ஜெயம் ரவி ரூமில் இரவு 12 மணிக்கு கதவை தட்டி.. பணம் + மனம் பாதிப்பு.. நெருடலில் ரவி மோகன்.. பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா திருமணத்துக்கு நடிகர் ரவியும் அவரது தோழி கெனிஷா பிரான்சிஸூம் நேற்றைய தினம் ஜோடியாக வந்திருந்தனர்.. இந்த காட்சி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. விவாகரத்திற்கும் கெனிஷாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என பேசியிருந்த நிலையில், இவர்கள் இருவரும் திருமணத்தில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் அந்தணன் ஜெயம் ரவி குறித்து சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

Whistle Plus என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் அந்தணன், "ஜெயம் ரவி - ஆர்த்தி விவகாரத்தில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில், சந்தேகம்தான் பிரதான காரணமாக சொல்லப்படுகிறது. ஜெயம் ரவி மீது ஆர்த்திக்கு நிறைய சந்தேகங்கள் இருந்துள்ளன.

Television Ravi Mohan Jayam Ravi

அறைக்குள் யார்

ஷூட்டிங் நேரத்தில் ஜெயம் ரவியை திடீர்னு செக் செய்வது, அவுட்டோரில் ஜெயம் ரவி இருந்தால், சொல்லாமல் திடீரென ராத்திரிக்கு 12 மணிக்கு வந்து கதவை தட்டுவது, உள்ளே யாராவது இருக்கிறார்களா? என்று தேடுவது, ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே, மேக்கப் மேனுக்கு போன் செய்து, ஜெயம் ரவி என்ன செய்கிறார் என்று விசாரிப்பது? மேக்கப்மேன் போன் எடுக்காவிட்டால், நேரடியாகவே டைரக்டருக்கு போன் செய்து விசாரிப்பது போன்ற கண்காணிப்புகள் இருந்துள்ளன.

புரிதல் குறைபாடு

இதெல்லாம் ஜெயம் ரவி காதுக்கு வரும்போது, சிறைக்கைதி போல எண்ணம் வரத்தான் செய்யும்.. இதுவே வெறுப்பாக மாறிவிடும். ஆனால், தங்கள் குழந்தைகள் மீது இருவருமே அன்பை வைத்திருக்கிறார்கள்.

புரிதல் குறைபாடு இருந்ததால்தான், அப்படியொரு முடிவை ஜெயம் ரவி எடுத்துள்ளார்.. இவர்கள் இருவரிடமும் பேசி பிரச்சனையை சரிசெய்துவிட இரு குடும்பத்தினரும் முயற்சி எடுத்துள்ளனர். ஆனால், ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய நெருடல் மனதில் ஏற்பட்டுவிட்டதால், பிரிவு முடிவை எடுத்துள்ளார். மனரீதியாக ஜெயம் ரவி புண்பட்டிருக்கிறார்..
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகையுடன் ஜெயம் ரவியை இணைத்து பேசினார்கள். அதனால்தான், இந்த டைவர்ஸ் என்றுகூட சொன்னார்கள். ஆனால், துலானி நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்

குறைந்த சம்பளம்

மன ரீதியான பாதிப்பு மனைவி மூலம் என்றால், பண ரீதியான பாதிப்பு மாமியார் தரப்பிலிருந்து ஜெயம் ரவிக்கு வந்துள்ளது.. அண்ணனின் படங்களில் ஹிட் படங்களாக தந்து கொண்டிருந்தவர், திருமணமானதும் ஃபிளாப் படங்களை தர ஆரம்பித்துவிட்டார். அப்படியானால், கதை கேட்பதை மாமியார் முடிவெடுக்கிறார்..

மருமகனை வைத்து படம் தயாரிப்பதாக இருந்தாலும் மாமியார், சம்பளத்தை நிறைவாக தந்திருக்க வேண்டும். அடிமாட்டு விலைக்கு சம்பளத்தை தந்ததுகூட, ஜெயம் ரவிக்கு கூடுதலாக மன உளைச்சலை தந்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

பணம் காய்க்கும் மரம்

நேற்றையதினம் Media circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு "பணம் காய்க்கும் மரமாகவே ஜெயம் ரவியை மாமியார் பார்த்தாரே தவிர, மருமகனாக பார்க்கவில்லை என்கிறார்கள்.. இதில் மனைவி ஆர்த்தி மீது எந்த தவறும் இல்லை.. ஜெயம் ரவியிடம் அன்பாகவே ஆர்த்தி இருந்துள்ளார்.. தன்னுடைய அம்மா பேச்சை கேட்டு நடந்து கொண்டிருக்கிறாரே தவிர, தன்னிச்சையாக எதுவுமே ஜெயம் ரவிக்கு எதிராக செய்யவில்லை.

கெனிஷாவுடன் திருமணத்துக்கு ஜெயம் ரவி வந்தாலும், இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை.. ஐசரி மகள் திருமணத்துக்கு ஒன்றாக வந்தார்கள் என்பதற்காக இதனை தவறாக பேசமுடியாது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+