முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்..?ஜீவாவும் மாறுகிறாரா? இனி புது கதாநாயகன் இவரா..?இனி கதை இதுதானாம்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த சீரியலில் ஜீவா கேரக்டரில் நடிக்கும் வெங்கட் ரங்கநாதன் சீரியலை விட்டு விலக போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் யார் ஜீவா கேரக்டரில் இனி நடிக்கப் போகிறார் என்ற தகவல்களும் பரவி வருகிறது. அதை பற்றி பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து அண்ணன் தம்பி கதைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வந்தது. மத்த சீரியல்களை போல இந்த சீரியல் பல திரைப்படங்களின் காப்பி பேஸ்ட் ஆக இருந்தாலும் இந்த கதைக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அண்ணன் தம்பிகள் நிஜ வாழ்க்கையில் ஒற்றுமையாக இருக்கிறார்களோ இல்லையோ இந்த சீரியலில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பல குடும்ப ரசிகர்கள் இந்த சீரியலுக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில் தற்போது இந்த சீரியலில் அடுத்தடுத்து அண்ணன் தம்பிகள் பிரிந்து இருக்கின்றனர். இது ஒரு விதத்தில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இருப்பது தற்போதைய டிஆர்பி யில் தெரிந்து கொள்ள முடிகிறது.
கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் நன்மை தீமைகளை இந்த சீரியலில் கண்கூடாக காண முடிகிறது. பல பேர் கூட்டு குடும்பமாக இப்போதைய சூழ்நிலையில் இல்லாமல் இருக்கும் நிலையில் இதற்கு காரணம் பணம் மற்றும் மனம் விட்டு பேசாதது தான் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் இதுவரைக்கும் அமைதியின் சொரூபமாக தன்னுடைய அண்ணன் அண்ணி தான் உலகம் அவர்களுடைய பேச்சு வேதவாக்கு என மனைவியின் பேச்சை கூட கவனிக்காமல் இருந்து வந்த ஜீவா இப்போது அடுத்து அடுத்து பட்ட அவமானங்கள் அதற்குப் பிறகு கேள்வி கேட்ட விதம் பலரையும் கவர்ந்திருந்தது.
அதனாலையே இந்த சீரியலில் அதிகமான ரசிகர்கள் ஜீவாவுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் திடீரென முடிவுக்கு வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அண்ணன் தம்பிகள் இப்போது பிரிந்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் அவர்கள் அனைவரும் இணைய இருக்கிறார்களாம். ஜீவாவும் மீனாவும் குடும்பத்தை விட்டு தனியாக போயிருக்கும் நிலையில் தற்போது ஜீவாவின் பெயரில் அவருடைய மாமனார் மொத்த சொத்தையும் எழுதி வைத்திருக்கிறார். இதே நேரத்தில் தன்னுடைய அண்ணன் தனியாக கஷ்டப்படுவதை பார்த்து தாங்க முடியாமல் ஜீவா தவிக்கிறார். இதனை தொடர்ந்து தன்னுடைய அண்ணனுக்காக உதவி செய்ய ஜீவா இருக்கிறாராம். அது போல ஜீவாவை மீண்டும் மூர்த்தியும் புரிந்து கொள்ள இருக்கிறாராம்.

அது மட்டுமல்லாமல் ஐஸ்வர்யா தன்னுடைய கணவர் கண்ணனை கூட்டிக்கொண்டு தனியாக வந்திருக்கும் நிலையில் தற்போது அவருக்க வயிறு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்க இருக்கும் நிலையில் மருத்துவ வசதிக்காக கூட பணம் இல்லாமல் தவிக்க இருக்கிறார்களாம். அப்போது கதிர் தான் உதவி செய்ய இருக்கிறார். இதனால் மருத்துவமனையில் இருந்து வந்ததும் மீண்டும் தன்னுடைய குடும்பத்தோடு சேர இருக்கிறதாம். மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்ததும் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதுபோல இன்னும் ஒரு சில எபிசோடுகளில் ஜீவாவாக நடிக்கும் வெங்கட் விலகப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் என்னும் சீரியலில் வெங்கட் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதை தொடர்ந்து வெங்கட்டுக்கு பதிலாக இனி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்த அருண் இந்த சீரியலில் ஜீவாவாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல்களும் தற்போது பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது என்னும் ஒரு சில தினங்களில் தெரிந்து விடும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications