"இந்த காரணத்துக்காகவே"! இறக்கும் வரை கரும்பையே சாப்பிடாத நா.முத்துக்குமார்! பாவா செல்லதுரை உருக்கம்
சென்னை: ஒரு காரணத்திற்காக கரும்பை பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சாப்பிடாமலேயே இருந்துள்ளார் என எழுத்தாளர் பாவா செல்லதுரை மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். அவருடைய 7 வயதில் என்ன நடந்தது என்பது குறித்து பாவா செல்லதுரை விளக்கியுள்ளார்.

இதுகுறித்து எழுத்தாளர், பிக்பாஸ் பிரபலம் பாவா செல்லதுரை ஒரு நிகழ்ச்சியில் கூறியிருப்பதாவது: எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கையை பிடித்து நா.முத்துக்குமாரை அழைத்துச் சென்றுவிடலாம். அப்படி ஒரு வாழ்வியலை கடைசி வரை வாழ்ந்தவர்.
நா. முத்துக்குமார் மனதில் ஒரு போராட்டம் இருந்தது. அதாவது நான் கவிஞரா இல்லை மிகச் சிறந்த பாடலாசிரியரா என்ற போராட்டம் இருந்தது. கவிதைகளைவிட மிக பிரமாதமாக பாடல்கள் எழுதினார். அப்படியென்றால் நான் எழுதிய கவிதைகள் என்ற பெரிய கேள்வி இருந்தது.
இரு குதிரைகளில் சவாரி
இரு குதிரைகளில் ஒரே நேரத்தில் நா.முத்துக்குமார் சவாரி செய்து வந்தார். பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை நான் சொல்கிறேன். எனக்கு தெரிந்து தமிழ் திரைப்பட உலகில், தமிழ் பாடலாசிரியர்களில் முத்துக்குமார் அளவுக்கு தொடர்ச்சியாக வாசித்து கொண்டிருந்த, தீவிரமான வாசிப்பாளரை நான் பார்த்ததில்லை.
2 நாட்களில் படிக்கும் திறமை
எத்தனை பெரிய புத்தகத்தை கொடுத்தாலும் அதை 2 நாட்களில் முத்துக்குமார் முழுமையாக வாசித்து முடித்துவிடுவார். இதுதான் அவரது படைப்புகளுக்கு காரணமாக இருந்தது. வார்த்தைகளுக்காக ஏங்கி நிற்கும் நிலை இல்லை. சங்க இலக்கியத்திலிருந்து நவீன கவிதைகள் வரை அனைத்தையும் அவர் வாசித்துவிடுவார்.
புத்தகங்கள் வாசிப்பு
ஒரு போதும் நான் இவ்வளவு புத்தகங்களை வாசித்திருக்கிறேன் என முத்துக்குமார் எந்த மேடையிலும் சொன்னதில்லை. முத்துக்குமார் இறந்த பிறகு நான் ஒரு வீடியோ பதிவிட்டேன். முத்துக்குமார் 7 வயதில் தனது தாயை இழந்துவிட்டார்.
படுக்கை அறை
இந்த விஷயத்தை என் வீட்டில் படுக்கை அறையில் என் மடியில் படுத்துக் கொண்டு அவர் சொன்னார். 7 வயதில் தனது அம்மா இறந்துவிட்டார். சிறிய குழந்தையான முத்துக்குமாருக்கு இறப்பு பற்றி அறியாத வயது. அவரது தாயின் உடலை ஒரு பெஞ்சில் படுக்க வைத்திருந்தார்களாம்.
கரும்பு துண்டு
அப்போது முத்துக்குமார் குழந்தையாக இருந்ததால் அழுதுக் கொண்டே இருப்பார் என்பதற்காக பக்கத்தில் போன ஒரு டிராக்டரில் இருந்து கரும்பு துண்டை உடைத்து அவருக்கு கொடுத்தார்களாம். அன்றுதான் அவர் முதலும் கடைசியுமாக கரும்பை சாப்பிட்டாராம்.
அம்மா நினைவு
கரும்பை நான் சாப்பிடும் போதெல்லாம் என் அம்மாவை இழந்ததுதான் நினைவுக்கு வரும். அதனால் நான் கரும்பை சாப்பிடுவதையே விட்டுவிட்டேன். அம்மா மரணத்தின் கசப்பை நான் விழுங்க வேண்டும் என்பதற்காக எனக்கு கரும்பை கொடுத்தார்கள் என அழுதபடியே சொன்னார்.
முத்துக்குமார் எழுதிய உரைநடை
முத்துக்குமார் எழுதிய அணிலாடும் முன்றில் போன்ற உரைநடைகளை படித்தாலும் மிகப்பெரிய உரைநடை எழுத்தாளருக்குரிய திறமை அந்த எழுத்தில் இருக்கும். முத்துக்குமாரை போல் அவன் பையனை நேசித்தவரை நான் பார்த்ததே இல்லை. கொதிக்கும் சாம்பாரில் செல்போனை அவர் மகன் போட்டுவிட்டார். உடனே நாங்கள் பதறிவிட்டோம். ஆனால் முத்துக்குமார், அந்த குழந்தையை அடிக்கவில்லை, திட்டவில்லை. "வேறு செல்போன் வாங்கிக்கலாம்" என்றார். நான் கூட இவ்வளவு பாசம் கூடாது என்றேன். அதற்கு முத்துக்குமார், "அண்ணே குழந்தைன்னா போனை எடுத்து சாம்பாரில்தான் போடும்" என்றார். இன்று அந்த குழந்தைகள் தகப்பன் இல்லாமல் வாழ்கிறார்கள் என உருக்கமாக தெரிவித்திருந்தார்.
-
Blast Day 1 Collection: அர்ஜுனின் பிளாஸ்ட் படத்திற்கு முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா? -
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன? -
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications