Anirudh: அனிருத்தின் கூவத்தூர் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை.. பனையூர் பாபு எம்எல்ஏ வழக்கில் அதிரடி தீர்ப்பு
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் (Anirudh Ravichander), ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட தமிழகத்தின் முன்னணி நடிகர்களின் ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இன்னும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அண்மையில் கூட ரஜினி நடிப்பில் வெளியான கூலி படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் சென்னையை அடுத்த ஈசிஆர் சாலையில் உள்ள கூவத்தூரில் நாளை இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த்தின் உறவினர் மகனான அனிருத் தனுஷின் 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதன்பிறகு அவர் இசையமைத்த பல திரைப்படங்கள் வரிசையாக ஹிட்டாகின. அவரது சினிமா ஆல்பங்கள் பல மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இதையடுத்தது படிப்படியாக உயர்ந்த அனிருந்த, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

அனிருத்தின் இசை நிகழ்ச்சிகள்
விஜய் நடித்த லியோ, அஜித்துக்கு விடாமுயற்சி, கமலுக்கு விக்ரம், ரஜினிக்கு கூலி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்துள்ளார் அனிருத். சமீபத்தில் வெளியான 'கூலி' திரைப்படத்தின் பாடல்கள் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது.அனிருத் படங்களுக்கு இசையமைப்பதை தாண்டி, அடிக்கடி தனிப்பட்ட இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் ஏரளமான இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். தமிழ்நாட்டிலும் அவ்வப்போது இசை நிகழ்ச்சி நடத்தி வந்துள்ளார். தற்போது அனிருத் சென்னையிலும் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.
அனிருத் இசை நிகழ்ச்சி
சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கூவத்தூர் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் 'ஹுக்கும்' (Hukum) எனும் பெயரில் அனிருத்தின் மாபெரும் இசை நிகழ்ச்சி நாளை நடைபெற இருப்பதாக அறவிக்கப்பட்டுள்ளளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டிருந்தார். பல்லாயிரகணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையும் நடந்தது.
பனையூர் பாபு எம்எல்ஏ வழக்கு
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறி இந்த இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று காலை முறையீடு செய்தார். இதை தொடர்ந்து, மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் இன்று பிற்பகல் 2:15 மணிக்கு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு ஆட்சியர் பதில்
எனவே பிற்பகலில் விசாரணைக்கு வரும் போது, அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டியதிருக்கும். அரசு தரப்பு அதாவது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அனுமதிதரவில்லை என்பது உறுதியானால் நிகழ்ச்சிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேநேரம்அரசு தரப்பு அனுமதி அளித்ததால் நிகழ்ச்சிக்கு நடைபெற சிக்கல் ஏற்படாது என கூறப்படுகிறது.
80 கிமீ தள்ளி நிகழ்ச்சி
இதே சென்னை ஈசிஆர் சாலையில் கடந்த இரண்டுக்கு முன்பு ஏஆர் ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலால் குளறுபடி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெரிய நிகழ்ச்சி நடத்தும் விஷயத்தில் அரசு கவனமாக இருக்கிறது. இந்த நிலையில் அனிருத் இசை நிகழ்ச்சி சென்னையில் இருந்து கிட்டதட்ட 80 கிமீ தள்ளியே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications