Eeramana Rojaave: முதலிரவு ரூமில் எதுக்குங்க மெழுகு வர்த்தி... இதுல புள்ளீங்கோ வேற!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் ஒரு வழியா மலருக்கும் வெற்றிக்கும் முதலிரவுன்னு வெளியில தெரிஞ்சுபோச்சு. ஆனா, வெற்றிக்கு மட்டும் தெரியலை. மலர் சர்ப்ரைஸா முதலிரவுக்கு தயாராகிறாள். முதலிரவு அலங்காரத்தில் எக்கச்சக்க மெழுகு வர்த்திகள்...
மலருக்கும் வெற்றிக்கும் முதலிரவு நடக்க கூடாதுன்னு வெற்றியை காதலிச்ச அஞ்சலி அப்பா வீட்டில் வச்சு இருந்த ஃபாரின் சரக்கு ரெண்டு பாட்டில் எடுத்துட்டு வந்து வெற்றிகிட்டே கொடுக்கிறாள். வெற்றி வேணாம்னு சொல்ல சொல்ல அஞ்சலி கொடுத்துட்டு போயிட்டா.
ரெண்டு பாட்டிலை என்ன செய்வதுன்னு யோசிச்ச வெற்றி மாமாவுக்கும் இதயக்கனிக்கும் அந்த பாட்டிலை காண்பிக்கிறான்.. அவங்க அட புள்ளீங்கோ என்று சொல்லி குதூகலிக்கறாங்க அவங்க குடிக்க.. இவன் வீட்டுக்கு போயிட்டான்.

முதலிரவு அலங்காரம்
வீட்டில் எல்லாரும் பூர்வீக வீட்டுக்கு போயிடறாங்க. இங்கே மலரை மட்டும் தனியா விட்டுட்டு. ஏன்னா அன்னிக்கு ராத்திரி ரெண்டு பேருக்கும் முதலிரவுன்னு மலர் அப்பா, மாமனாருக்கு போன் செய்து சொல்லிடறார். வெற்றிக்கு சர்பிரைசா இருக்கட்டும்னு மலர் எல்லார்கிட்டயும் இதையே சொல்றா. அவங்களும் வெற்றிக்கு சொல்லலை. இவள் முதலிரவு அறையை பூக்கள் கொண்டு அலங்கரித்து, அதோட நின்று இருக்கலாம்.

மெழுகுவர்த்தி எதுக்கு
அங்கங்கே மெழுகுவர்த்தியை நிறைய ஏத்தி வச்சு அலங்கரிச்சு வச்சு இருக்கா மலர். பூ ஓகே.. சீரியல் செட் பல்புகள் இருந்தால் பரவாயில்லை. இங்கே மலர் நிறைய மெழுகுவர்த்தி ஏத்தி வச்சு இருக்கா. முதலிரவு அறைக்குள் மெழுகுவர்த்தி நமது கலாச்சாரத்தில் இல்லை. இதை ஏற்றி வைப்பதும் ஆபத்துத்தானே.. இதெல்லாம் பார்த்து யாரும் ட்ரை பண்ணினா என்ன பண்ணுவீங்க?

பாட்டில் புள்ளீங்கோ
வெற்றி தனது மாமா மற்றும் இதயக்கனிக்கு இந்த சரக்கு பாட்டில்களை கொடுக்க, அவங்க டேய் புள்ளீங்கோ டா.. அதுவும் ரெண்டு ஃபாரின் புள்ளீங்கோன்னு சொல்லி குதூகலிக்கறாங்க. பாட்டிலுக்கு இப்படியும் ஒரு பேரா? வெற்றி குடிச்சுட்டு இன்னிக்கு முதலிரவு நடக்காமல் இருக்கும்னு சந்தோஷமா அந்த ராத்திரி நேரத்திலும் வெற்றியின் தோட்டத்து வழியில் நிற்கிறாள் அஞ்சலி.

வெற்றி குடிக்கலை
வெற்றியின் மாமாவும், இதயக்கனியும் குடிச்சுட்டு ஆடிக்கிட்டே வர, வெற்றி தோட்டத்தில் மட்டையாகி கிடப்பான்னு தப்புக் கணக்கு போட்டு விடுகிறாள் அஞ்சலி. ஆசையா இதயக்கனிக்கிட்டே கேட்டால் அவன் வெற்றி குடிக்கலை... அவனுக்கு இன்னிக்கு முதலிரவு.. நாங்க அவங்களை டிஸ்டர்ப் பண்ணைக் கூடாதுன்னு பூர்வீக வீட்டுக்கு போறோம்னு சொல்றான். வயிறு எரிய நிற்கிறாள் அஞ்சலி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications