ததில் மகிழ்ச்சி. அந்த வாய்ப்பை கொடுத்த வெங்கட் பிரபுவுக்கு நன்றி.
இங்கு ஒரே தளபதிதான்.. ஒரே சூப்பர் ஸ்டார்தான்.. ஒரே தல தான். ஒரே உலக நாயகன் தான். அதனால், அவர்களின் அடுத்த இடத்தில் நான் என்ற பேச்சுக்கே இங்கு இடம் கிடையாது. அவர்கள் சினிமாவை எல்லாம் பார்த்துதான் நான் சினிமாவிற்கு வந்திருக்கிறேன்.
தவறான விஷயம்: அவர்களை போல நான் படங்கள் செய்து, ஹிட் கொடுத்து ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால், அவர்களாகவே மாற வேண்டும் என்று நினைக்கக்கூடாது. அது சரியானதும் கிடையாது. அது மிகவும் தவறான விஷயம் என்று நான் நினைக்கிறேன்" என்றார். இப்போது சிவகார்த்திகேயன் அளித்த இந்த பதிலும் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
இதனிடையே, சிவகார்த்திகேயன் - சாய்பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் "அமரன்" படம் விரைவில் திரைக்கு வரப்போவதால், இதற்கான புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் புவன் அரோரா மற்றும் ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷியாம் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயேன் நடித்திருக்கிறார்.
எதிர்பார்ப்பு: எனினும், சாய்பல்லவி, இந்து ரெபாக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், இதற்கான எதிர்பார்ப்பு கூடிவருகிறது. இந்த படம் தீபாவளியை பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications