அனிருத் கல்யாணம் கிரீஸில் நடக்க காரணம் இதுதானா? சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தாத பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனிருத்தின் இசையை தாண்டி இப்போது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தொழில் அதிபர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை அவர் திருமணம் செய்ய இருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களில் கவனத்தை ஈர்த்த நிலையில் இப்போது அவர்கள் திருமணம் கிரீஸில் நடக்கப்போவது பற்றிய விவாதமும் ஏற்பட்டிருக்கிறது.

பொதுவாகவே பிரபலங்களின் திருமணம் என்றால் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலோ அல்லது குடும்பத்துக்கு சொந்தமான இடங்களில் பிரமாண்டமாக நடத்துவது வழக்கம். ஆனால் அனிருத் - காவ்யா மாறன் திருமணத்திற்கு கிரீஸை தேர்வு செய்யப்பட்டிருப்பது பற்றி அதிகமாக பேசப்படுகிறது. இவ்வளவு பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் முக்கியமான தொடர்புகளை கொண்டவர்கள், இந்தியாவை விட்டுவிட்டு கிரீஸ்க்கு போக வேண்டிய அவசியம் என்ன? ஏன் சென்னையில் பிரமாண்டமாக நடத்த முடியாதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Anirudh Kavya Maran

ரகசியம்

அனிருத்தை பொறுத்தவரையில் தனது இசை வாழ்க்கை தொடர்பான விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டாலும் தனிப்பட்ட வாழ்க்கையை பெரும்பாலும் தனியாகவே வைத்திருக்க விரும்புகிறார். அவருடைய காதல் குறித்த செய்திகள் பல வருஷங்களாக வெளியாகி வந்தாலும் அது தொடர்பாக அவர் இதுவரைக்கும் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இந்த சூழலில் திருமணத்தையும் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் அமைதியாக நடத்த வேண்டும் என்று முடிவு செய்து இருக்கலாம்.

அனிருத் காவியா திருமண பின்னணி

அதுவும் கிரீஸில் திருமணம் நடைபெறும் போது திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் ஒரு சில நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். அதுவே சென்னையில் திருமணம் நடந்தால் திரையுலகம், அரசியல் தொழில் அதிபர்கள் என பல தரப்பினரும் வரக்கூடிய சூழல் இருக்கும். போட்டோக்கள், வீடியோக்கள் என திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்வும் உடனுக்குடன் இணையத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. ஆனால் வெளிநாட்டில் ஒரு குறிப்பிட்ட விருந்தினர் பட்டியலுடன் நிகழ்ச்சி நடத்தும்போது அந்த தனிப்பட்ட சூழலை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும். இதுவும் கிரீஸ் தேர்வுக்கு பின்னால் இருக்கக்கூடிய ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

கிரீஸ் செலக்ட் செய்ய காரணம்

பிரபலங்கள் வெளிநாட்டில் திருமணம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தால் இத்தாலி, துபாய், மாலத்தீவு போன்ற பல இடங்களை தேர்வு செய்வார்கள். ஆனால் அனிருத் காவியா திருமணத்துக்காக கிரீஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பது கொஞ்சம் வித்தியாசமான முடிவாகவே இருக்கிறது. கிரீஸ் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அழகான கடற்கரைகள், நீல நிற கடல், வெள்ளை நிற கட்டிடங்கள், மலைப்பகுதிகள் என இயற்கை அழகுதான். குறிப்பாக கடற்கரையையில் திருமண நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்ற இடங்கள் அங்கு இருக்கின்றன. நவம்பர் மாதத்தில் அங்குள்ள கிளைமேட் மற்றும் இயற்கை சூழலும் நிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி நடத்த உதவியாக இருக்கலாம்.

இப்போது வரைக்கும் வெளியான தகவலின்படி அனிருத் மற்றும் காவியாவின் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்கு ரஜினிகாந்த் குடும்பத்தினரும், மு க ஸ்டாலின் குடும்பத்தினர் என சிலர் மட்டும் கலந்து கொள்வதாகவே தகவல் கிடைத்திருக்கிறது. கிரீஸில் திருமண நிகழ்ச்சி முடிந்த பிறகு சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. வரும் நவம்பர் 21-ம தேதி வரவேற்பு நடப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+