பவுர்ணமிக்குத்தான் அப்பான்னா பயம்... ராம்கிக்கு என்னா உடைச்சு பேசலாமே...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் இப்படியும் ஒரு அப்பா,இப்படியும் ஒரு பொண்ணு இருப்பாங்களான்னு சலிப்பா இருக்கு..

பவுர்ணமி பிறந்தப்போதான் மனைவி வாசுகி இறந்துட்டாங்க.அதனால அப்பா சக்கரவர்த்திக்கு பவுர்ணமியை கண்டாலே ஆகாது.

பவுர்ணமி முன்னால வந்தா கூட தான் போகும் காரியம் உருப்படாதுன்னு ஈவு இரக்கமில்லாமல் மகளைத் திட்டுவதில் சக்ரவர்த்தி வல்லவர்.

ராம்கி பவுர்ணமி

ராம்கி பவுர்ணமி

ராம்கியும், பவுர்ணமியும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்.ஒரு நாள் ராம்கி பவுர்ணமியை சந்தித்த போது, உடன் படித்ததை நினைவு கூறுகிறான். அவனுக்கு அன்றிலிருந்தே பவுர்ணமி மீது காதல் வந்துருது. எப்படா சொல்லலாம்னு காத்திருந்தப்போ, ராம்கி வளர்க்கும் ஒரு சிறுவன், காதல் கடிதம் கொண்டு போயி கொடுக்கறேன்னு சொல்லிட்டு,ச க்ரவர்த்திக்கிட்ட இது உங்க மக்களுக்கு என் அண்ணன் எழுதிய காதல் கடிதம்னு சொல்லி குடுக்கறான்.

பவானி ராம்கி

பவானி ராம்கி

பவானிக்கு ராம்கியை பிடிச்சு போகுது...கடைத் தெருவில் ஒரு நாள் அவனைப் பார்த்துட்டு அவன் மீது காதல் வருது,. யதேச்சையாக அவனை அடிக்கடி சந்திக்க நேர்ந்ததில், அவன் மீது தனக்கு காதல் என்று அப்பா சக்கரவர்த்தியிடம் பவானி சொல்லிடறா. .அதனால, அப்பா சக்ரவர்த்தியும் தன் மகளுக்கானக் காதல் கடிதம்னு பவுர்ணமிக்கு குடுத்த காதல் கடிதத்தை பவானியிடம் குடுத்துடறார் அப்பா.பவானிக்கு ராம்கியின் காதல் கடிதத்தைப் பார்த்து ரொம்ப சந்தோசம்.

ராம்கி பெற்றோரும் சக்கரவர்த்தியும்

ராம்கி பெற்றோரும் சக்கரவர்த்தியும்

சக்ரவர்த்திக்கிட்ட ராம்கி பெற்றோர் தங்களது மகனுக்கு பவானியை சம்மந்தம் பேசி முடிச்சுடறாங்க. ஆனா, ராம்கிக்கு பவுர்ணமி மேலதான் காதல்.தன் காதலை பவுர்ணமிகிட்ட சொல்லிடலாம்னு அவளை வர சொல்லி பேசிகிட்டு இருக்கான் ராம்கி.அப்போது பவுர்ணமியின் அப்பா பார்த்துடறார். அவரை ராம்கியும் பார்த்துடறான்.

பயம் எதுக்கு ராம்கிக்கு

பயம் எதுக்கு ராம்கிக்கு

உடனே பவுர்ணமி நீ வீட்டுக்கு போ...நான் அப்புறமாகூப்பிடறேன்னு சொல்றான்.பேசணும்னு வர சொல்லிட்டு போ சொல்றானேன்னு யோசிச்சுகிட்டே போயிடறா பவுர்ணமி.. பவுர்ணமிக்கும் ராம்கி மீது ஆசை வருது.ராம்கி பைக்கில் ஏறப்போக சக்ரவர்த்தி வந்து அந்த பொண்ணுகிட்ட என்ன பேசினே ராம்கின்னு கேட்கறார்.அது அவர் பெத்த பொண்ணுதான்...

அங்கிள் நான் பேசலை

அங்கிள் நான் பேசலை

அங்கிள் நான் பேசலையே...அவ ஒரு அட்ரஸ் கேட்டா அதை சொன்னேன் அவ்ளோதான்...அவளை உங்களுக்கு தெரியுமா அங்கிள்னு ராம்கி கேட்க, எனக்கு தெரியாது...தேவை இல்லாதவங்க கிட்ட நாம அதிகமா பேச்சு வச்சுக்கிட்டா அந்த பழக்கம் நமக்கு நன்மை செய்யாம போயிரும்னு சொல்றார் சக்ரவர்த்தி.

துரத்து பவுர்ணமியை

துரத்து பவுர்ணமியை

என்ன பண்றது அப்பாக்களுக்கு மகள்கள் என்றால் பெரும் இஷ்டம் என்பார்கள்..இங்கு அப்படியே உல்டாவாக இருக்கிறதே...பவுர்ணமியை எங்காவது துரத்திட்டு, மகள் பவானிக்கு கல்யாணம் செய்துடனும்னு பொண்டாட்டிகிட்டே மனசாட்சியே இல்லாம பேசிகிட்டு இருக்கார் சக்ரவர்த்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+