வேள்பாரி புத்தக விழாவில் ரஜினி கலந்து கொண்டது ஏன்? மதுரைக்கு நன்றிக் கடனா?
சென்னை: எழுத்தாளரும் மதுரை தொகுதி எம்பியுமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி புத்தக வெற்றி விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டது ஏன் தெரியுமா? மதுரைக்கும் ரஜினிக்கும் இடையே இருக்கும் நெருக்கம் என்ன?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: 'வேள்பாரி' புத்தகம் ஒரு லட்சம் பிரதி விற்ற விழாவில் தலைவர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசி இருந்தார். வேள்பாரியை எழுதி இருந்தவர் மதுரையை சேர்ந்த சு.வெங்கடேசன்.

ரஜினி இந்த விழாவில் கலந்து கொண்டது ரஜினியின் ஒரு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக அமைந்து விட்டது. ரஜினி 'மூன்று முடிச்சு' படத்தில் நடித்து முடித்த அந்த நேரத்தில் சில படங்களில் வாய்ப்புகள் வந்தன. அந்த சில படங்களில் கமல் நடித்திருந்தாலும் வேறொரு வளர்ந்து வரும் நடிகரும் அவரோடு நடித்துக் கொண்டிருந்தார்.
அவர் பெயர் ஜெயச்சந்திரன். 'ஆடு புலி ஆட்டம்' படத்தில் கமலோடு மேலும் மூன்று பேர் நடித்திருந்தனர். முத்தையா, கே.நடராஜ், ஜெயச்சந்திரன். பாலு என்கிற கதாபாத்திரத்தில் ஜெயச்சந்திரன் திருந்தி கேபரே டான்ஸர் அபர்ணாவை மணப்பதாக கதை வரும்.
அந்த நேரத்தில் ஜெயச்சந்திரன் தனி ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருந்தார். அவரையும், ரஜினியையும் மதுரைக்கு அழைத்திருந்தனர் மதுரை சேனா பிலிம்ஸார். அப்போது ஆசை அறுபது நாள், மூன்று முடிச்சு இரண்டு படங்களும் ஐம்பவதாவது நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ரஜினி என்கிற நடிகரை காரிலிருந்து இறங்கியதும் மேடை வரை தூக்கிச் சென்றனர் மதுரை ரசிகர்கள். அவர் கால் தரையில் படவே இல்லை. தன்னை மக்கள் அங்கீகரித்துவிட்ட நிகழ்வில் அவர் கண் கலங்கியதாக செய்தி உண்டு. அன்று மீனாட்சி அம்மன் கோவிலில் வணங்கி விட்டு சென்னை திரும்பிய ரஜினிக்கு பின் வெற்றி மேல் வெற்றி தான்.
77ல் அன்று நிகழ்ந்த விழாவில் ரஜினியை பார்த்துக் கொண்ட அன்றைய நிகழ்வில் இருந்த விஜயராஜ் என்கிற இளைஞர் பின்னாளில் விஜயகாந்த் ஆனார்.
படத்தில் இருக்கும் ஜெயச்சந்திரன் போன்று பல நடிகர்கள் இந்த மதுரையிலிருந்தே வந்தார்கள். ஆனால் உச்ச நடிகராக வளர்ந்து நீண்ட காலம் நிலைக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
ஜெயச்சந்திரன் 80க்கு பிறகு காணாமல் போனார். அன்று அவரை கால்படாமல் தூக்கிச் சென்ற மதுரையிலிருந்து ஒரு இலக்கியப் படைப்பு வெற்றி பெறும் போது அதற்கு ரஜினிகாந்த் அவர்கள் செய்த மரியாதை மதுரைக்கு செய்யும் மரியாதை.
காலம் எப்படியெல்லாம் முடிச்சுகள் இடுகின்றன. ஆச்சர்யம். ஒரு கலைஞன் இன்னொரு கலைஞனை அதாவது எழுத்தாளனை ஸ்லாகிப்பது அதுவும் ரஜினி போன்ற வெற்றியாளரிடமிருந்து வரும் வார்த்தைகளுக்கு தனி அழகு.
தலைவர்....கிரேட்.... இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications