தேவாவுக்கு மறுப்பு.. இரட்டை அர்த்த பாடலால் வருத்தத்தில் கே.எஸ் சித்ரா.. இளையராஜா சொன்ன வார்த்தை..?
சென்னை: பாடகி கே.எஸ் சித்ரா தன்னுடைய ஆரம்ப காலத்தில் நடந்த பல சுவாரசியமான தருணங்களை பற்றி பேசியிருக்கிறார்.
தேவா இசை அமைத்த பாடலில் தனக்கு கூச்சமான வார்த்தைகள் இருந்ததால் அந்த பாடலை சித்ரா பாட மறுத்து விட்டாராம்.
பிறகு சித்ராவை அழைத்த இளையராஜா சித்ராவிற்கு பல அறிவுரைகளை கூறினாராம். அதை இப்ப வரைக்கும் நாம் மீறவில்லை என்று பல தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

பல ஹிட் பாடல்களை பாடி பலருக்கும் மனதில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கே.எஸ் சித்ரா இதுவரைக்கும் ஆறு முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் நடந்த இப்பவும் மறக்க முடியாத நிகழ்வுகளை பற்றி கூறியிருக்கிறார்.
அதில் நான் பாடகியாக வந்த புதிதில் வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட பலரும் நான் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக பல ஐடியாக்கள் கொடுத்தார்கள். நான் பாடும் போது செய்யும் சின்ன சின்ன தவறுகளையும் சுட்டிக்காட்டி அடுத்த பாடலில் அதை திருத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்.

அப்படித்தான் ஒருமுறை தேவா இசையில் ஒரு பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது. அந்த பாடலை முதலில் எஸ்பிபி சார் பாட முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். ஆனால் நான் அப்படி சொல்ல முடியாது. அவர் ஒரு பெரிய பாடகர் நான் அப்போதுதான் அறிமுகம் ஆகி இருக்கிறேன். அதனால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் தேவா சார் ரொம்பவே சாந்தமானவர். அவரிடம் சென்று ஒரே ஒரு லைன் மட்டும் மாற்றி தர முடியுமா சார் ரொம்ப வல்கரா இருக்கு என்று சொன்னேன்.
அவரும் சரிமா மாற்ற நான் ட்ரை பண்ணுகிறேன். இது ஒரு பெரிய பாடல் ஆசிரியர் எழுதியது. அவரிடம் பேசுகிறேன் என்று சொல்லி இன்னைக்கு இதை எடுக்க வேண்டாம் இன்னொரு நாள் பாத்துக்கலாம் என்று அனுப்பி வைத்தாராம். அதற்குப் பிறகு என்னை கூப்பிடவே இல்லை சில நாட்களுக்கு பிறகு இளையராஜா சார் ஸ்டுடியோவுக்கு சென்றேன். அப்போது அவர் என்னை அழைத்து தேவா ஸ்டுடியோவில் பாட முடியாது என்று சொன்னியா என்று கேட்டார்.

அப்போது ஆமாம் சார் வரிகள் கொஞ்சம் வல்கரா இருந்துச்சு அதனால்தான் என்று சொன்னாராம். அதற்கு அவர் அதையெல்லாம் நீங்க ஏன் பாக்குறீங்க உங்க வேலை பாடுவது மட்டும்தான். எந்த கலைஞரும் வேண்டுமென்றே அவ்வாறு எழுத மாட்டார்கள். கதைக்கு தேவையானது தான் எழுதுவார்கள். அவர்களின் எழுத்துக்கு குரல் கொடுப்பதுதான் உன் வேலை என்று சொன்னார். அப்போதுதான் நான் செய்த தவறு புரிந்தது. இப்ப வரைக்கும் அதை ஃபாலோ பண்ணி வருகிறேன் என்றும் கூறுகிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications