"அண்ணன் என்னடா தம்பி என்னடா" பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியது ஏன் தெரியுமா? செம சிச்சுவேஷன் சாங்!
சென்னை: "பழனி" எனும் படத்தில் இடம் பெற்ற "அண்ணன் என்னடா தம்பி என்னடா" என்ற பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியதற்கான காரணம் என்ன தெரியுமா? ஆஹா கவிஞர்! தனது சொந்த சந்தர்ப்பத்தை வைத்து பாட்டு வரிகளை எழுதியுள்ளார்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: கவிஞர் எழுதிய பாடல்களின் வரிகளில் பல காலம் கடந்தும் பொருந்திப் போவதுண்டு. Adidasனு ஒரு ஷூ Brand உங்களுக்கு தெரிந்திருக்கும். உலக ஷூ விற்பனையில் இரண்டாம் இடம். Nike முதல் இடம்.

ஜெர்மனியில் 1924ல் Adolf dasler, Rudolf daslerனு சகோதரர்கள் தன் அம்மாவோட லாண்டரி ரூம்ல ஒரு ஷூ தயாரிப்பு கம்பெனி தொடங்குகிறார்கள். டஸ்லர் பிரதர்ஸ் ஷூ கம்பெனி என்கிற பெயரில் தொடங்கப்பட்ட கம்பெனி ரன்னிங் செல்லப்பயன்படும் ஸ்போர்ட்ஸ் ஷூ தான் தயாரித்தார்கள். வியாபாரம் செமயா பிச்சுக்கிட்டு போகிறது.
அதற்குப் பின்னால் அவர்களின் உழைப்பு சாதாரணம் கிடையாது. பவர் இல்லாத சமயத்தில் சைக்கிள் பெடலை சுற்றி அந்தப் பவரை வைத்தெல்லாம் செய்திருக்கிறார்கள். 1936 ஒலிம்பிக் போட்டிக்கு ஷூ சப்ளை செய்யும் அளவுக்கு வளர்கிறார்கள்.
ஹிட்லரின் நாஜி படைகளில் பங்கெடுத்த இருவரும் நாஜிக்கள் மீது தீவிர ஆர்வம் கொண்டவர்கள். அடால்ஃபை விட ருடால்ப் தான் அதிக ஆர்வம் உடையவர். இரண்டாம் உலகப் போரில் அவர்கள் நகரம் தாக்கப்படும்போது அடால்ப் "அந்த டர்ட்டி பாஸ்டர்ட்ஸ் திரும்பவும் வந்து விட்டார்களா?" எனச் சொல்ல அந்த நேரத்தில் ருடால்ஃப்பும் குடும்பமும் படியேறும்போது இதை கேட்டுவிட தன்னைத்தான் சொல்கிறார் என ருடால்ப் கோபம் கொண்டு வெளியேறுகிறான்.
Ruda என்கிற பெயரில் அதே நகரத்தில் தனிக்கம்பெனி தொடங்குகிறான் ருடோல்ப். பின்னாளில் அது Puma என பெயர் மாற்றம் பெறுகிறது. சகோதரன் பிரிந்து விட்டதால் தன் பெயரிலிருந்து Adi das(ler) என புதிய பெயரில் கம்பெனியை நடத்துகிறான் அடால்ப்.
இரண்டு கம்பெனிகளுமே போட்டி போட்டுக்கொண்டு மார்க்கெட்டிங், விற்பனை என இறங்க நகரமே இரண்டாகிறது. Adidas ஆட்கள் ஒரு புறம். Puma ஆட்கள் மறுபுறம். Adidas ஆட்கள் Puma வீட்டில் பெண் எடுக்கமாட்டார்கள். ருடால்பின் வீட்டில் வேலை செய்ய யாராவது Adidas ஷூ அணிந்து வந்தால் ருடால்ப் 'முதலில் Puma ஷூ அணிந்து வா. அது இலவசம் தான்' என எடுத்துக் கொடுப்பானாம். அப்படி ஒரு Rivalry.
அந்த நகரத்து மக்களை மற்ற நகரத்து மக்கள் 'வளைந்த கழுத்தாளர்கள்' என அழைப்பதுண்டு. காரணம் எப்போது குனிந்து கொண்டு யார் எந்த ஷூ அணிந்திருக்கிறார் எனத் தெரிந்து கொண்டு பேசும் வழக்கமுடையவர்களாய் இருந்திருக்கிறார்கள். நகரத்தைப் பிரிக்கும் ஒரு நதி இரு மக்களையும் பிரிக்கிறது.
இப்படி இரு கம்பெனிகளும் அண்ணன்- தம்பிக் கம்பெனிகளாய் இருந்தும் போட்டி போட்டி தான். Adidasன் மூன்று கோடுகள் சிம்பலும், பூமாவின் புலி பாயும் சிம்பலும் பரம எதிரிகள்.
கண்ணதாசன் தன் அண்ணனிடம் அவசரத்துக்கு பணம் கேட்க அவர் தராததால் வேதனையில் ஒரு பாடல் எழுதினார்.
"அண்ணன் என்னடா..தம்பி என்னடா.. அவசரமான உலகத்திலே..
தாயும் பிள்ளையும் ஆன போதிலும் வாயும்
வயிறும் வேறடா
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பதும் ஏதடா....
பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா..
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா..
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
வருந்தவில்லையே தாயடா..
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா.."
எத்தனை நிதர்சனமான வார்த்தை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications