தமிழில் கிரைம் த்ரில்லர்கள் ஏன் வெற்றி பெற தடுமாறுகின்றன? என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

தமிழில் குற்றப் படம் (Crime Film) ஏன் வெற்றிபெற கடினமாகிறது. மலையாள சினிமா குற்றப் படங்களுக்கு தனித்துவமான கதைக்களம், வலுவான திரைக்கதை, இயற்கையான நடிப்பு ஆகியவை மூலம் ரசிகர்களை ஈர்க்கிறது. த்ரிஷ்யம், ஜன கன மன, Kannur Squad போன்றவை சமூக அரசியல் மற்றும் உணர்வுபூர்வ அம்சங்களை சேர்த்து கதையை வளமாக கட்டமைக்கின்றன. ஆனால் தமிழ் சினிமாவில், ராட்சசன், போர் தொழில் போன்ற சில படங்களைத் தவிர, மற்ற குற்றப் படங்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. காரணமாக, அதிகமான மசாலா சேர்ப்பு, கதையின் ஆழமின்மை, மற்றும் சில நேரங்களில் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஒவ்வாத பாணி ஆகியவை கூறலாம். தமிழ் ரசிகர்கள் விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த, உணர்ச்சிப் பிணைப்புடன் கூடிய குற்றப் படங்களை விரும்புகிறார்கள்.

தமிழ் ரசிகர்களின் - பரபரப்பு (Mass) எதிர்பார்ப்பு: தமிழ் சினிமாவில் அதிகம் பார்ப்பதோ மாஸ் மசாலா திரைப்படங்கள். ஹீரோயிசம், சென்டிமென்ட், ஆக்ஷன், பஞ்ச் டயலாக், பாடல்கள் போன்றவை தமிழ்க் கடவுளாகக் கருதப்படும் நடிகர்களின் படங்களில் முக்கியம். குற்றப் படங்கள் இயல்பாகவே அதிக மெல்லிய, உண்மைச்சார்ந்த கதைக்களத்தை கொண்டிருக்கும். இந்த இரண்டிற்கும் இடையில் தமிழ்ப் பார்வையாளர்கள் பெரும்பாலும் புறக்கணித்து விடுகிறார்கள்.

television cinema entertainment

தெளிவான திரைக்கதை (Screenplay) இல்லாத குறை: மலையாள குற்றப் படங்கள் ஏன் வெற்றி பெறுகின்றன என்றால், அவற்றின் திரைக்கதை மிகச் சிறப்பாக இருக்கும். குற்றம் நிகழும் விதம், விசாரணை முறை, சந்தேகத்தின் அடுக்குகள், திருப்பங்கள் (twists) அனைத்தும் திட்டமிட்டவாறு அமைக்கப்படும். மலையாள திரையுலகில் எழுத்தாளர்களுக்கு (Scriptwriters) முக்கியத்துவம் அதிகம். ஆனால், தமிழில் திரைக்கதை பல இடங்களில் உண்மைத்தன்மையற்ற விறுவிறுப்பை மட்டுமே தர முயல்கின்றன.
உதாரணம்:

ராட்சசன்' - சீரியல்கில்லர் கதையாக இருந்தாலும், கதை நகரும் விதம் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது. 'போர் தொழில்' - மனநோயாளிகள் குறித்த அழுத்தமான விசாரணை கதையாக இருந்தது.

விசாரணை முறைகள்: மலையாள குற்றப் படங்கள் விசாரணையை (investigation) நுணுக்கமாக சித்தரிக்கின்றன. போலீசாரின் உளவுத்திறன், குற்றம் கண்டறியும் வழிமுறைகள் அனைத்தும் நம்பகத்தன்மையுடன் இருக்கும். ஆனால், தமிழ் குற்றப் படங்களில் அதிகம் மிரட்டல், காவல்துறையின் மிருகத்தனமான விசாரணை, அடிதடிகள் போன்றவை மட்டுமே முக்கியமாக இருக்கும். இது நம்பகத்தன்மையற்றதாக தெரிகிறது.

உதாரணம்: 'த்ரிஷ்யம்' - ஒரு சாதாரண குடும்பத் தந்தை குற்றத்தை மூடிவைக்க என்ன செய்கிறார் என்பதை நுணுக்கமாக காட்டுகிறது. 'ஜன கன மன' - காவல் துறையின் இரட்டை முகம் பற்றி பேசும் நேர்மையான படம்.

படைப்பு சுதந்திரம் & உண்மைத்தன்மை : மலையாள திரையுலகம் உண்மையைச் சித்தரிக்க தயங்காது. சமூக அரசியல் பிரச்சனைகளை நேரடியாகக் கூறுவதில் பயம் இல்லை. ஆனால், தமிழில் குற்றம், அரசியல், பொருளாதாரம் போன்றவை ஆழமாகச் சொல்லப்படுவதில்லை. தமிழில் குற்றப் படம் வெற்றி பெற வேண்டுமென்றால், அதை "மாஸ்" ஆக மாற்றும் பழக்கம் உள்ளது. ஆனால், மலையாளத்தில் நல்ல கதைக்கு நம்பிக்கை அதிகம். அழகிய விசுவாசமான கதையம்சம் இருந்தால், பாக்ஸ்ஆபிஸில் வெற்றி பெறும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

தமிழ் குற்றப் படங்களின் தரத்தை உயர்த்த, மலையாள சினிமாவைப் போல் நுட்பமான திரைக்கதைகளை அமைத்தல் முக்கியம். த்ரில்லர் படங்களில் வெறும் விறுவிறுப்பை மட்டுமல்ல, உண்மைத்தன்மையையும் கொண்டு வர வேண்டும். விசாரணை முறைகள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். மேலும், கதைகளில் உண்மையான அரசியல், சமூக பின்னணிகளை சிறப்பாக இணைத்தால், தமிழ் சினிமாவில் குற்றப் படங்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும். ஹீரோயிசத்தை தவிர்த்து, நிஜத்தன்மையை அளித்தல் மிக அவசியம்.

தமிழ் சினிமாவும் அடுத்த கட்டமாக குற்றப் படங்களின் தரத்தை உயர்த்தி, உண்மைத்தன்மை நிறைந்த திரைக்கதைகளை உருவாக்கினால், இது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தையும், தமிழ் சினிமாவுக்கு புதிய உயரத்தையும் கொண்டு வரும்.

-குரு கிருஷ்ணன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+