காதல் கோட்டை படத்தில் விஜய் நடிக்காத காரணம்! எஸ்.ஏ சந்திரசேகர் கேட்ட வார்த்தை.. பிரபலம் சொன்ன தகவல்
சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் பெரிய அளவில் வெற்றி அடைந்த காதல் கோட்டை திரைப்படத்தில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் கடைசியில் அது நடக்காமல் போனது காரணம் என்ன என்பது பற்றி தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
பொதுவாக ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கு பல நடிகை நடிகர்களுக்கு வாய்ப்புகள் வந்த போது அவர்களால் அந்த திரைப்படங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் நடிக்க முடியாமல் போய்விடுகிறது. ஆனால் பிறகு அந்த திரைப்படங்கள் அவர்களே எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி அடைந்ததும் ஐயோ நாம இதை மிஸ் பண்ணிட்டோமே என்று சிலர் வருத்தப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் ஒரு சில திரைப்படங்கள் எதிர்பாராத விதத்தில் சிலருக்கு கிடைத்த போது தான் அவர்கள் பெரிய அளவில் புகழின் உச்சிக்கு வந்திருக்கிறார்கள். அந்த மாதிரி தான் நடிகர் அஜித் உடைய வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது காதல் கோட்டை திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் நடிகை தேவயானி மற்றும் அஜித்தின் இயல்பான நடிப்பு அதிகமான ரசிகர்களை கவர்ந்தது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் அகத்தியன் இயக்கியிருந்த நிலையில் இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று இப்போது உள்ள காதலர்களையும் கூட இந்த திரைப்படம் ரசிக்க வைத்திருக்கிறது. பார்க்காமலேயே காதலிக்க முடியுமா? என்ற கேள்விக்கு இந்த திரைப்படத்தில் கடிதம் மூலமாகவே தங்களுடைய காதலை வளர்த்து கடைசியில் ஒன்று சேர்ந்தது பார்த்து பல ரசிகர்கள் ஏதோ தாங்களே காதலில் ஜெயித்தது போன்று பரவசப்பட்டு இருப்பார்கள்.
அதிலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் இன்று அளவிலும் ரசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் முதலில் இந்த திரைப்படத்திற்கான வாய்ப்பு அஜித்க்கு போகவில்லையாம். காதல் கோட்டை திரைப்படத்தை எடுப்பதற்கு முயற்சிகள் எடுத்த போது இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயை நடிக்க வைக்கலாம் என்று கதையை விஜயின் அப்பாவான இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரிடம் சொல்லி இருக்கிறார்கள்.
அப்போது முழு கதையும் கேட்டு முடித்த சந்திரசேகர் உங்களால் ஒரு ஆறு மாதம் வெயிட் பண்ண முடியுமா? என்று கேட்டாராம். இப்போது விஜய் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவரால் இப்போதைக்கு கால் சீட்டு தர முடியாது. குறைந்தபட்சம் ஒரு ஆறு மாதத்திற்கு பிறகு என்றால் விஜய் இந்த படத்தில் நடிப்பார் என்று எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார். ஆனால் இந்த திரைப்படத்தில் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் அவ்வளவு நாட்கள் படபிடிப்பை தள்ளி போட முடியாது என்று கூறிவிட்டாராம்.
பிறகு அகத்தியனிடம் இதுகுறித்து பேசியபோது அகத்தியனும் சரி வேற நடிகரை வைத்து நடிக்க வைக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு பிறகு தான் அஜித்திடம் பேச்சுவார்த்தை நடந்ததாம். கதையை கேட்டதும் அஜித் நான் நடிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அப்படித்தான் அந்த திரைப்படம் உருவானது என்று சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் காதல் கோட்டை திரைப்படம் உருவான விதம் குறித்து பேசி இருக்கிறார்.
ரஜினி, கமல் ஒற்றுமையாக நண்பர்களாக இருந்தாலும் அவர்கள் இருவருடைய ரசிகர்களும் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்வது போல தான் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்களும் கருத்து மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அஜித்துக்கு பெரிய வெற்றியாக அமைந்த காதல் கோட்டை படத்தில் முதலில் விஜய்தான் நடிக்க இருந்தார் என்று தெரிந்ததும் ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications