இன்ஷியல் நடிகைக்கு பெயர் வந்தது இப்படித்தான்.. நடிகை கே.ஆர். விஜயா விடாமல் நடிப்பது இவருக்காக? வாவ்
சென்னை: "கல்யாணத்துக்கப்புறம் நடிக்க வேணாம்னுதான் இருந்தேன்.. எங்க வீட்டுக்காரர்தான், வீட்டிலேயே இருந்தா சோம்பேறியாயிடுவேன்னு சொல்லி என்னை திரும்ப நடிக்க அனுப்பிட்டாரு. "நீ சாகுற வரைக்கும் நடிக்கணும், ரொம்ப சந்தோஷமா இருக்கணும். உன்னால முடியும் வரைக்கும் நடிச்சிட்டு இருக்கணும்"னு சொன்னாரு" என பழம்பெரும் நடிகை கேஆர் விஜயா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சிட்டி பாக்ஸ் மீடியா என்ற யூடியூப் சேனலுக்கு தந்திருந்த பேட்டியில் கே.ஆர். விஜயா சொல்லும்போது, "என் வீட்டுல 5 பொண்ணுங்க.. நான்தான் மூத்த பொண்ணு.. அதனால் என் தலையிலதான் எல்லா பொறுப்பும் விழுந்தது.

என் கடைசி தங்கச்சி ரொம்ப ஜாலியா இருப்பா.. ஒருமுறை அவளுக்கு உடம்பு முடியாம போயிருச்சு.. கிட்டத்தட்ட அவள் இறந்துட்டான்னே எல்லாரும் முடிவு பண்ணிட்டோம். அந்த நேரத்துல நான் கோவில்ல பூஜை பண்ணிட்டு, பால் எடுத்துட்டு வந்து அவளுக்கு தந்தேன். அதுக்கப்பறம் அவள் பொழச்சிக்கிட்டாள். இது என்னால மறக்க முடியாத சம்பவம்.
10 வருடத்தில் 100 படங்கள்
தெய்வநாயகி. என்பதுதான் என்னுடைய பெயர்.. அப்பா, அம்மா பெயரை இன்ஷியலாக வைத்து, கே.ஆர். விஜயா என்று பெயரை மாற்றியது நடிகவேள் எம்ஆர் ராதா அவர்கள்தான்.
நான் முதல் படம் பண்ணும்போது எனக்கு 14, 15 வயசு இருக்கும்.. எல்லாரும் சின்ன பிள்ளைன்னு எனக்கு நடிப்பு சொல்லி தந்தாங்க.. கல்யாணத்துக்கப்புறம் நடிக்க வேணாம்னுதான் இருந்தேன்.. எங்க வீட்டுக்காரர்தான், வீட்டிலேயே இருந்தா சோம்பேறியாயிடுவேன்னு சொல்லி என்னை திரும்ப நடிக்க அனுப்பிட்டாரு. "நீ சாகுற வரைக்கும் நடிக்கணும், ரொம்ப சந்தோஷமா இருக்கணும். உன்னால முடியும் வரைக்கும் நடிச்சிட்டு இருக்கணும்"னு சொன்னாரு
சினிமாவுக்கு வந்த 10 வருஷத்துலயே 100 படம் நடிச்சிட்டேன். நடிக்கணும், சாப்பிடணும், தூங்கணும் இதை தவிர வேற எதுவுமே தெரியாது.. இப்போதுவரையுமே எனக்கு வேற எதுவுமே தெரியாது. ஷூட்டிங்கை தவிர, யார்கிட்டயாவது கதை பேசக்கூட தெரியாது. வீட்டிலேயே ஸ்விம்மிங் பூல், தியேட்டர் எல்லாமே இருந்தால், வெளியே போக வேண்டிய தேவை இல்லை.. அப்படியே ஏதாவது எனக்கு வேணும்னா என் வீட்டுக்காரர் என்னை கூட்டிட்டு போவாரு" என்றெல்லாம் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
ஸ்பென்சர் பில்டிங் உரிமையாளர்
சமீபத்தில், Globe 360 என்ற யூடியூப் சேனலில், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தந்திருந்த பேட்டியில், ஷுட்டிங்கிற்கு தன்னுடைய சொந்த விமானத்திலேயே கேஆர் விஜயாவை அழைத்து வந்து, விமானத்திலேயே திரும்ப அழைத்து செல்வார் வேலாயுதம். தொழிலதிபர்கள்: காரணம், கேஆர் விஜயா, வேலாயுதத்துக்கு மிகவும் முக்கியம்..
விஐபி விருந்து இவர்கள் வீட்டில் தடபுடலாக இருக்கும். பல நாடுகளிலிருந்து வரும் தொழிலதிபர்கள், பண்ணையார்கள், விஐபிகள் என பலரும் வேலாயுதம் பங்களாவில் தினமும் நிறைந்திருப்பார்கள்.." என்று சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications