ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் ரூ 1000 கோடியை தட்டி தூக்குமா? சினிமாவுக்கே ஒரு கம்பேக் மூவி Coolie!
உண்மையாகவே, தமிழ் சினிமா ஒருகாலத்தில் இந்திய சினிமாவின் முதன்மைத் துறைகளில் ஒன்றாக இருந்தது. வசூல், கதைக்களம், ஹீரோயிசம், நவீன தொழில்நுட்பம் என பல அம்சங்களில் தமிழ்த் திரைப்படங்கள் முன்னிலை வகித்தன. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த் கமல், போன்ற தலைசிறந்த நடிகர்கள் தலைமையில், ஒரு முழு தலைமுறைக்கே ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது தமிழ் சினிமா. ஆனால் கடந்த சில வருடங்களாக, தமிழ் சினிமாவின் வசூல் சவால் பல திசைகளில் பின்னடைவை சந்தித்து வருகிறது என்பது ஒரு நிதர்சனமான உண்மை.
இந்த வேளையில், ஆந்திராவில் உருவான பாகுபலி , RRR திரைப்படம், கர்நாடகாவின் கேஜிஎப், மற்றும் புஷ்பா 2 ஆகியவை அனைத்தும் இந்திய சினிமா வரலாற்றில் சாதனை படைத்தன. இந்த திரைப்படங்கள் அனைத்தும் ஆயிரம் கோடிகளை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளன. பிரம்மாண்டமான தயாரிப்பு, சர்வதேச தரம் வாய்ந்த தொழில்நுட்பம், கதையின் பிணைப்பு மற்றும் ஹீரோக்களின் சர்வதேச வரவேற்பு ஆகியவை இதற்கான முக்கிய காரணிகள்.

இதனுடன் ஒப்பிடும் போது, தமிழில் கடைசியாக இந்தளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் 2.0. ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமாரின் கூட்டணியில் உருவான இந்த படம் 800 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதன் பின் அதிக கிராஸ் வசூலை கொடுத்து முன்னிலையில் இருப்பது ஜெயிலர். வசூலிலும், ரசிகர்களிடையே வரவேற்பிலும், மீடியா கவனத்திலும் ஜெயிலர் முன்னணியில் உள்ளது .
இந்நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த படம் கூலி குறித்த எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் 1000 கோடிகளை கடந்து புதிய வசூல் சாதனை படைக்கும் என ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையும் எதிர்பார்க்கிறது. கூலி வெறும் ஒரு ஹீரோ படம் மட்டுமல்ல; அது தமிழ் சினிமாவுக்கே ஒரு பெரும் கம்பேக் ஆக அமையப்போகிறது என்கின்றனர் விமர்சகர்கள்.
மற்ற திரைப்படங்கள் உலகளவில் போட்டியிடும் இந்த வேளையில், ரஜினியின் படங்கள் மட்டும் தான் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஒளியாக இருக்கின்றன. இதனால் இன்று வரை தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காக களம் இறங்கிய ஒரே சிங்கம் என்பதை மறுக்க முடியாது.
தமிழ் சினிமா மீண்டும் ஒரு உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், கூலி போன்ற மாபெரும் படங்கள் வெற்றி பெற வேண்டியது அவசியம். ரஜினிகாந்த் போன்ற ஐகானிக் நட்சத்திரத்தின் படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு, தமிழ் சினிமாவின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு தடமாக ஒரு தூணாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் போன்ற இளைய இயக்குநர்கள் புதிய பார்வையுடன், நவீன தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச தரத்துடன் தமிழ் படங்களை கொண்டு வருவதை நாம் ஆதரிக்க வேண்டும்.
இது போன்ற படங்கள் வெற்றி பெறும் போது மட்டுமே, உலக அரங்கில் தமிழ் சினிமா மீண்டும் செல்வாக்குடன் ஒலிக்க முடியும். புதிய கதைச் சொல்வதிலுள்ள வித்தியாசம், தயாரிப்பில் தரநிலைகள், மற்றும் உலகளாவிய சந்தையை இலக்காகக் கொண்டுள்ள பார்வை இவை அனைத்தும் ஒன்றிணைந்தால்தான், தமிழ்த் திரைப்படங்கள் மீண்டும் இந்திய சினிமாவின் முன்னணிக்குத் திரும்ப முடியும்.
ஆனால், இந்நிலையில் கூட, ரஜினிகாந்த் போன்ற வரலாற்று நாயகன் இன்னும் தமிழ் சினிமாவை தன் தோளில் ஏந்தி கொண்டு செல்வது பெருமைக்குரியது. அவரது பாதையை பின்பற்றும் இளம் தலைமுறை, புதிய உலகம் நோக்கிய தமிழ் சினிமாவின் கனவை நனவாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
- குரு கிருஷ்ணன்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications