சூப்பர் சிங்கரிலிருந்து தூக்கப்பட்டாரா பிரியங்கா தேஷ்பாண்டே.. அப்படியா செய்தார்? இதுதான் காரணமா?
சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து பிரியங்கா தேஷ்பாண்டேவை விஜய் டிவி நீக்கிவிட்டு தற்போது அந்த நிகழ்ச்சியை மைனா நந்தினியே தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்னதான் தொகுப்பாளர்கள், தொகுப்பாளினிகள் என ஆண்டுதோறும் நிறைய பேர் நிறைய வந்தாலும் மக்கள் மனதில் வெகு சிலர் மட்டுமே நிலைத்திருப்பர். அந்த வகையில் மாலா, பெப்சி உமா, பிரஜன், சிவகார்த்திகேயன், அர்ச்சனா, கீர்த்தி, ரக்ஷன், மாகாபா, பிரியங்கா தேஷ்பாண்டே உள்ளிட்டோர் உள்ளனர்.
இவர்களில் சிவகார்த்திகேயன் நடிகராகிவிட்டார். பிரஜனும் சீரியல்களில் நடித்து வருகிறார், அர்ச்சனா தற்போது கம்பேக் கொடுத்துள்ளார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஹோஸ்டிங்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான ஹோஸ்டிங் ஸ்டைல் இருக்கும். அந்த வகையில் மக்கள் மனங்களை கவர்ந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. அவர் தனது சுட்டித்தனமான பேச்சு, குறும்புத்தனம் ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் அவரது டிரேட் மார்க் சிரிப்பிற்கும் ரசிகர்கள் ஏராளம்.

சூப்பர் சிங்கர்
இவர் மாகாபா ஆனந்துடன் சேர்ந்து விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இதன் ஜூனியர் நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் ஸ்டார்ட் மியூசிக் எனும் ஷோவை பிரியங்கா மட்டும் தனித்து தொகுத்து வழங்கி வந்தார். அப்போது அவருக்கு பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

நெகட்டிவ் கமென்ட்
அங்கு முகம் தெரிந்த போட்டியாளர்களில் மிகவும் பிரபலமானவர் இவர்தான். இவர் சக போட்டியாளர்களை கிண்டல் செய்கிறார் என நெகட்டிவ் கமென்டுகள் வந்தாலும் மக்கள் இவருக்கு ஆதரவு தந்தனர் ஒவ்வொரு முறையும் நாமினேஷனில் வருவார், காப்பாற்றப்படுவார். இந்த நிகழ்ச்சியில் இவர் பைனலுக்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பிக்பாஸ் ஹவுஸிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பிக்பாஸில் பிரியங்கா
இதனால் பிரியங்கா பைனலில் இல்லையோ என பலர் நினைத்தனர். ஆனால் அவர் பைனலில் இடம் பெற்றிருந்தார். டைட்டில் வின்னர் ஆவார் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இரண்டாம் இடம் பிடித்தார். இதையடுத்து வெளியே வந்து ரசிகர்களுடன் ஆன்லைனில் கலந்துரையாடினார். அப்போது நிறைய பேர் நீங்கள் எப்போது விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவீர்கள் என கேள்வி எழுப்பி வந்தனர்.

பிரியங்கா மீண்டும் மாற்றம் ஏன்?
இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபாவுடன் மைனா நந்தினி தொகுத்து வழங்கி வந்த நிலையில் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க என்ட்ரி கொடுத்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஒரே வாரத்தில் மீண்டும் மைனா நந்தினியே மாற்றப்பட்டார். திடீர் மாற்றம் ஏன் என ஆராய்ந்த போது, நீண்ட விடுப்புக்கு பிறகு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்த பிரியங்கா, தனது பிக்பாஸ் நண்பர்களான பாவனிஸ அபிஷேக், மதுமிதா உள்ளிட்டோருடன் ஹைதராபாத் சென்றிருந்ததால் ஷூட்டிங்கிற்கு பிரியங்கா வரவில்லை. இதனால் சீசன் முடியும் வரை மைனா நந்தினியே தொகுத்து வழங்கட்டும் என விஜய் டிவி முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications
