பூர்ணிமாவுக்கு கல்யாணம் இப்படித்தான் நடந்தது.. பாக்யராஜ்ஜின் முதல் மனைவி கோமாவில் இருக்க..: பிரபலம்
சென்னை: நடிகை பூர்ணிமாவை, பாக்யராஜ் எப்படி திருமணம் செய்தார் என்பது குறித்து, மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.. சினிமாவை பொறுத்தவரை, திருமணத்துக்கு முன்பு எப்படி இருந்தார்களோ தெரியாது, திருமணத்துக்கு பிறகு எப்படி இருக்கிறீர்கள் என்பதைத்தான் பார்ப்பார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தனித்துவமான திரைக்கதைக்காக இயக்குனராகவும், குரல் மற்றும் மொழி மூலம் நடிகராகவும், தமிழக மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் கே.பாக்யராஜ்.. நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்தது குறித்து பாக்யராஜ் பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கிறார்.. அதேபோல, இவர்களது திருமணம் எப்படி நடந்தது என்று, பல்வேறு பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பூர்ணிமா - பிரவீனாவின் நல்ல நட்பு
அதாவது, டார்லிங் டார்லிங் டார்லிங் ஷூட்டிங்கின்போது, டைரக்டர் என்ற முறையில் அடிக்கடி பாக்யராஜ் வீட்டிற்கு பூர்ணிமா சென்றிருக்கிறாராம்.. அப்போது, பாக்யராஜின் முதல் மனைவி பிரவீனாவுக்கும், பூர்ணிமாவுக்கும் இடையே நல்ல நட்பு இருந்ததாம்..
பிறகு பிரவீனாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகவும், இதனால் பாக்யராஜ் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். பாக்யராஜின் அண்ணன் பாக்யராஜை மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கொண்டிருந்தாலும், பிரவீனாவை மறக்க முடியாத நிலையில் இருந்திருக்கிறார் பாக்யராஜ்.
பெற்றோர் சம்மதம்
பிறகு ஒரு கட்டத்தில் தன்னுடைய வாழ்க்கை பாதை மாறி போய்விடக்கூடாது என பயந்து, திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தாராம். ஷூட்டிங்கில் பூர்ணிமாவை சந்தித்த பாக்யராஜுக்கு அவருடைய எளிமை பிடித்து போகவும், அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்துள்ளார்.. தன்னுடைய விருப்பத்தை பூர்ணிமாவிடம் சொல்லவும், தனது அம்மாவிடம் பேசுங்கள் என்று கூறிவிட்டாராம். இதற்கு பிறகே இரு வீட்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றதாம்.
இந்நிலையில், Reflect LifeStyle என்ற யூடியூப் சேனலில் சமீபத்தில் பேசியிருந்த சபிதா ஜோசப், பூர்ணிமா பாக்யராஜூக்கு எப்படி திருமணம் நடந்தது என்பது குறித்து பேசியிருக்கிறார்.. அதில், "பாக்யராஜுக்கு திருமணம் நடந்ததே ஒரு விபத்து போலத்தான்.. வேறு ஒரு நடிகையைதான் பாக்யராஜ் திருமணம் செய்திருந்தார்.. அந்த நடிகைதான் பாக்யராஜூக்கு சோறு போட்டு, கவனித்து வந்தவர்.. பாக்யராஜூக்கு படங்களில் நடித்து தந்து, பல்வேறு சலுகைகளையும் தந்திருந்தார் அந்த நடிகை.
நடிகையின் தயவுதான் காரணம்
அந்த நடிகையின் ஆதரவால்தான், பாக்யராஜ் அந்த காலகட்டத்தில் வளர்ந்து வந்தார்.. அந்த நடிகையின் தாய்மொழி தெலுங்கு என்பதால், அவருக்கு தமிழ் படங்களில் நடிப்பதற்காக, தமிழ் கற்று கொடுத்தார் பாக்யராஜ்.. சில படங்களில் இணைந்தும் நடித்திருந்தார்.. அதன்பிறகுதான் அந்த நடிகையையே திருமணம் செய்து கொண்டார். பிறகு அந்த நடிகைக்கு உடல்நிலை சரியில்லாமல், போய்விட்டது.
அந்த சமயத்தில்தான், பாக்கியராஜின், "டார்லிங் டார்லிங் டார்லிங்" ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.. மனைவி அங்கு உடல்நிலையில்லாமல், படுத்திருந்த சமயத்தில்தான், பாக்யராஜூக்கு பூர்ணிமா மீது காதல் வந்தது.. அப்போது அவர் கோமாவில் இருந்தார்.. அவர் கோமாவில் இருக்கும்போது, இங்கே பூர்ணிமாவை காதலித்து கொண்டிருந்தார். இதுதான் சினிமா உலகம்.
எம்ஜிஆர் நடத்தி வைத்த திருமணம்
அதற்கு பிறகே பூர்ணிமாவுடன் திருமணம் நடைபெற்றது., முதல் மனைவிக்கு துரோகம் பண்ணினது மாதிரியான சூழ்நிலை என்றுதான், அதை அப்போது சொல்வார்கள். சினிமாவை பொறுத்தவரை, திருமணத்துக்கு முன்பு எப்படி இருந்தார்களோ தெரியாது, திருமணத்துக்கு பிறகு எப்படி இருக்கிறீர்கள் என்பதைத்தான் பார்ப்பார்கள்.
இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் நடிகை பிரவீனா இருவரின் திருமணத்தை எம்ஜிஆர்தான் நடத்தி வைத்தார். அதேபோல, பாக்யராஜ் பூர்ணிமா திருமணத்தையும் எம்ஜிஆர்தான் நடத்தி வைத்தார்" என்று கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications