ரஜினியோடு ஏன் மீண்டும் நடிக்கவில்லை.. பல வருடம் கழித்து மனம் திறந்த நடிகை ரேவதி
சென்னை: நடிகை ரேவதி தன்னுடைய திரைப்பட அனுபவங்கள் குறித்து பல வருடங்களுக்கு பிறகு மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் உடன் கை கொடுக்கும் கை திரைப்படத்தில் நடித்தது குறித்தும் அதற்குப் பிறகு ஏன் அவரோடு நடிக்கவில்லை என்பது பற்றியும் பல தகவல்களை கூறியிருக்கிறார்.
90's ரசிகர்களால் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர்தான் ரேவதி. இவர் மண்வாசனை என்ற திரைப்படத்தின் மூலமாக வெள்ளி திரையில் அறிமுகம் ஆகி முன்னணி கதாநாயகர்கள் பலரோடு பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இப்பவும் பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய திரை பயண வாழ்க்கை குறித்து பல தகவல்களையும் அனுபவங்களையும் கூறிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் நடிகர் நடிகர் ரஜினிகாந்தோடு மீண்டும் நடிக்காதது ஏன்? என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு குறித்து அவரது பதில் கூறியிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ரேவதி நடித்த கை கொடுக்கும் கை திரைப்படம் 1984 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் பார்வையற்ற ஒரு பெண் கேரக்டரில் ரேவதி நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்பார். அது பற்றிய அனுபவங்களை அவர் கூறியிருக்கிறார்.
அதில் கை கொடுக்கும் கை திரைப்படத்தில் இருந்த ரஜினிக்கும் இப்போது இருக்கும் ரஜினிக்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் இருக்கிறது. கை கொடுக்கும் கை திரைப்படத்தில் ஒரு மாணவனாக மகேந்திரன் சார் படத்தில் நடிக்க வந்தார். ரஜினிகாந்தின் பெரிய ஹிட்டான திரைப்படம் என்றால் முள்ளும் மலரும் அதுவும் மகேந்திரன் கூட உள்ள திரைப்படம் தான்.

கை கொடுக்கும் கை படத்தில் மென்மையான ஒரு ஸ்டூடண்ட் மாதிரி ரஜினிகாந்த் இருப்பார். நான் ஒரு புதுமுகம் என்னை பொருத்தவரைக்கும் ரெண்டு கேரக்டர் மாதிரி தான் நாங்க பண்ணுனோம். மகேந்திரன் என்ன சொல்கிறாரோ அதை நாங்கள் அப்படியே செய்தோம். அதில் ரஜினி சார் அப்போது ஒரு ஸ்டார் என்கிற குரோத் இருந்தது. ஆனால் அப்போதும் அவர் ரொம்ப சாதாரண ஒரு நடிகனா மகேந்திரன் சார் என்ன சொல்றாரோ அது அப்படியே செய்வார்.
அந்த படம் முழுக்கவே ரஜினி சார் ஒரு மாணவனாக தான் இருப்பார். ஆனால் அதற்குப் பிறகு எனக்கு அவரோடு நடிப்பதற்கான வாய்ப்பும், நேரமும் சரியாக அமையவில்லை. அதனால் தான் நான் அவரோடு நடிக்கவில்லை என்று அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தில் தாழம்பூவே வாசம் வீசு என்னும் பாடல் பலருடைய மனம் கவர்ந்தது என்று கூறி வருகின்றனர்.
-
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications