eeramaana rojaave serial: புருஷன் பாதயாத்திரையில்.. பொண்டாட்டி செருப்பு இல்லாமல்!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் கதையே புருஷன் பொண்டாட்டி லவ்ஸ்தாங்க... வெற்றியும் மலரும் கல்யாணத்துக்கு பின்னர் காதலிக்கறாங்க.
காதலை பொண்டாட்டி மலர்கிட்டே சொல்ல உத்தரவு கேட்க பழனிக்கு பாத யாத்திரை போறான் வெற்றி. அவன் பாத யாத்திரை போன அன்றிலிருந்து மலர் காலில் செருப்பு போடாமல் நடக்கறாளாம்.
முருகன் உத்தரவு கொடுத்தும், இன்னும் காதலை சொல்லாமல் இருக்கான். இது காதலா, இதுதான் காதலான்னு கேட்டு கேட்டு குழம்பிப் போறா மலர்.

காலில் காயம்
வெற்றி பாத யாத்திரைக்கு போயிட்டு வந்து கட்டிலில் முனகியபடியே படுத்து இருக்கான். அப்போதுதான் மலர் அவனின் காலை பார்க்கிறாள், கால் பாதயாத்திரைக்கு நடந்து காயம் ஆகிப் போச்சு. உடனே மலர் வெந்நீரில் உப்பு மஞ்சள் தூள் போட்டு எடுத்துட்டு வந்து ஒத்தடம் கொடுக்கிறாள். அப்போதெல்லாம் விழிக்காமல் இருக்கும் வெற்றி மலரின் கண்ணீர் துளி பட்டு விழிச்சுடறான்.

கண்ணீர் துளிகள்
புதுக்கவிதை தொகுப்பு மாதிரி வெறுமனே இந்த சீரியலின் கதை, காதலை சொல்ல வழிமுறைகள் தேடுவதும், மலர் மாமா மாமா என்று கொஞ்சி அழைப்பதும்... அத்தோடு இதோ இப்போது காலில் ஒத்தடம் கொடுத்த போது விழிக்காத வெற்றி மலரின் கண்ணீர் துளிகள் பட்டு கண் விழித்தானே அது போல நம்ப முடியாத சில விஷயங்கள் என்று மட்டுமே நகர்ந்துக்கொண்டு இருக்கிறது.

சீரியலின் கதையும்
சீரியலின் கதையும் இவ்வளவுதான். .. யதேச்சையாக அண்ணன் தம்பியை திருமணம் செய்துக்கொண்ட அக்கா தங்கை கல்யாணத்துக்கு பிறகு புருஷனை புரிந்துக்கொண்டு காதலிக்க ஆரம்பிப்பது. பின்னர் இருவருமே காதலிக்க ஆரம்பித்து ஒருவர் காதலை எப்படி ஒருவரிடம் சொல்லலாம் என்று காத்து இருப்பது இது மட்டும்தான் கதை.

மலர் காலும்
தனக்கு ஒத்தடம் கொடுத்தது மலர்தான் என்று தெரிந்து கண் விழித்து பார்க்கிறான் வெற்றி. பின்னர் எதுக்கு மாமா இப்படி பாதயாத்திரை எல்லாம் போனீங்கன்னு கேட்கிறாள். அப்போதுதான் கவனிக்கிறான் வெற்றி மலரின் காலை. ஆமாம். என் காலில் காயம் ஆனது இருக்கட்டும்.. உன் காலில் என்ன என்று கேட்கிறான். அது ஒன்னும் இல்லை மாமா எப்போதும் என் கால் அப்படித்தானே இருக்கும்னு சொல்றா..

கேட்கவே கூடாது
யாருகிட்ட மறைக்கிறே.. நான் உன் முகத்தை பார்த்து பேசினதை விட உன் காலைப் பார்த்து பேசியதுதான் அதிகம்.உன் கால் எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாதா? காலை காட்டுன்னு சொல்றான். மலர் காலை காண்பிக்க அவள் காலிலும் காயம். என்ன மலர் இதுன்னு பதறிப் போறான்.இல்லை மாமா நீங்க பாதயாத்திரை போனதில் இருந்து நானும் காலில் செருப்பு போடாமல் நடந்தேன்னு சொல்றா மலர். எங்கே நடந்தாள்னு கேட்கவே கூடாது.

இது காதலா?
அவள் அவள் காலை எடுத்து மடியில் வச்சு காயத்துக்கு ஒத்தடம் தருகிறான். கடவுளே இது காதலால் மாமா செய்யறதா இருக்கணும்னு மலர் நினைச்சுக்கறா. அவன் பாதயாத்திரை போனதே பொண்டாட்டி மலரிடம் தன்னோட காதலை சொல்ல முருகனிடம் உத்தரவு கேட்க வேண்டிதான். அங்கே ஒரு சித்தர் வந்து வேற நீ காதலை சொல்லலாம்னு சொல்லி அருள்வாக்கு சொல்லிட்டு போனார். அனால், இன்னும் இவன் எப்படியாவது தன்னோட காதலை சொல்லிடணும்னு நினைச்சுக்கறான்.
இதுதான் பல எபிசோடுகளோட கதையே!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications