தொடரும் கனமழை.. பிக்பாஸ் வீட்டின் நிலைமை? நிகழ்ச்சி தொடருமா? இல்லையா? இப்படி ஒரு மாற்று ஏற்பாடா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுமா? இல்லையா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு இருக்கும் நிலையில் அது குறித்து பார்க்கலாம்.
கடந்த இரண்டு தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமான மழை பெய்து வருவதால் பிக் பாஸ் வீடு அமைந்திருக்கும் பகுதியில் மழை நிலவரம் எப்படி இருக்கிறது? போட்டியாளர்களின் நிலைமை என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் மத்தியில் இருக்கிறது.

இன்று வரைக்கும் வெளியான ப்ரோமோக்களில் பிக் பாஸ் வீட்டில் நல்ல வெயில் அடிப்பது போன்ற காட்சிகள் தான் இருக்கிறது. காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு நாளைக்கு முன்பே சூட் செய்யப்பட்டது தான் இன்று ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் நேற்று நடந்த நிகழ்வுகள் இன்று ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் பிக் பாஸ் வீடு அமைந்திருக்கும் பகுதி செம்பரம்பாக்கம் ஏரியின் பக்கத்தில் இருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விட்டால் அது பிக் பாஸ் செட் அமைந்திருக்கும் இடம் வரைக்கும் வரும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதாலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரு நாள் முழுக்க அவர்கள் ஹோட்டலில் இருந்துவிட்டு பிறகு தான் நிலைமை சரியானதும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அதற்குப் பிறகு நிலைமையை சரியாக புரிந்து கொண்டு பிக் பாஸ் வீடு அவருக்கு சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பு மழைக்கு தாக்குப் பிடிக்கிற மாதிரி உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பல ஏற்பாடுகளை நிகழ்ச்சி தரப்பினர்கள் செய்து வைத்திருக்கிறார்களாம். வானிலையை கவனிப்பதற்காகவே ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதோடு வீட்டிற்குள் தண்ணீர் வந்தாலும் போட்டியாளர்கள் பத்திரமாக தங்க வைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளும் தயாராகவே இருக்கிறதாம்.
அதுபோல செட்டுக்குள் தண்ணீர் வந்தாலும் உடனே அதை அப்புறப்படுத்தும் வகையில் மோட்டார் சாதனங்கள் உட்பட எல்லாமே தயார் நிலையில் இருப்பதால் போட்டியாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறப்படுகிறது. அதோடு செம்பரம்பாக்கம் ஏரியை பொறுத்தவரை நீர்மட்டம் 23 அடி வந்தால் மட்டும் தான் அங்கிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று கூறப்படுகிறது.
ஆனால் தற்போது உள்ள நிலவரப்படி ஏரியில் 13 அடி தண்ணீர் மட்டும் தான் இருக்கிறதாம். அதிலும் குடிநீர் தேவைக்காக ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீர் வெளியே போய்க்கொண்டிருக்கும் நிலையில் தொடர்ச்சியாக மழை பெய்தாலும் பெரிய அளவில் தண்ணீர் மட்டம் கூடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவாக இருந்த நிலையில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை லெப்ட் ரைட் வாங்கியிருந்தார்.
அதற்குப் பிறகு இந்த வாரம் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்று பார்த்தால் சண்டை சச்சரவுகள் அதிகமாக தான் இருக்கின்றது. ஆனாலும் நிகழ்ச்சி இந்த வாரத்தில் எப்படி போகப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. சென்னையில் உள்ள பலர் வெள்ளத்திற்கு பயந்து வாழும் வீட்டை விட்டு விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் வெளியே எங்கும் போக முடியாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் என்டர்டைன்மெனட் செய்யப் போகிறார்களா? அல்லது வரும் நாட்களிலும் சண்டை மட்டும்தான் போட போகிறார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications