குருவாயூரில் மகள் மாளவிகா திருமணத்தில் மடிசார் புடவை! நடிகர் ஜெயராம் கொடுத்த ரியாக்ஷன் என்ன?
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் குருவாயூரில் நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகாவின் திருமணத்தில் அவர் மடிசார் கட்டியிருந்தது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக உள்ளவர் ஜெயராம். இவர் தமிழில் கூட நிறைய படங்களில் நடித்துள்ளார். மாமன் மகள், தெனாலி, பஞ்ச தந்திரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக கலாபவன் மணியின் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தார்.

இவர் செண்டை மேளம் வாசிக்கும் கலைஞரும் ஆவார். பல கோயில்களில் இவர் செண்டை மேளம் வாசித்திருக்கிறார். இவருக்கு 1992 ஆம் ஆண்டு பார்வதி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு காளிதாஸ், மாளவிகா ஆகிய மகன், மகள் உள்ளனர்.
இதில் காளிதாஸ் நடிகர் என்பது தெரியும். அவர் தனது குடும்பத்தினருடன் வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மாளவிகா, பாலக்காட்டை சேர்ந்த சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் நவ்னீத் கிரிஷ் என்பவரை காதலித்து வந்தார். அவர் இங்கிலாந்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் பச்சைக் கொடி காட்டிய நிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.
இந்த நிலையில் இவர்களது திருமணம் குருவாயூரில் கடந்த 3 ஆம் தேதி எளிமையாக நடந்தது. இதில் இரு வீட்டாரின் உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். மாளவிகா திருமண முகூர்த்தத்தின் போது அரக்கு நிறத்தில் மடிசார் புடவை அணிந்திருந்தார்.

மாளவிகா நவ்னீத்தின் திருமண புகைப்படங்கள் வைரலாகின. இதுகுறித்து ஜெயராம் மகள் மாளவிகாவின் மேக்கப் ஆர்டிஸ்ட் கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: குருவாயூரில் முதல் முறையாக ஒரு பொண்ணு மடிசார் கட்டி திருமணம் செய்து கொண்டது மாளவிகாதான்.
கேரளாவில் பெரும்பாலும் முண்டு புடவை, பட்டு புடவை கட்டிதான் திருமணங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் கூரை புடவைகளை கட்டியும் திருமணங்களுக்கு நாங்கள் மேக்கப் போட்டுள்ளோம். ஆனால் மடிசார் கட்டிவிட்டது இதுதான் முதல் முறை. எனக்கு இந்த பாக்கியம் கொடுத்த குருவாயூருக்கும் மக்களுக்கும் நன்றி.
தனது மகளை மடிசாரில் பார்த்தவுடன் ஜெயராம் சாரின் முகத்தில் ஒரு எக்ஸ்பிரஷனை பார்த்தேன். மனைவி பார்வதியும் மடிசாரும் மேக்கப்பும் நன்றாக இருக்கிறது என்றார். இதெல்லாம் எனக்கு ஆஸ்கர் விருது கிடைத்த மாதிரி. திருமணத்தில் மகளுக்கு தாலி கட்டும் போது ஜெயராம் சார் கண் கலங்கிவிட்டார்.

திருமணம் என்றாலே சடங்குகள்தானே, உணர்வுகள்தானே. இதில் பேச்சுக்கு வேலை இல்லை. ஜெயராம் தனது மகளையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் நினைக்கிறேன், தனது மகள் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்திருப்பார்.
ஜெயராம் குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பார்கள். மடிசார் புடவையில் ரொம்ப குறைவான மேக்கப்பை போட்டிருந்தேன். அதன் பிறகு கோல்டன் புடவையை மாற்றினார்கள். அதில் கண்களுக்கு அழகாக மேக்கப் செய்திருந்தேன். அவருடைய கண்களே பேசும் அளவுக்கு இருந்ததாக நிறைய பேர் பாராட்டினார்கள். கோல்டன் நிற புடவைக்காக கண்களுக்கு கோல்டன் ஸ்மோக்கி மேக்கப் செய்திருந்தேன். எல்லாரும் என்னை பாராட்டியது நான் செய்த பாக்கியம். இவ்வாறு மேக்கப் ஆர்டிஸ்ட் தெரிவித்தார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications