என்னாது.. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து ரச்சிதா விலகுகிறாரா??

Subscribe to Oneindia Tamil

சென்னை : அடடா இப்பதான் சீரியலே சூடு புடிச்சிருக்கு இதுக்குள்ள ஹீரோயினியை மாத்திட்டா ரசிகர்கள் என்ன ஆவாங்க. எல்லாம் இந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் குறித்த புலம்பல்தான்.

தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலை விட்டு ரச்சிதா மகாலட்சுமி விலக போகிறார் என்ற செய்தியைக் கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். ரச்சிதாதான் இந்த சீரியலின் உயிர் நாடியே.. இவரை மாத்திட்டா எப்படி என்ற சோகத்தில் ரசிகர்கள் மூழ்கியுள்ளனர்.

ஆனால் ரசிகர்களின் கேள்விக்கு ரச்சிதா இப்படி ஒரு பதிலை சொல்லி தப்பிப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. உண்மையில் ரச்சிதா வந்த பிறகுதான் இந்த சீரியலே தனி களை கட்டியது என்பதே உண்மையாகும்.

சஸ்பென்ஸ் கூடிப்போச்சு

சஸ்பென்ஸ் கூடிப்போச்சு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இரண்டாவது பாகம் தற்போது பெரும் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலின் ரசிகர்களுக்கும் ஒவ்வொரு நாள் பிரேமோ பார்த்ததும் பிபி எகிறுக்கின்றதாம். ஒரு கொலையை வைத்து ஒரு மாதத்தை கடந்து விட்டாலும் போரடிக்காத வகையில் சஸ்பென்ஸ்களை கூட்டி வருகின்றனர். அதுவும் இந்த வாரம் புது என்ட்ரி ஆக மாறன் என்ற கேரக்டர் உள்ளே நுழைவதை பார்த்து என்னவாக இருக்கும் இனி கதை எப்படிப் போகப் போகுது என்று ஆர்வமாக இருக்கும்போது
தற்போது அந்த சீரியலை பற்றி இன்னொரு செய்தி பரவி வருகிறது.

அது யாருன்னு இன்னும் தெரியல

அது யாருன்னு இன்னும் தெரியல

சின்னத்திரை வரலாற்றிலேயே இல்லாத வகையில் புது திருப்பங்களுடன் சஸ்பென்ஸ்கள் நிறைந்து ஒரு மாதமாக ரசிகர்களை போட்டு குழப்பிக் கொண்டிருக்கும் சீரியலில் இருந்து ரச்சிதா விலக போகப் போகிறார் என்ற செய்தியைக் கேட்டதும் அவருடைய ரசிகர்கள் ஷாக்காகி இருக்கின்றனர். இந்த சீரியலில் இவரைத் தவிர வேறு யார் நடித்தாலும் மாயனுக்கு பொருத்தமாக இருக்காது என்று ரசிகர்களே இவருடைய பெயரை தான் கூறிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இவர் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் என்றும், இல்லை இனி தான் விலகப் போகிறார் என்றும், சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவி வருகிறது.

என்னது சீரியலை விட்டு போறாரா

என்னது சீரியலை விட்டு போறாரா

ஏற்கனவே முதல் சீசனையும் திடீரென்று முடித்து விட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் தான் இருந்தனர். அதுவும் அந்த சீரியலில் நடித்த நடிகைகள் இந்த சீசனில் நடிக்கவில்லையே என்று அவர்களுக்குள் ஒரு ஏமாற்றம் கொண்டிருக்கிறது. அதனால் தான் எப்போதும் அவர்கள் மீண்டும் இந்த சீரியலில் வந்தால் நன்றாக இருக்கும் என்று கமெண்டுகளை போட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரச்சிதாவும் இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்றும் அவர் ஒரு கன்னட திரைப்படத்தில் கமிட் ஆகி விட்டதால் சீரியலை விட்டு விலகப் போகிறார் என்ற செய்தி பரவலாக பரவி வருகிறது.

பதில் சரியா வரலையே

பதில் சரியா வரலையே

இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்டாக ரச்சிதா ஒரு பிரைடல் போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை அப்லோட் செய்து இருக்கிறார். இவர் போட்டோஸ் அப்லோடு போட்ட சிறிது நேரத்தில் அவருடைய ரசிகர்கள் அவரிடம் நச்சரிக்க தொடங்கிவிட்டனர். நீங்க நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலக போகிறீர்கள் என்று சொல்கிறார்களே அது உண்மையா? என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு ரச்சிதா வாயை மூடி இருக்கும் இமோஜி பிக்சரை கமாண்டாக போட்டிருக்கிறார். இதைப் பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று கமெண்ட்ஸ்களில் கேட்டு வருகின்றனர். ஆனால் வேறு எந்த கமெண்ட்டுக்கும் ரச்சிதா வாயை திறக்கவே இல்லை.

ரச்சிதா கண்டிப்பா இருக்கணும்

ரச்சிதா கண்டிப்பா இருக்கணும்

உண்மையில் இந்த சீரியலின் முதல் பாகம் நல்லாவே போய்க் கொண்டிருந்தது. ஆனால் 2வது பாகம் அதை விட சூப்பராக போய்க் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. அதற்கு முக்கியக் காரணமே மகா - மாயன் கேரக்டர் பொருத்தம்தான். அந்த அளவுக்கு செந்திலும், ரச்சிதாவும் ரொம்பப் பொருத்தமான ஜோடியாக இதில் இருக்கிறார்கள். இருவருக்கும் ஏற்கனவே சரவணன் மீனாட்சியிலும் ஜோடிப் பொருத்தம் அமர்க்களமாக இருந்தது. அந்த அதிர்ஷ்டம்தான் இதிலும் அவர்களை இணைத்து ஹிட்டாக்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+