ஆண்ட்டியால் வந்தது எல்லாம்.. முதல் கேள்வி இதுதான்.. 10வது படிக்கும்போதா? அஞ்சலிக்கு அப்ளாஸ்: பிரபலம்
சென்னை: தன்னுடைய முதல் படத்திலேயே, அதுவும் ஷூட்டிங்கின்போதே, ஒட்டுமொத்த யூனிட்டின் கைதட்டலையும் பெற்றவர் நடிகை அஞ்சலி என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு கூறியிருக்கிறார். அத்துடன் அஞ்சலி எப்படி சினிமா துறைக்கு நடிக்க வந்தார் என்பது குறித்தும், விரிவாக கூறியிருக்கிறார்.
Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த செய்யாறு பாலு, அஞ்சலி முதல் படம் அறிமுகமானது பற்றி சொல்லும்போது, "ஒரு நடிகைக்கு முதல் படமே, பெயர் சொல்லக்கூடிய படமாக அமைவது மிகப்பெரிய அதிர்ஷ்டம்.. சாவித்ரி போல ஒருசிலருக்குதான் இப்படி அமையும்..

அது விருது வாங்கக்கூடிய திரைப்படமாக இருக்கணும்.. ஹீரோயினுக்கும், நடிப்புக்கும் ஸ்கோப் உள்ள படமாகவும் இருக்கணும்.. அந்தவகையில் தன்னுடைய முதல் படத்திலேயே ஸ்கோர் செய்தவர் அஞ்சலி.. இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி..
சென்னை நோக்கி பயணம்
அஞ்சலிக்கு 2 சகோதரர்கள், 1 சகோதரி இருக்கிறார்கள்.. இவர்கள் அனைவருடனும் அஞ்சலி, 8வது வரை படித்துவிட்டு, பிறகு அவருடைய சித்தி வளர்ப்பில் சென்னையை நோக்கி வந்துவிட்டார். இவர்களது பயணம் சினிமாவுக்கா? அல்லது மாடலிங் துறைக்கா? என தெரியவில்லை. ஆனால், சென்னையில் இருந்து வாழ்க்கை துவங்குகிறது.
வடபழனியில் ஒரு பிரபல பள்ளியில் அஞ்சலி படிச்சாங்க.. 10வது படிக்கும்போதுதான், "கற்றது தமிழ்" படத்துக்காக ராம், ஹீரோயினை தேடி கொண்டிருந்தார். அது அவரது முதல் படம். கிறிஸ்தவ கல்லூரியில் தமிழ் படித்த பட்டதாரி டைரக்டர் ராம். தமிழ் படித்தால், சமுதாயத்தில் என்ன மரியாதை? என்பதுதான் படத்தின் கதை.. தன்னுடைய சொந்த கதையையே, படமாக எடுத்தார்.
ஹீரோயினுக்கு தேடியலைந்து
ஜீவாதான் படத்துக்கு ஹீரோ என்பது முடிவாகிவிட்டது. ஆனால், ஹீரோயினுக்காக பல இடங்களில் தேடியலைந்தார். சில மாடலிங் பெண்களின் போட்டோக்களையும் ஜீவா காண்பித்தும், ராமுக்கு பிடிக்கவில்லை.. பள்ளியின் இறுதிப்படிப்பை முடிக்கக்கூடிய பெண்ணாக, ஹீரோயின் இருக்க வேண்டும் என்பதால்தான், படத்திற்கு தகுந்த கதாநாயகி கிடைக்கவில்லையாம்.. தமிழ்நாட்டில் அப்படி யாருமே பள்ளி இறுதிப்படிப்பு பெண்களை நடிக்க விடமாட்டார்கள் என்று பலரும் ராமிடம் சொல்லி உள்ளார்கள்..
எனினும் ராம் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று முயற்சித்தார்.. அப்படித்தான் வடபழனியிலுள்ள பள்ளிக்கும் வந்தார்.. அஞ்சலியை பார்த்ததுமே பிடித்துவிட்டது. ஆனால், படிக்கும் பெண்ணிடம் எப்படி நடிப்பதை பற்றி கேட்பது என்று தயங்கிய ராம், அவரது வீட்டு முகவரி பெற்று, சித்தியிடம் பேசுகிறார்..
தயங்கிய சித்தி
கதையை சொல்லி அனுமதி கேட்கிறார்.. ஆனாலும் சித்தி தயங்கியபடி, "பள்ளி படித்து கொண்டிருக்கிறாள், ஆபாசமாக எதுவும் காட்டிடாதீங்க" என்று கூறியிருக்கிறார்,.
அதற்கு ராம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைதான், அப்படி எதுவுமே தவறாக இருக்காது" என்று உறுதி தந்துள்ளார்.. பிறகு, கற்றது தமிழ் படம் ஷூட்டிங் ஆரம்பமானது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு சிறந்த நடிப்பை அஞ்சலி வெளிப்படுத்தினார்.. பெரும்பாலும் அதில், சிங்கிள் டேக்கிலேயே ஷாட்களை ஓகே செய்திருந்தார்.. பிலிம் இன்ஸ்டியூயூடிட்டில் படித்த நடிகை போலவே நடித்திருந்தார்.. இதனால் மொத்த யூனிட்டே கைதட்டி அஞ்சலியை பாராட்டியது" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications