சீமான் வீட்டிற்கே சென்ற சிவகார்த்திகேயன்.. திடீர் சந்திப்பின் பின்னணி இது தானா? கசிந்த தகவல்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இன்று ஜூன் 20 ஆம் தேதி நடிகர், இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானை சந்தித்து இருக்கிறார். சீமான் வீட்டில் சிவகார்த்திகேயன் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், எதற்காக இவர்களுடைய சந்திப்பு நிகழ்ந்தது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து இப்போது சினிமாவில் முன்னணி நடிகராக மாறி இருக்கிறார். இந்த நிலையில் சீமானை அவருடைய வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்த நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருவதால் அதைப் பார்த்த ரசிகர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சியில் சிவகார்த்திகேயன் இணைய போகிறாரா? அதனால் தான் இவர்களுடைய சந்திப்பு நடந்ததா? என்ற கேள்விகள் இணையத்தில் அதிகமாக கேட்கப்பட்டு வருகிறது.

இது குறித்து முக்கிய பிரபலம் ஒருவர் பேசிய தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் அவர் பேசுகையில் சிவகார்த்திகேயன் மற்றும் சீமான் சந்தித்தது அன்பு நிமித்தமாக சந்தித்த நடந்த சந்திப்பு தான். சிவகார்த்திகேயனுக்கு சீமான் மேல் பெரிய மதிப்பும், மரியாதையும் இருக்கு. அதனால்தான் மிஸ்டர் லோக்கல் படத்தில் அவர் சிறைக்குப் போகிற காட்சியில், இங்கேதான் சீமான் அண்ணன், மன்சூர் அலிகான் அண்ணன் எல்லாம் இருந்தாங்க.. அவங்க எல்லாம் நமக்கு சீனியர் என்று ஒரு டயலாக் பேசி இருந்தார்.
அந்த அளவிற்கு சீமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் அண்ணன் தம்பி உறவு இருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு 8.2% வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்ததற்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அதற்கு சீமான் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியிட்ட நன்றி அறிக்கையில் கூட சிவகார்த்திகேயன் தனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு அந்த அறிக்கையில் "ஆருயிர் இளவல் சிவகார்த்திகேயனுக்கு நன்றி" என்று சீமான் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் சிவகார்த்திகேயனை இன்று மதிய விருந்திருக்கு சீமான் அழைத்திருக்கிறார். இது முழுக்க முழுக்க அன்பின் காரணமாக நடந்த சந்திப்பு தான்.
சிவகார்த்திகேயனுக்கு பிடித்த உணவுகள் பரிமாறப்பட்டன. அதுபோல சிவகார்த்திகேயன் சீமானின் மகனோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டிருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications