சுதா இதுக்குத்தான் ஃபர்ஸ்ட் நைட் வேணாம்னு சொல்றாளா...?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அழகு சீரியல் போட்டி, பொறாமை, பெத்த பையனையே ஏமாத்தறது இப்படி கொடுமையா போயிகிட்டு இருக்கு.

ரேவதி, காயத்திரி ஜெயராம்னு ரெண்டு ஸ்டார் காஸ்ட் இருந்தும், சீரியலை போரடிக்க வைக்கறாங்க.

ஸ்பெஷல்னு பார்த்தா நண்பன் விபத்துல இறந்துட, அவன் மனைவி சுதா கையில் குழந்தையுடன் சிக்கலில் மாட்டித் தவிக்க, அவளை சிக்கலில் இருந்து காப்பாத்தி தான் கல்யாணம் செய்துக்கறான் அழகம்மையின் மூத்த மகன் ரவி

எதுவும்

எதுவும்

குடும்பமே சுதாவின் மேல மட்டுமில்லாம குழந்தை மேலயும் பாசத்தை பொழியறாங்க. ஆனா, இருவருக்குள்ளும் எதுவும் நடக்கலை. சரி ஒரு கட்டத்தில் இருவரும் நல்லா புரிஞ்சுக்கிட்ட நிலையில், ரவி சுதாவை நெருங்க ஆசைப்படறான். சுதா இப்போ வேணாம்ங்க...பூர்ணா மகேஷுக்கு குழந்தை பிறக்கட்டும்..பிறகுதான் நமக்குள்ள எல்லாம்னு சொல்லிடறா.

 குழந்தை பிறக்கலையே

குழந்தை பிறக்கலையே

இப்போ, அழகம்மைக்கும்,அவங்க புருஷனுக்கும் ரவிக்கும் சுதாவுக்கும் குழந்தை பிறக்கலையே ஏன்னு தெரியலை.. நம்ம பொண்ணுக்கு வேற வளைய காப்பு பண்றோமேன்னு தோன்றி பேசற அளவுக்கு நிலைமை வந்துருச்சு.

மல்லிப்பூ

மல்லிப்பூ

ரவி சுதாவுக்கு மல்லிப்பூ வாங்கிட்டு வந்து சுதாவை கூப்பிடறான்.என்ன இன்னிக்கு கீழ வராம இருந்தீங்க..மல்லிபூ வாசனை வருதேன்னு சொல்றா. அப்பு எங்கேன்னு கேட்கறான் ரவி.அவன் காவ்யா ரூம்ல தூங்கிட்டு இருக்கான்..இதோ தூக்கிட்டு வரேன்னு சொல்றா.

 தூங்கட்டும்

தூங்கட்டும்

இல்லை இல்லை..அவன் அங்கேயே தூங்கட்டும்.. திரும்பு இந்த மல்லிப்பூவை நானே உன் தலையில வச்சு விடறேன்னு சொல்றான்.இல்லை குடுங்க நானே வச்சுக்கறேன்னு சொல்றா சுதா.

தோள் மீது கை

தோள் மீது கை

ஏன் நான் வச்சுவிடக் கூடாதான்னு ரவி கேட்க, சுதா திரும்பி நிக்கறா. ரவி அவள் தோள் மீது கை வைக்க, விசுக்கென திரும்பிய சுதா குடுங்க நான் வச்சுக்கறேன்னு சொல்றா. இல்லை..வேணாம்னு சுதா சொல்ல, நான் சொல்றது ஏன்னு உனக்கு புரியுதா புரியலையான்னு கேட்கறான்.

புரியலையா

புரியலையா

புரியுதுன்னு சொல்றா சுதா. அப்புறம் எதுக்கு ஒத்துழைக்க மாட்ற.. உண்மையை சொல்லிடு சுதா.. முதலில் பூர்ணாவுக்கும், மகேஷுக்கும் குழந்தை பிறக்கட்டும்னு சொன்னே.. இப்போ பூர்ணா முழுகாம இருக்கா. இப்போ என்ன காரணம் சொல்லபோறேன்னு கேட்கறான்.

அப்பு மேல

அப்பு மேல

சுதா தயங்க... இல்லை நமக்கு ஒரு குழந்தை பிறந்தா அப்பு மேல இப்போ எல்லாருக்கும் இருக்கற பாசம் இருக்குமான்னு தெரியலைன்னு சொல்றா. அப்படிப் போடு... இந்த சந்தேகம் வேற உனக்கு இருக்கா... உன் குழந்தை மேல எல்லாரும் பாசம் காமிக்கணும். ஆனா, எனக்கு ஒரு குழந்தையை பெத்து தர மாட்டே.. அப்டித்தானேன்னு கோபமா கேட்கறான்.

உன் குழந்தை

உன் குழந்தை

என்ன ரவி திடீர்னு என் குழந்தை,உன் குழந்தைன்னு பிரிச்சு பேசறீங்கன்னு கேட்கறா. நீ இப்படி நினைச்சா நானும் அப்படித்தான்னு கோபமா சொல்லிட்டு போறான். கிடைச்ச வாழ்க்கையை தக்க வச்சுக்கலேன்னா இப்படித்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+