ஆகாஷ் ஏன் கண்ணன்கிட்ட பேசறான்.. அச்சச்சோ கதையே கெட்டுச்சு போக்கா!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலை பார்த்தவங்கள்ல பாதி பேர் நேத்து டென்ஷன் ஆயிட்டாங்க. இந்த ஆகாஷ் பையன் ஏன் கண்ணன் கிட்ட போயி பேசறான். அதான் சவுந்தர்யா கண்ணன் மாமாவைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லிட்டாள்ல...
அதிருக்கட்டும், ஆகாஷ் கண்ணன்கிட்ட அத்தனை பேசினானே.. எனக்கும், கண்ணன் மாமாவுக்கும் கல்யாணம் நடக்கத்தான் எங்க வீட்டுல பூஜை, பரிகாரம்னு செய்யறாங்கன்னு சவுந்தர்யா சொன்னதை கண்ணன்கிட்ட இந்த ராஸ்கல் ஆகாஷ் சொல்லவே இல்லை பார்த்தீங்களா...
என்னக்கா.. புலம்பறேன்.. ஒண்ணுமே சொல்லமாட்டேங்குறன்னு சீரியல் விரும்பி ஒரு பொண்ணு கேட்கறா...ஏண்டி... காதலிச்சவங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்றதுதானே நல்லது.நீ காதலிச்சவனை விட்டு குடுத்துருவியான்னு கேட்கறாங்க இன்னொரு சீரியல் விரும்பி.

நல்ல பொண்ணுதானேடி
இவ்வளவு புலம்புறியே... முத்து செல்வியும் நல்ல பொண்ணுதானே... அவ மனசுல தெரிஞ்சோ, தெரியாமலோ சின்னவரு ஆசையை வளர்த்தது உண்மைதானே.. நல்ல பையன் யாராச்சும் தாலி,கூரைப் புடவை, குங்கம சிமிழ்னு குடுத்தா உனக்கும் அவன் மேல ஆசை வராதா? பத்தா குறைக்கு வள்ளியா நடிச்சவ கழுத்துல தாலி வேற கட்டி இருக்கான் இந்த கண்ணன் பய...முத்து செல்விக்கும் ஆசை இருக்காதா.. யோசிச்சு பாருடி..

மனசு மாறிட்டாளேக்கா
என்னக்கா இப்படி பேசற.. சின்னவரு பத்தி முத்து செல்விக்கு ஏற்கனவே தெரியும்தானே... ரெண்டு பேருக்கும் கல்யாணம் மணமேடை வரைக்கும் வந்து நின்னு போச்சுன்னும் தெரியும்.. அவங்க கல்யாணம் நல்லபடியா நடக்கத்தான் வள்ளி திருமணம், கூத்துன்னு நடத்தறாங்கன்னு தெரியும்.. தகுதி இல்லாம இப்படி ஆசைப்படலமாக்கா...

என்ன தகுதிடி
காதலுக்கு என்ன தகுதிடி வேணும்.. இவ்வளவு நேரம் பேசினே சரிதான்னு ஒத்துக்கிட்டேன். ஏழையா பொறந்துட்டா காதலிக்க கூடாதா?... அவளும் வயசு பொண்ணுதானே... அவகிட்ட போயி தாலி, கூரைப் புடவை, குங்கம சிமிழ் கொடுக்கறது எவ்ளோ பெரிய தப்பு. ஏன் அவங்க ஐயன்கிட்ட கொடுக்கறது. இல்ல சின்னவரு அக்கா குடுக்கலாமில்ல... இந்த வயசுக்கு இதெல்லாம் தப்புதானேடி..வயசு கோளாறு, சின்னவரை முத்து செல்வி காதலிக்க ஆரம்பிச்சுட்டா..

காதல்
ஒண்ணு புரிஞ்சுக்க... காதல் எப்படி வரும், எப்ப வரும், புடிக்கலையா எப்படி போகும்ணே தெரியாது. காதல் வந்துருச்சு முத்து செல்விக்குள்ள, காதல் போயிருச்சு சவுந்தர்யாகிட்ட இருந்து...இப்போ கண்ணன் மேல காதல் வந்துருக்கு...யார் சேரணும்னு விதி இருக்கோ அவங்க சேருவாங்க.. நீ ஏன்டி கவலை படற? கெளம்பு கடைக்கு .போகணும்..

விரும்பிகள்
ஒண்ணுமில்லைங்க...சவுந்தர்யா கண்ணன் மாமா மேல ரொம்ப ஆசையில இருக்கா .. இந்த சமயத்துல ஆகாஷ் கண்ணனை சந்திச்சு என்னையும், சவுந்தர்யாவையும் சேர்த்து வைங்கன்னு சொல்றான். இதுல டென்ஷன் ஆயிட்டா தங்கச்சி.. அக்கா ஆறுதல் சொல்றாங்க...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications