Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சந்தானமும் அதை எதிர்பார்க்கல.. உதயநிதி பற்றி கேட்டதுமே.. பிரபலங்கள் என்றால் இப்படியா: பிரபலம் நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மீடியாவை ஒரு பிரபலம், செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார் என்றால், என்னவேணும்னாலும் அவரிடம் கேள்வியை கேட்டுவிடலாம் என்று நினைத்தால் எப்படி? ஒருகட்டத்தில் பிரபலங்கள் மீடியாவை சந்திக்காமலேயே ஒதுங்கிவிடுவார்கள். அதனால்தான் உச்சநட்சத்திரங்கள் ஏர்போர்ட் உள்ளிட்ட இடங்களில் 2 வார்த்தைக்கு மேல் செய்தியாளர்களிடம் பேசுவதில்லை" என்று வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு,.

Cheyaaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது சந்தானத்திடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
சிம்பு கேட்டுக் கொண்டதற்காக, அவருடன் அடுத்த படம் நடிக்க சம்மதித்துள்ளீர்கள்.. அவரை போலவே உங்களது நண்பர் துணை முதல்வர் உதயநிதி, வருகின்ற தேர்தலுக்கு பிரச்சாரத்துக்கு கூப்பிட்டால் வருவீர்களா?" என்று கேட்கப்பட்டது. இந்த கேள்வியை சந்தானம் எதிர்பார்க்கவில்லை. எனினும், பிரமாதமான பதிலை தந்திருந்தார்.

Television Actor Santhanam Udhayanidhi Stalin

சிம்பு - கேரக்டர்

"சிம்பு என்னை நடிக்க கூப்பிட்டிருக்கிறார் என்பதற்காக, பழைய காமெடியன் போல நான் நடிக்க வரவில்லை. அதை சிம்புவும் புரிந்து கொண்டுள்ளார்.. அதற்கேற்ப என்னுடைய கேரக்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, உதயநிதி ஸ்டாலின் என்னை பிரச்சாரத்துக்கு கூப்பிட்டால், அந்த நேரத்துக்கு, அந்த சூழலில் அது எனக்கு சரியாக இருக்குமா என்பது உதயநிதிக்கே தெரியும். அவர் கூப்பிடுவாரா? கூப்பிட மாட்டாரா? தெரியாது.. அப்படியே கூப்பிட்டாலும், அந்த சூழலில் அந்த காலத்துக்கு ஏற்றது போல ஒரு பதிலை சொல்ல வேண்டியிருக்கும்" என்று பதிலளித்தார் சந்தானம்.

உதயநிதி பிரச்சாரம்

ஆனால், வெப்சைட்களிலும், காட்சி ஊடகங்களிலும், "உதயநிதி அழைத்தால் பிரச்சாரம் செய்வேன் - சந்தானம் பேட்டி" என்று செய்திகள் வெளியாகியிருக்கிறது.. உடனே இதற்கு ஏகப்பட்ட நபர்கள் சந்தானத்தை கமெண்ட்களில் திட்டி வைத்திருக்கிறார்கள். இதை பார்க்கும்போது சந்தானத்தின் மனநிலை என்னவாக இருக்கும்? நாம் ஒன்று சொன்னால், தலைப்பு வேறாக இருக்கிறதே? என்று நினைக்க மாட்டாரா?

3 வருடங்களுக்கு முன்பு, ஒருவார பத்திரிகையில் நான் பணிபுரிந்தபோது, சந்தானத்தை பேட்டி எடுத்தேன். அப்போது "இந்து மதத்தின் மீது ஆர்வமாக இருக்கிறீர்களே?" என்று கேட்டேன்.

அதற்கு சந்தானம், "எனக்கு இந்து மதம் மிகவும் பிடிக்கும். புது கோயில்களை கட்டுவதைவிட, பழைய கோயில்களை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் செய்தால் சிறப்பாக இருக்கும்.. எனவே அந்த விஷயத்தை தற்போது கையில் எடுத்து, எனக்கு தெரிந்த ஆட்களை வைத்து செய்து வருகிறேன். இதை நான் செய்தாலும், என்னை சங்கின்னு சொல்றாங்களே? நான் என்ன பண்றது? என்றார்.
ஆனால், மறுநாளே அந்த பத்திரிகையின் போஸ்டரில், "நான் என்ன சங்கியா?" என்று தலைப்பில், சிலிண்டர் மீது சந்தானம் உட்கார்ந்திருப்பது போன்ற போட்டோவையும் அச்சிட்டுவிட்டார்கள்., இதை பார்த்ததுமே சந்தானம் என்னிடம் கோபப்பட்டார்.. எத்தனையோ நல்ல விஷயம் பேசினேனே? இந்த தலைப்புதான் போடுவீங்களா? என்று வேதனைப்பட்டார்.

பெருமாள் பக்தன்

அதுபோலவேதான் இப்போதும் நடந்துள்ளது.. டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கோவிந்தா கோவிந்தா என்ற பாடல் வருகிறதே? பெருமாளை ஏன் கிண்டல் செய்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் சந்தானத்திடம் கேட்டுள்ளார்கள்.

இதற்கு சந்தானம், "நான் மிகபெரிய பெருமாள் பக்தன்.. நான் எப்படி பெருமாளை கிண்டல் செய்வேன்? என்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் கீழ்திருப்பதியிலிருந்து படியில் ஏறி சென்றுபெருமாளை பார்த்துவிட்டு வருகிறேன்" என்று பதிலளித்தார்.

மதம் சார்ந்தே தன்னை திரும்ப திரும்ப டார்கெட் செய்கிறார்களே? என்ற நினைப்பு சந்தானத்துக்கு வராதா? மீடியாவை ஒரு பிரபலம் சந்தித்து பேசுகிறார் என்றால், என்னவேணும்னாலும் கேள்வியை அவரிடம் கேட்டுவிடலாம் என்று நினைத்தால் ஒருகட்டத்தில் யாருமே மீடியாவை சந்திக்காமலேயே ஒதுங்கிவிடுவார்கள். அதனால்தான் உச்சநட்சத்திரங்கள் 2 வார்த்தைக்கு மேல் செய்தியாளர்களிடம் பேசுவதில்லை.

ஒதுங்கிவிடுவார்கள் பிரபலங்கள்

இந்து மதத்தை எதிர்க்கிறார் என்று சந்தானம் மீது விமர்சனம் எழுந்தாலும், முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஆர்யாவுடன் நெருக்கமான நட்பை கொண்டிருக்கிறார் சந்தானம்.

எனவே சந்தானம் என்றில்லை, எந்த பிரபலமாக இருந்தாலும், அவர்கள் செய்தியாளர்களை சந்திக்க நேர்ந்தால், "இந்த ஆளு சிக்கிட்டான்யா" என்பதுபோல், தாறுமாறான கேள்விகளை எழுப்புவது சரியான விஷயமா? பிரபலங்கள் பதில்களை தந்தாலும், மீடியாவில் வேறு மாதிரியான தலைப்புகளில் செய்தி வெளியாகி, அது வேறு மாதிரியான கருத்தை தந்துவிடுகிறது" என்று ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார் பத்திரிகையாளர் செய்யாறு பாலு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+