Azhagu Serial: சுதா...சுதா..என்று சுற்றி வந்தது இதற்குத்தானா ரவி?
சென்னை: சன் டிவியின் அழகு சீரியல், கோவிட் 19 தொற்று லாக்டவுன் காரணமாக மறு ஒளிபரப்பாகி வருது. வழக்கம்போல மாலை 7 மணி முதல் 7:30 மணி வரை என்று திங்கள் முதல் வியாழன் வரை ஒளிபரப்பாகி வருது.
ரேவதி, ஐஸ்வர்யா, பூவிலங்கு மோகன், தலைவாசல் விஜய் என்று, பெரியதிரை நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். ரேவதியின் பெயர் அழகம்மை. இதனால், சீரியலுக்கு அழகு என்று பெயர்.
சுருதி ராஜ், இந்த சீரியலில் சுதாவாகவும், அழகம்மையின் மகன் ரவிக்கு நெருங்கிய நண்பன் சுரேந்தரின் மனைவியாகவும் நடித்து இருக்கார்.நண்பன் விபத்தில் இறந்துவிட, அடுத்த சில நாட்களில் ரவி சுதாவை கல்யாணம் செய்துக்கறான். கடைசியில் சுதா சுதா என்று சுற்றி வந்தது இதற்குத்தானா ரவி என்று கேட்கும்படி ஆகிவிட்டது கதை.

பூர்ணா ரவி
அத்தைப் பெண் பூர்ணா, ரவிக்குத்தான் என்று வளர்கிறாள். அது மட்டும் இல்லை... ரவியை பூர்ணா காதலித்து வருகிறாள். ரவியும் காதலுக்கு சம்மதம்தான் தெரிவித்து இருக்கான்.இந்த சமயத்தில் வீட்டை எதிர்த்து, ஆந்திராவில் இருந்து சுதாவைத் திருமணம் செய்துக்கொண்டு வருகிறான் சுரேந்தர்.நண்பனின் மனைவிக்கு அம்மா ரேவதியை வைத்து வளையக்காப்பு, பூச்சூட்டல் எல்லாம் ரவி சொல்ல செய்கிறார்கள்.

விபத்தில் சுரேந்தர்
ஒரு விபத்தில் சுரேந்தர் இறந்துவிட, இங்கு அவனின் மனைவி சுதாவுக்கு குழந்தை பிறக்கிறது. நண்பனின் மனைவி இப்படி துன்புறுவதை எந்த நண்பனாலும் பார்த்து சகித்துக்கொள்ள முடியாதுதான். கவலையாகத்தான் இருக்கும்...அதற்காக எப்போதும், அவளுக்கு போன் செய்து, குழந்தை எப்படி இருக்குன்னு கேட்பது ஓவர்.

பச்சை மண்ணு
பிறந்த பச்சை மண்ணுக்கு அப்பா விபத்தில் இறந்துவிட்டார் என்றா தெரியும்? குழந்தை குழந்தை என்று உயிரை விடுகிறான் ரவி. இதை பார்த்த அத்தையின் தோழி..ரவியின் அத்தையிடம் இது சரி இல்லை உன் மருமகனைப் பார்த்துக்கோ என்று எச்சரிக்கை செய்கிறார்கள். இருந்தாலும், ரவி ரொம்ப நல்லவன் என்று அத்தை தோழியைத் திட்டுகிறார்.

சுதா பிரச்சனை
சுதாவை இறந்துபோன சுரேந்தரின் தம்பி தங்கள் ஊருக்கு அழைச்சுட்டு போறான். சுதாவும் அவன் கெட்டவன் என்று தெரிந்தும் போகிறாள். அதற்குள் ரவிக்கு சுதாவிடம் இருந்து ஒரு போனும் வரவில்லை என்று துடிக்கிறது.. பதைக்கிறது.ஆந்திராவுக்கு கிளம்பிப் போகலாம் என்று கிளம்புகிறான்.

ரேவதி கேட்க
ரவி... அத்தைக்கு உடம்பு சரியில்லைன்னு எல்லாரும் கிளம்பிகிட்டு இருக்கோம்.. நீ எங்கே கிளம்பிட்டேன்னு அம்மா ரேவதி கேட்கறாங்க. அப்போது ரவி நல்ல பையன் என்றால், அம்மா சுதாவுக்கு எதோ பிரச்சனை போல இருக்கு.. நான் போயி பார்த்துட்டு வரேன்னு சொல்ல மாட்டான்? இல்லைம்மா.. அவசரமா ஒரு வேலை...போயி ஆகணும் என்று அம்மாவிடம் பொய் சொல்றான்.

தவறு இங்கே
எதற்கும் மறுப்பு சொல்லாத அம்மா... பார்க்கப்போனால், அம்மாதான் சுதா எப்படி இருக்கா...அடிக்கடி போன் செய்து விசாரின்னு சொல்றவங்க. அவங்ககிட்டே பொய் சொல்லிட்டு போறான்னு சொன்னால் சுதாவை கல்யாணம் செய்துக்க போன மாதிரியே இருக்குது. கடைசியில் கல்யாணம் செய்துக்கொண்டுதான் வந்துவிட்டான்.
அதெல்லாம் இருக்கட்டும்.. என்னதான் குழந்தைக்காக என்றாலும் உயிர் நண்பனின் மனைவியை, தனது மனைவியாகப் பார்க்க எந்த ஆணுக்காவது மனம் வருமா?
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications