எதிர்நீச்சல் நடிகையை துரத்தி அடித்த இயக்குனர்..!? நிஜ குணசேகரன் இவர்தானாம்.. மனம் திறந்த நடிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கேரக்டரில் நடிகை காயத்ரி கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நிஜ வாழ்க்கையில் குணசேகரனை போல யாரையாவது பார்த்திருக்கிறீர்களா என கேட்ட கேள்விக்கு ஜான்சி ராணி அதிரடி பதிலை கூறியிருக்கிறார்.

குணசேகரனை விடவும் மோசமான ஒரு இயக்குநரை பார்த்திருக்கிறேன் என்று காயத்ரி பேசிய கருத்து தற்போது பலருக்கும் வியப்பை கொடுத்திருக்கிறது.

 Why did director Bala shoot the ethirneechal serial Jhansi Rani

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பெரும் அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்த வரவேற்பும், எதிர்பார்ப்பும், விறுவிறுப்பும், சில நாட்களாகவே குறைந்து இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். அதற்கு காரணம் தொடர்ந்து ஆதிரையின் காதல் மற்றும் எங்கேஜ்மென்ட் விஷயங்களிலே கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

கதை எப்படி போய்க்கொண்டிருந்தாலும் அதில் மிரட்டும் வில்லனாக அனைவரையும் மிரட்டி கொண்டு இருப்பவர் என்றால் அது குணசேகரன் தான். அந்த குணசேகரனுக்கு ஆட்டம் காட்டும் நபராக அவருடைய தூரத்து தங்கச்சி முறையில் உள்ள ஜான்சி ராணி அறிமுகம் ஆகி இருக்கிறார். ஜான்சி ராணி இப்போ அறிமுகம் ஆகி சில மாதங்கள் தான் ஆகிறது ஆனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ஜான்சி ராணி கேரக்டரில் நடிகை காயத்ரி நடிப்பில் தத்துரூபமாக இருந்து வருவதாகவே பலரும் ஜான்சி ராணியை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஜான்சி ராணி சமீபத்தில் அதிகமான இன்டர்வியூ கொடுத்து வருகிறார். அப்படி ஒரு இன்டர்வியூவில் அவர் பல தகவல்களையும் பேசி இருக்கிறார். அதில் அவரிடம் நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் குணசேகரன் போன்ற ஆட்களை பார்க்கிறீர்களா என கேட்டு இருக்கிறார்கள்.

 Why did director Bala shoot the ethirneechal serial Jhansi Rani

அதற்கு டக்கென்று காயத்ரி அதைவிட மோசமான ஒரு ஆளையே பார்த்து இருக்கிறேன். அது இயக்குனர் பாலா தான். ஒரு முறை சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த செயலைப் பற்றி கூறியிருக்கிறார். பொதுவாக திரைத்துறையில் இயக்குனர் பாலாவுக்கு என்று ஒரு தனி முத்திரை இருக்கிறது. அவருடைய படங்கள் அதிக அளவில் ஹிட் ஆனாலும் அவரிடம் நடிக்கும் நடிகைகள் நடிகர்கள் அதிகமாக அடி வாங்குவதாக அவரைப் பற்றிய குற்றச்சாட்டு வலம் வருகிறது.

இந்த ஜான்சி ராணி ஆக நடிக்கும் காயத்ரி கிருஷ்ணன் ஆரம்பத்தில் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக வேலை செய்து இருக்கிறார். அப்படி என்றால் சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் கிரியேட்டிவ் விஷயங்களை அதற்கு ஏற்றவாறு ஐடியாக்களை சொல்லி அதனை மேம்படுத்துவது தான். அப்படிப்பட்ட நிலையில் அவர் இயக்குனர் பாலாவோடு சேர்ந்து பல படங்களில் வேலை செய்திருக்கிறார்.

சும்மாவே பாலாவோடு வேலை செய்வது பெரிய விஷயம் என்று பலரும் கூறுவது போல, இவரும் ஒருமுறை பாலாவோடு வேலை செய்து கொண்டிருக்கும்போது சாதாரண விஷயத்துக்கு பெரிய அளவில் கோபப்பட்டு கையில் கிடைத்ததை வைத்து என்ன அனுப்பிவிட்டார் என்றும் பல விஷயங்களை காயத்ரி பகிர்ந்து இருக்கிறார் தற்போது இது வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+