சிம்பு தான் என்னுடைய முதல் மகன்.. ரகசியத்தை வெளிப்படையாக உடைத்த நடிகை சரண்யா பொன்வண்ணன்
சென்னை: நடிகை சரண்யா பொன்வண்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்பு தான் என்னுடைய முதல் மகன் என்று கூறி இருக்கிறார்.
தான் கதாநாயகியாக நடித்துவிட்டு பிறகு மீண்டும் நடிக்க வந்த நிலையில் தான் நடித்த முதல் திரைப்படத்தில் சிம்பு தான் என்னுடைய மகன் என்று கூறி இருக்கிறார்.
தற்போது முன்னணி நடிகர்கள் பலருக்கும் அம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தாலும் தான் சிம்புவவடன் நடித்த நினைவுகள் பற்றி சரண்யா பொன்வண்ணன் பகிர்ந்து இருக்கிறார்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் சமீபத்தில் அதிகமான அம்மா கேரக்டரில் பல நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு வெகுளியான அம்மாவாகவும், மிரட்டலான அம்மாவாகவும் இவரை தவிர வேற யாராலும் நடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை தத்துரூபமாக காட்டிக் கொண்டிருக்கிறார்.
பல பெண்கள் இப்படி ஒரு மாமியார் நமக்கு கிடைக்க வேண்டும் என்று சரண்யா பொன்வண்ணன் பார்த்து கூறிக் கொண்டிருந்தாலும் இவர் அந்த அளவிற்கு வயசு ஆகாமல் இருக்கும் நிலையிலே இவர் ஒரு அம்மாவாக நடிக்க வந்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் மணிரத்தினம் இயக்கத்தில
ரிலீஸ் ஆன நாயகன் திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

முதல் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த சரண்யாவிற்கு அந்த நேரத்திலேயே அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. அதனால் குறுகிய காலத்திற்குள் இவரும் பெரிய அளவில் பிரபலம் அடைய தொடங்கினார். பாரதிராஜா இயக்கத்தில் கருத்தம்மா பசும்பொன் ஆகிய திரைப்படங்களில் நடித்த போது அப்படத்தில் உதவி இயக்குனராக இருந்த நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணனுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டது.
காதலித்து சில வருடங்கள் கழித்து 1995 ஆம் ஆண்டு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அதிகமாக திரைப்படங்களில் நடிக்காமல் விட்டு விலகிய சரண்யா 2000ஆம் ஆண்டில் மீண்டும் நடிப்பை தொடங்கினார். அந்த நேரத்தில் அவருக்கு அதிகமான அம்மா வேடங்கள் கிடைத்து வந்தது. அப்படித்தான் இவர் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்று தந்தது.

அதுபோல ராம் திரைப்படத்தில் நடிகர் ஜீவாவின் அம்மாவாக இவர் நடித்ததையும் மறக்க முடியாது, அது போல ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் அம்மாவாக நடித்ததையும் அது மட்டும் அல்லாமல் இவர் நடித்த பல திரைப்படங்களின் பெயர்களை சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் முதல் முறையாக அம்மாவாக நான் சிம்புவுக்கு தான் அலை திரைப்படத்தில் நடித்திருந்தேன். சிம்பு தான் என்னுடைய முதல் மகன். அம்மா கேரக்டரில் நடிக்க கேட்டபோது எனக்கு எதுவும் தோன்றவில்லை. நமக்கு சின்ன வயசா இருக்கிறதே, என்றெல்லாம் எனக்கு அப்போ யோசிக்க தோணல, ஏதோ நடிக்க கூப்பிடுறாங்க போய் நடித்து கொடுப்போம் என்று தான் நான் வந்தேன். இந்த அளவிற்கு எனக்கு தகுந்த கேரக்டர்கள் இப்போது வந்து கொண்டிருக்கிறது என்று அவர் பேசி இருக்கிறார்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications